பச்சை கற்பூரம்
வீட்டில் பணத்தை ஈர்க்கும் , மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம். பச்சை கற்பூரம் பற்றி தெரியாத சில உண்மைகள்! (இன்று நம் திருமந்திர வகுப்பு அன்பர்களுக்கு அதிஷ்டங்களை ஈர்க்கும் , மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்க கூடிய ஒரு அபூர்வ பொருளை பற்றி என் குருநாதர் மாபெரும் மூலிகை முனிவர் ப்ரமரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் ஸ்வாமிகள் அவர்கள் கூறிய ரகசியங்களை தொகுத்து விரிவாக பகிர்கிறேன். ஆழ்ந்து கற்று கொள்ளுங்கள்.) பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெர...