Posts

Showing posts from January, 2024

How to see Ayodhya Ram Mandir. Rameswaram to Ayodhya Train

குறைந்த செலவில் அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள் கவனத்திற்கு. ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது .  *ரயில் எண் 22613* RMM AYC சரியாக புதன் கிழமை காலை 9 மணிக்கு செல்கிறது.  *அயோத்தியா தாம்* என்ற ரயில் நிலையம் இறங்கவும் அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 km மீண்டும் வர வேண்டும். அயோத்தியா தாம் இறங்கி நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்து தான் வர வேண்டும். அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், *அனுமான் காரி* என்னும் அனுமான் கோட்டை காவலாக  இருக்கும் கோவிலை அடையலாம். 50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலை உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி  நுழைவு வாயிலை அடையலாம். பெரிய luggage bag இருந்தால் போலீஸ் checking  முன்பே வலது பாகத்தில் locker  அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல் , watch தவிர) வைத்து செல்லலாம்.  உள்ளே சென்றவுடன் இலவச  பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிறிய bag, hand bag, இடுப்பு  belt, mobile

அம்மாவின் வாசனை. கவிதை ஆசிரியர் கனிமொழி MP. DMK. இசை = இளையராஜா. பாடியவர் = பவதாரிணி.

அம்மாவின் வாசனை.  கவிதை ஆசிரியர்  கனிமொழி MP. DMK.  இசை = இளையராஜா.  பாடியவர் = பவதாரிணி.  அம்மாவின் வாசனை...  என் அம்மாவின் வாசனை...  அது சந்தனம் இல்லை...  ஜவ்வாதோ...  இப்போது அழகான புட்டிகளில் விற்கும் வாசனை திரவியமோ...  எதைப்போலும் இல்லாத புது மணம்.  அம்மாவின் வாசனை...  என் அம்மாவின் வாசனை...  சின்ன வயதில் அவளைக் கட்டிக் கொண்டு தூங்கிய போது....  சின்ன வயதில் அவளைக் கட்டிக் கொண்டு தூங்கிய போது.... மெல்லியதாய் வந்து மூக்கைத் தழுவும்...  அவள் அவிழ்த்துப் போட்ட சேலையைக் சுற்றிக் கொண்டு திரிந்த போது....  அவளின் வாசனையை பூசிக் கொண்டதாய் தோன்றும்....  முதல் மழையின் மண் வாடை போல் மூச்சு முட்ட நிறுத்தி வைத்துக் கொள்ளத் தூண்டும்....  அம்மாவின் வாசனை...  என் அம்மாவின் வாசனை...  எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு மருந்தாய்... மருந்தாய்....  அவள் மடியில் தலை வைத்து தூங்கிய போதெல்லாம்....  பாதுகாப்பாய்....  என்னைத் தழுவிய மணம்....  அவள் என்பதே... ஏ.... ஏ...  அவள் என்பதே... அதுவும் சேர்ந்து தான்... (திமுக தலைவர் மு கருணாநிதி???)  வளர்ந்து விட்ட மனதின் சுவர்கள்...  அவளைக் கட்டிக் கொள்ள விடாத போதும்....  ஆ

உந்தீ பற திருவாசகம் உந்தீபற

14. திருவாசகம்-திருவுந்தியார் பண் : பாடல் எண் : 1 வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.  பொழிப்புரை : இறைவனது வில் வளைந்தது; வளைதலும் போர் மூண்டது; மூளுதலும் முப்புரங்களும் ஒருமிக்க வெந்து நீறாயின. அந்தத் திரிபுரத்தை அழித்த நற் செய்தியை நினைத்தால் வியக்கத்தக்க தாக இருக்கிறது என்று உந்தீபறப்பாயாக! குறிப்புரை : `வில்` என்பது. ஈற்றில் உகரம் பெற்று வந்தது. `வில் சிவ பெருமானுடையது` என்பதும், `பூசல் (போர்) அசுரருடையது என்பதும் ஆற்றலான் விளங்கின. உளைந்தன - துயருற்றன. ``முப்புரம்`` என்றது இரட்டுற மொழிதலாய் முன்னர் அதன்கண் வாழ்வார் மேல் நின்று, உளைதல் வினையோடும், பின்னர் முப்புரத்தின் மேலதேயாய் வேதல் வினையோடும் இயைந்தது. ஒருங்கு - ஒருசேர. ``உடன்`` என்றது. `நொடியில்` என விரைவு குறித்தவாறு. ``வெந்த வாறு`` என்றதன்பின், `பாடி` என்பது வருவிக்க. இதனுள் இனிவரும் திருப்பாட்டுக்களிலும் வேண்டு மிடங்களில் இவ்வாறே இதனை வருவித்து முடிக்க. பண் : பாடல் எண் : 2 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற.  பொழிப்புரை : இறை

ThirukKural Podhu Noola திருக்குறள் பொது நூலா...

திருக்குறள் பொது நூலா? ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை   திருக்குறள் பொது நூலா?   சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை;; திருநெல்வேலி பேட்டை                                                    தோற்றுவாய் விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் சம்மதிக்கலாம். 76272732_2338376816475876_4896147968798752768_n74305681_2338376606475897_3402800218075299840_n75407752_2338376409809250_3112307145777872896_n விஞ்ஞானிகளுக்குப் புகழுண்டு. காணாதவற்றையெல்லாம் அவரறிவு கண்டு வருகிறது. ஆயினும் அவர் நூற்றுக்கணக்கானவரே. ஆனால் அவர் கண்ட அற்புதங்களை அனுபவிப்பவரோ கோடானு கோடியர். எனினும், ஆக்கும் அற