Posts

Showing posts from February, 2024

Mistake of Fact CRPC 157(1) and Final Report

*ஒரு குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு மேல் விசாரணைக்காக அமர்வு நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டதற்கு பின்னர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை (Further Investigation) நடத்தும்படி, காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அமர்வு நீதிமன்றத்தில் புகார்தாரர் (Defacto Complainant) கோர முடியும்* நீதிமன்றங்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், காவல்துறையினருக்கு தான் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமே தவிர, புகார்தாரர் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்வது தவறாகும். *உச்சநீதிமன்றம் "ரீட்டாநாக் Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-2010-SC-CRL-401"* என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ள சங்கதிகளை வைத்து இவ்வாறு புகார்தாரர் மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை தள்ளுபடி செய்கின்றன.  ஆனால் மேற்கண்ட "ரீட்டாநாக்" வழக்கு தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் 2013 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் *"வினைய் தியாகி Vs இஷ்ரத்

Avvai Shanmugam Pillai Manonmaneeyam Sundaram Pillai Boys Drama Company Kannusamy Pillai related news

இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா? சினிமா உலகம் தோன்றுவதற்கு முன் நாடகக் கலையே பிரதானமாக இருந்த காலகட்டம் அது. இன்று இருப்பது போல் ஷூட்டிங் நடத்தி, எடிட் செய்து வெளியிடும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டம். ஆன் தி ஸ்பாட்டிலேயே மேடையில் தோன்றி வசனங்களை மறக்காமல் சிங்கிள் டேக்கிலேயே பாடி நடிக்க வேண்டும். பக்கவாத்தியம் தனி. இவ்வாறு நாடகக் கலைகளில் கைதேர்ந்தவர்கள்தான் பின்னாளில் தமிழ் சினிமாவினை ஆண்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி., உள்ளிட்ட நடிகர்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர்தான் டி.கே. சண்முகம். டி.கே. சண்முகம் என்றால் பலருக்கும் தெரியாது. அவ்வை சண்முகம் என்றால் இந்தத் தலைமுறைக்குத் தெரியும். ஏனெனில் கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் இவரின் பெயரிலிலேயே எடுக்கப்பட்டது. மேலும் சென்னையின் பிரதான சாலை ஒன்றும் இவர் பெயரிலியே அமைந்துள்ளது. அப்படி என்ன செய்தார் நாடகத் துறைக்கு என்கிறீர்களா? தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்;  நாடக உலகிலும், திரை உலகிலும் பிரபல நட்சத்திரங்களின் குருவாகத் திகழ்ந்தவர்; "அண்

Power of Attorney full details

பவர் ஆப் அட்டார்னி பத்திரம் (இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 33)  பவர் ஆப் அட்டார்னி பத்திரம் பவர் ஆப் அட்டார்னி பத்திரம் என்னும் பவர் பத்திரங்களைப் பற்றி இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) ல் பிரிவு 33-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வகைப் பவர் பத்திரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் பத்திரம் என்று இந்த பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன.  அதன் உட்பிரிவுகள் 33(1), 33(2), 33(3) & 33(4). ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை எழுதிக் கொடுப்பவரே கையெழுத்துச் செய்ய வேண்டும். அவரே நேரில் பதிவு அதிகாரி முன்பு சென்று, அதை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டு அதை பதிவு செய்து கொடுக்க வேண்டும். சில வேளைகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும். அப்போது, அவருக்காக அவரின் ஏஜென்ட் அந்த வேலையைச் செய்யும்படி அவர் ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுப்பார். அதையே பவர் பத்திரம் என்று இந்த சட்டப் பிரிவு சொல்கிறது. பிரிவு 33(1)(ஏ):  (இந்தியாவில் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்): இந்தியாவுக்குள் வசிப்பவர் இப்படி ஒரு பவர் பத்திரம்

Case & Counter Case. Mistake of Fact. Mistake of Law.

Mistake of Fact or Law Case in Counter :- பிழை வழக்கு ( MF) எதர் வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு- சந்துரு,கரூர். பிழை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் PSO-658 to 669 காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்,குற்றவியல் நீதித்துறை நடுவர் அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெளிவாக கூறுகிறது. PSO-660 முறையாக புகார்தாரர்க்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.அதனை முதல் தகவல் அறிக்கையுடன் இணைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். PSO-661 இறுதி அறிக்கை( RCS)களை வட்ட ஆய்வாளர் மூலமாக (I.O.) விசாரணை அதிகாரி அனுப்ப வேண்டும்.அதன் மீது ஆணை பிறப்பிக்கப்பட்டால் குறிப்புரை எழுதித் தாமதமின்றி குற்றவியல் நடுவர்க்கு அனுப்ப வேண்டும்.மேற்கொண்டு விசாரணை செய்யுமாறு ஆய்வாளர் நிலைய அலுவலர்க்கு அணையிடலாம் அல்லது தானே விசாரணை செய்யலாம்.PSO-662 விசாரணை அலுவலர்(IO),ஒரு வழக்கை திட்டமிட்ட பொய்யென்றோ வன்ம்மான பொய்யென்றோ அறிக்கை செய்கையில்,அவர்,இறுதி அறிக்கையில் வாதிக்கு எதிராக நடவடிக்கைவெடுக்க உத்தேசிக்கிறாரா இல்லையா என்றும்,அப்படி உத்தேசிக்காவிட்டால் அவ்வாறு செய்யாத்தன் காரணங்களை கூற வேண்டும்.PS