Patta Chitta Adangal A Register Documents
அ பதிவேட்டை புரிந்து கொள்வது அவசியம்...
அசையா சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பாக பட்டா சிட்டா அடங்கல் அ பதிவேடு என வருவாய்துறை பல்வேறு ஆவணங்களை பராமரித்து வருகிறது...
#பட்டா
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை காட்டும் ஆவணம் ஆகும்.மேலும் ஊர் மாவட்டத்தின் எல்லைபகுதி உரிமையாளரின் பெயர் நன்செய் புன்செய் நிலம் பரப்பு மற்றும் தீர்வை விவரங்களும் தெளிவாக இருக்கும்...
#சிட்டா
சிட்டா என்பது ஒரு தனிநபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று அரசாங்கம் வைத்து இருக்கும் பதிவேடு ஆகும்..பட்டாவில் உள்ள அனைத்து விவரங்களும் சிட்டாவில் இருக்கும்..
#அடங்கல்
அடங்கல் என்பது ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு ஆகும்.
குறிப்பிட்ட சர்வே எண்ணுகுரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது என்கிற விவரங்கள் இருக்கும்..
அ பதிவேடு என்பது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஆவணங்களின் ஒட்டு மொத்த விவரங்களும் அடங்கியுள்ள ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்..
ஒரு சொத்து எப்போது யாரிடம் இருந்து யார் பெயருக்கு மாறினாலும் அது குறித்து இந்த ஆவணங்களி்ல் உரிய திருத்தம் செய்யபடும்.
முழுமையாக முத்திரைதீர்வை செலுத்தி பத்திபதிவு செய்தாலும் பட்டா சிட்டா அடங்கள் ஆவணங்களில் உள்ள பெயர் மட்டுமே உரிமையாளரை அடையாளம் காட்டும். வி.எ.ஓ என்னும் கிராம நிர்வாக அலுவலர் பயன்பாட்டில் இருந்தாலும் வட்டாச்சியர் ஒப்புதல் இன்றி யாரும் எந்த மாற்றத்தையூம் செய்து விட முடியாது..
சொத்து பரிமாற்றத்தில் முக்கிய ஆவணமாகும். பட்டா சிட்டா நிலத்தின் சர்வே எண் அளவு உரிமையாளர் பெயர் பயன்பாடு வரி ஆகிய விவரங்கள் அ பதிவேட்டிலும் இருக்கிறதா என்று பார்த்து சொத்து வாங்குவது சிறந்தது..
பா.வெ.
Comments
Post a Comment