தற்கொலை செய்து கொள்பவர்கள் விஷயத்தில் 5 ஆம் இடத்தையும், சந்திரனையும் கவனிக்க வேண்டும்.

மாரக ஸ்தானங்கள்
   ************************* 
லக்குணத்திற்கு எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் ஆகும். இந்த இடத்தை வைத்து தான் ஒருவருக்கு ஆயுள் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
எட்டாம் அதிபதி
சனி
எட்டாம் இடம் ,
லக்குணாதிபதி
இந்த நான்கும் கவனிக்க வேண்டும்.
இவர்களை வைத்து தான் ஆயுளை கணிக்க முடியும்.

எட்டாம் வீட்டில் சனி இருந்தால் காரக பாவ நாஸ்தி இல்லை. ஆயுள் தீர்க்கம் தான்.
ஆனால் வறுமை, கஷ்டம் நிறைந்த வாழ்க்கை தான்.

எட்டாம் இடம் மட்டும் அல்ல, அதற்கு எட்டாம் இடமான 3 ஆம் இடமும் ஆயுள் பாதிப்பு தரக்கூடிய இடம் தான். அதனால் தான்
" எட்டாம் இடத்தான் அதற்குகெட்டாம் இடத்தான் திட்டமுடன் கேந்திர திரிகோணம் ஏறினால் ஆயுள் தீர்க்கம்" என்று சொல்வார்கள்.

எட்டாம் அதிபதி விஷயத்தில் சூரியன்- சந்திரர்களுக்கு அஷ்டமாதிபதிய தோஷம் இல்லை என்று சாஸ்திரம் கூறுகிறது.

( இது அனுபவத்தில் சிறிதும் சரிவரவில்லை.
நான் பார்த்த வரையில், அவர்களே அதிக தீமையை செய்கிறார்கள். இது மாதிரி ஆயுள் விஷயத்தில் நிறைய விதிகள் தவறும். கவனமாக கவனிக்க வேண்டும்)

 அஷ்டமாதிபதி திசையில் இருமுறை கண்டங்களை ஏற்படுத்தும் என்றும்,புக்தியில் அளவற்ற நஷ்டங்களை உண்டு பண்ணும்.

ஸ்திர லக்குண ஜாதகர்களுக்கு அஷ்டமாதிபதியே மாரக ஸ்தானதிபதியாக அமைவதால், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்குண ஜாதகர்களுக்கு
எட்டாம் அதிபதி திசை,புக்தியில் அதிக துன்பங்களைத் தரும்.

மேஷம், துலாம் லக்குணத்திற்கு லக்குணாதிபதியே அஷ்டமாதிபதியாக வருவதால்,அவர்களுக்கு மட்டும் அதிக பாதிப்புகளை தராது.

எட்டாம் இடம்,மூன்றாம் இடம் மட்டும் அல்ல,
அவைகளுக்கு விரய ஸ்தானங்களான
2 ஆம் இடமும், 7 ஆம் இடமும் மாரக ஸ்தானங்கள் ஆகும்.
 இதில் 7 ஆம் வீட்டை விட 2 ஆம் வீடே மாரக விஷயத்தில் வலுவானது.

2 ஆம் அதிபதியும், 7 ஆம் அதிபதியும் தமது திசையில் மாரகத்திற்கு உண்டான கண்டங்களை ஏற்படுத்துவார்கள்.

12 லக்குணங்களில் பிறந்தவர்களுக்கும் 2 ஆம் அதிபதியும், 7 ஆம் அதிபதியும் தான் மாரகத்தை செய்யுமா? இல்லை

1) சர லக்குணங்களுக்கு மட்டும் 2 ஆம் அதிபதியும்,7 ஆம் அதிபதியும் உண்மையான மாரகர்கள்.

ஸ்திர லக்குணங்களுக்கு 3 ஆம் அதிபதியும்,
8 ஆம் அதிபதியும் தான் மாரகர்கள்.

