பல நல்ல தகவல்கள்
பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்....... 1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும். 2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. 3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும். 4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. 5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. 6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும். 7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது. 8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. 9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. 10.)நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது. 11.)காலையில் வெறும்