Posts

Showing posts from November, 2019

சமணர் புத்தர் மதம் தோற்கும். ஏன்?

சமணர் மதம் கேவலம் ஏன்? மூக்கில் துணி. அம்மணம். நடக்கும் போது வீசி விசிறி நடப்பது. உயிர்க் கொலை கூடாதாம். இன்று குளிக்கும் அறையில் 5 சிலந்திகள் பார்த்தேன். விட்டால் சிலந்தி வலைகள் மிக மிக பெரியதாகும். அறை பாழாகும். குளிக்க இயலாது. கொன்றேன் 5 சிலந்திகளை. கொல்லாமல் வாழ இயலாது. நீ வாழு இல்லை நான் வாழுகிறேன். எந்த வீடுகளிலும் சிலந்தி வலை, எறும்பு, கொசு, ஈ வராமல் போகாது. மிக சிறிய உயிர்கள். ஆன்மா இருக்கிறதோ இல்லையோ. விட்டால் நம்மை காலி செய்யும். எறும்பு காதில் புகும். எறும்பு உணவை அழிக்கும். எலி நம் வீட்டில் பல பொருட்களை நாசம் செய்யும். ஈ கொசு வும் பல நோய்களை தரும். வன்முறை இல்லாமல் வாழவே இயலாது. பசுக்கொலை தவிர்க்கலாம் ஆடு கோழி கொல்லாமல் இருக்கலாம். புலால் உணவு தவிர்க்கலாம். உருவம் பெரிதாக பெரிதாக உயிர்க்கொலை பார்க்க கஷ்டம் ஆகவே உள்ளது. துடி துடிக்கும் உயிர். ஆகவே அன்பு பாசம் நேசம் ஈவு இரக்கம் இது எல்லாம் ஓரளவு தான். ரொம்ப அதிகம் ஆனால் நாடு காடு ஆகும். கற்கால மனிதன் போல கடவுள் கொடுத்த படியே வாழ வேண்டும். அங்கும் பயம் தான். நாம் கொல்லவில்லை என்றாலும் நம்மளை கொல்ல புலி சிங்கம் வரும். ஆகவே சமணம

Sankar Sankara Sa Ankh Ka Ra Tamil words formed in Egypt 7000 BC 5000BC 3000BC

Image
சங்கு கா ரா சங்க் கா ராயன் சங்கரா சங்கர் சங்கரன் சங்கு அரையன் (சங்கு விற்பனை ஏற்றுமதி செய்து பணக்காரர் ஆன மன்னர் தமிழ் அரசர் சங்கு அறுத்த நக்கீரர் குலம் சைவ வேளாளர் முதலியார் அமைச்சர் குறு நில மன்னர் சாதி) சங்கரையன் சங்காரம் சங்கம் இந்தியர்களின் அனைத்து சங் வார்த்தைகளும் எகிப்து தமிழ் சொற்கள். சங்கு என்றாலே சிவன் பெயர். சங்கரன் என்றாலும் சிவன் தான்.

Parking Car at Hotel Safety

நமது வண்டிகளை திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்திவிட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும், ரசீதுகளில் "வண்டி தொலைந்தால், அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது" போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும். ஆகவே, ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால், அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும். இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில் நேற்றைய முன்தினம் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்து உள்ளது. வழக்கு என்னவென்றால், வாதிகள் இருவர், 1998ஆம் ஆண்டு தங்களது Maruti Zen காரில் ஒரு  ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.  பிறகு தங்களது காரின் சாவியினை கொடுத்து வாலட் பார்க்கிங் செய்துள்ளனர்.  அதன் பின்பாக,  நிறுத்தப்பட்ட கார் திருடப்பட்டு விடுகிறது. ஹோட்டல் நபர்களிடம் கேட்டதற்கு, பார்க்கிங் ரசீதில் கொடுக்கப்பட்ட படி, "In the event of any loss, theft or damage, the management shall not be held responsible for the same and the guest shall have no claim whatsoever against the management." திருடு போன காருக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியா

