Patta Types Tamilnadu
எட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம். நீங்களும் ஏமாற வாய்ப்பு உள்ளது* ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா. பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்! பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும். அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!! யு.டி.ஆர் பட்டா: ******************************************** யூ.டிஆர்.பட்டா மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து