Thiru Aalangadu Temple Kaali Temple at the back side Bad Omen. Nimiththangal.
திருவாலங்காடு கோயில் அதன் பின்புறம் உள்ள காளி கோயில் இரண்டும் சிலமுறை நான் கண்டு உள்ளேன். மனைவி முத்து லட்சுமி இறக்கும் 1 மாதத்துக்கு முன்பு அங்கு சென்ற போது காளி கோயிலில் வேறு ஒரு குடும்பம் பூஜைப் பொருள்களை ஐயரிடம் கொடுத்த போது இருவர் கை தவறி பூஜைப் பொருள்கள் அனைத்தும் கீழே விழுந்து சிதறின. அப்போது நான் நினைத்தேன். கடவுள் சிவன் மற்றும் காளி ஏதோ அபசகுனம் என்று உணர்த்துகிறார்கள் என்று மனைவி முத்து லட்சுமி மற்றும் மகள் சூர்யவேலா வயது 10 வகுப்பு 5 இருவரிடமும் சொன்னேன். அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகஸ்ட் 14 மகள் பிறந்தநாள் அன்று அங்கு சென்றோம். 2016 செப்டம்பர் 19 மனைவி முத்து லட்சுமி காணாமல் போய் 2017 ஜனவரி 17 ஆலப்புழா கேரளா ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்தார். 😢😢😢😢😢 நடந்த உண்மை....2016 வருடத்தில் கடவுள் காட்டிய இன்னொரு அபசகுனம் நாங்கள் மூவரும் காரில் சென்னை செல்லும் போது வாலாஜா டோல்கேட் அருகில் ஒரு குரங்கு 🐒 எனது செவர்லே பீட் டீசல் காரில் பின் டயரில் அடிபட்டு ஓடியது. இறந்ததா காயம் மட்டும் பட்டதா தெரியாது. 2016 வருடத்தில் சின்ன நாய் ஒன்றும் காரில் அடிபட்டு செத்தது...