Land grabbing how to avoid

*_சட்டம் தெளிவோம்_*  🔴 *உங்கள் நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டால்… முக்கியமாக செய்ய வேண்டிய 16 காரியங்கள்…* உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும்  கூர்மையாக சரிபார்த்து அதில் ஏதாவது குறை இருந்தால், வேறு ஏதாவது கூடுதல்  ஆவணங்கள் தேவைப்பட்டால், உடனடியாக அதனை நேர் செய்ய செயலாற்ற வேண்டும். அதன்  மூலம் எதிரி தரப்பு ஆவணங்கள் பலமுள்ளவையாக்கப்படுவது தவிர்க்கப்படும். இடம் சமந்தமாக, உள்ளாட்சி வருவாய்,  மின்சாரம், குடிநீர், சாலை, அங்கீகாரம் போன்ற துறைகளில் எதிரி எதனையும்  செயல்படுத்த கூடாது என்று ஆட்சேபனை கடிதம், பதிவுதபாலில் அனுப்பபட  வேண்டும். எதிர் தரப்பினரிடையே இருக்கும் , அல்லது  அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் , சார்பதிவகம், இணையதளம்,  சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்று அந்த ஆவணங்களின்  நகல்களை கைப்பற்றுதல் வேண்டும். எதிர் தரப்பினர் ஆவணங்களை கூர்ந்து படித்து,  எங்கு அவர்கள் ஆவணங்களை திருத்தியோ (அ) நேர் செய்தோ, உருவாக்கி  இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். எதிர் மனுதாரர் நம்முடைய நிலத்தை  ஆக்கிரமிக்க காரணமான MOTIVE – யை கண்டுப்பிடிக்க வேண்டும். நாம் ப

Document registration = how to do it carefully

*#கிரைய_பத்திரம்_பதியும்_போது_கவனிக்க_வேண்டிய_16_விஷயங்கள்* 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க

வரன் முறை படுத்துதல் மனைகள்

அங்கீகாரம் பெற்ற மனைகள் எவை? எவை? வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் என்பது என்னவென்றால் இந்த மனை பிரிவை இந்த ஊரோடு சேர்த்து கொள்கிறேன் என்று அர்த்தம்.   ஊரோடு சேர்ப்பது என்றால் என்ன ?   நீங்கள் வயகாட்டுக்கு நடுவிலோ, ஒரு மலை உச்சியிலோ வீட்டை கட்டிவிட்டு ,  அங்கு எனக்கு குடிநீர் , கரண்ட், ரோடு,தபால் எல்லாம் என்னை தேடி  வரவேண்டும். எனவே இவையெல்லாம் உருவாக்கி கொடுங்கள் என்று நீங்கள் கேட்டால்  அந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு எவ்வளவு அசௌகர்யமோ அதுபோல, ஒவ்வொருவரும்  அவரவர் இஷ்டத்துக்கு குடியிருப்பு மனைகளை கட்டிக்கொண்டால் ஊரே ஒழுங்கற்று  போய்விடும்.   குடியிருப்பு வீடுகளை எங்கு கட்ட கூடாது, எங்கு கட்ட வேண்டும் என்பதை, ஒழுங்குமுறைப்படுத்த ஒரு அங்கீகார அமைப்பு தேவைபடுகிறது.   விமான நிலையம் அருகில் இவ்வளவு உயரம் தான் கட்டிட அனுமதி, கடற்கரையில் 500  மீட்டருக்கு தள்ளி தான் வீடு கட்டி இருக்க வேண்டும். இந்த பகுதியில் தான்  தொழிற்சாலைகள் வர வேண்டும். இந்த பகுதியில் விவசாயம் நடக்க வேண்டும் , இந்த  பகுதியில் தான் கல்விக்கூடம் கட்டப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியையும்  ஒதுக்கி முன்கூட்டியே ஒரு மாஸ்டர் பிளானை ப