உபய லக்குணத்திற்கு 7 ஆம் அதிபதியும் 11 அதிபதியும் உண்மையான மாரகர்கள்.
( அனுபவத்தில் 2,ஆம் அதிபதியும் மாரகம் செய்கிறார்கள்)

சர லக்குணங்கள் எனப்படும்,
மேஷம், கடகம், துலாம், மகரம்,மற்றும்
உபய லக்குணம் எனப்படும் ,
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய 8 லக்குணங்களுக்கும் 2, 7 ஆம் இடங்கள் தான் மாரக ஸ்தானங்கள்.

ஸ்திர லக்குணங்கள் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்குணங்களுக்கு 
3, 8 ஆம் இடங்கள் தான் மாரக ஸ்தானங்கள்.

 மாரகர்கள் விஷயத்தில் பொதுவாக 
2, 7 ஆம் அதிபதிகள் ஜாதகனுக்கு மாரகம் செய்வார்கள்.

4, 7, 5 ஆம் அதிபதிகள் தாயாருக்கு மாரகம் செய்வார்கள்.

5, 11 ஆம் அதிபதிகள் சகோதரர்களுக்கு மாரகம் செய்வார்கள்.

6 ஆம் அதிபதியும், 8 ல் நின்ற ராகு வும் 
தந்தை க்கு மாரகம் செய்வார்கள்.
8 ல் நின்ற ராகு தந்தைக்கு மாரகம் செய்யும்.

( என்னுடைய அனுபவத்தில் 8 ல் உள்ள ராகு திசையில் பலருக்கு தந்தைக்கு மாரகம் செய்ததை பார்த்து உள்ளேன்.
அஷ்டமத்து சனி நடக்கும் போதும் தந்தைக்கு கண்டங்களை ஏற்படுத்தும்.
லக்குணத்திற்கு 9 ல் சனி இருந்தால் தந்தையின் மரணம் வேதனை நிறைந்ததாக இருக்கும்.)

10 ஆம் அதிபதியும், 3 ஆம் அதிபதியும் தந்தைக்கு மாரக ஆதிபத்தியம் உள்ளவர்கள் தான்.
10 ஆம் அதிபதி வலுத்து இருந்து திசை நடத்தினால் தாய், தந்தைக்கு ஆயுள் பாதிப்பு ஏற்படும்.
10 ஆம் இடம் கர்ம ஸ்தானம் அல்லவா
அது மட்டுமல்ல 10 ஆம் இடம் இருவருக்குமே மாரக ஆதிபத்தியம் வருகிறது அல்லவா

தற்கொலை செய்து கொள்பவர்கள் விஷயத்தில் 5 ஆம் இடத்தையும், சந்திரனையும் கவனிக்க வேண்டும்.
ஏனென்றால் ஆயுள் ஸ்தானம் நன்றாக இருந்து , 5 ஆம் இடம் கெட்டு மரணம் அடைந்த நிறைய ஜாதகங்கள் பார்த்து உள்ளேன்.
5 ஆம் இடம் புக்தி அல்லவா, சந்திரன் மனசு காரகன், புத்தி சரியாக இருந்தால் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார் கள்.
அப்புறம் 5 ஆம் இடம் பூர்வ புண்ணியம் அல்லவா, பூர்வ புண்ணியம் கெட்டால் தான் அற்ப ஆயுள்.
தற்கொலை செய்து கொள்பவர்கள் ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி கெட்டு, ஐந்தில் சனி, செவ்வாய் ராகு,கேது போன்ற பாவிகள் சம்பந்தம் ஏற்படும்.

மேலே உள்ளவை எல்லாம் விதிகள் & என்னுடைய அனுபவங்கள். 
மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துகிற மாதிரி, ஆயுள் விஷயத்தில் ஜோதிட விதிகளை அப்படியே பயன்படுத்தி விடாதீர்கள். ஆயுள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு விதி 100% கூட தவறும். அதனால் கவனம் தேவை.
சில ஜாதகத்தில் ஆயுள் சம்பந்தப்பட்ட கணிப்பு மிக சரியாக இருக்கும்.
சில ஜாதகத்தில் அப்படியே தவறும்.
மனிதனின் ஆயுள் இவ்வளவு தான் என்று துல்லியமாக சொல்லும் கணிப்பை இறைவன் மனிதனுக்கு தரவில்லை என்று தான் நினைக்கிறேன்.

                                        Velu Muthusamy

Comments

Post a Comment

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி