Land grabbing how to avoid

*_சட்டம் தெளிவோம்_* 

🔴 *உங்கள் நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டால்… முக்கியமாக செய்ய வேண்டிய 16 காரியங்கள்…*

உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும்  கூர்மையாக சரிபார்த்து அதில் ஏதாவது குறை இருந்தால், வேறு ஏதாவது கூடுதல்  ஆவணங்கள் தேவைப்பட்டால், உடனடியாக அதனை நேர் செய்ய செயலாற்ற வேண்டும். அதன்  மூலம் எதிரி தரப்பு ஆவணங்கள் பலமுள்ளவையாக்கப்படுவது தவிர்க்கப்படும்.

இடம் சமந்தமாக, உள்ளாட்சி வருவாய்,  மின்சாரம், குடிநீர், சாலை, அங்கீகாரம் போன்ற துறைகளில் எதிரி எதனையும்  செயல்படுத்த கூடாது என்று ஆட்சேபனை கடிதம், பதிவுதபாலில் அனுப்பபட  வேண்டும்.

எதிர் தரப்பினரிடையே இருக்கும் , அல்லது  அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் , சார்பதிவகம், இணையதளம்,  சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்று அந்த ஆவணங்களின்  நகல்களை கைப்பற்றுதல் வேண்டும்.

எதிர் தரப்பினர் ஆவணங்களை கூர்ந்து படித்து,  எங்கு அவர்கள் ஆவணங்களை திருத்தியோ (அ) நேர் செய்தோ, உருவாக்கி  இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

எதிர் மனுதாரர் நம்முடைய நிலத்தை  ஆக்கிரமிக்க காரணமான MOTIVE – யை கண்டுப்பிடிக்க வேண்டும். நாம் பலவீனமாக (  கல்வி, அதிகாரம், உறவினர் இல்லாமல் ) இருப்பதால் அதனை பயன்படுத்தி  கொள்ளலாம். என்று ஆக்கிரமிக்கிறார்களா! அல்லது இடத்தை விற்பனை செய்ய (அ)  கொஞ்சம் இடம் அவர்களுக்கு வழியாக தேவைப்பட ( DEMAND அடிப்படையில் )  ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்களா! அல்லது எதிர் தரப்பு நில மாபியா கும்பல் ,  அதாவது தொழில்முறை ஆக்கிரமிப்பாளர்களா! என்று கவனிக்க வேண்டும்.

மேற்படி பலவீனங்களை பயன்படுத்தி கொள்பவர்,  என்றால் நேரிடையாகவோ, தனியாகவோ, (அ) குடும்பத்துடனோ சென்று பேச்சுவார்த்தை  நடத்தலாம், (அ) உங்கள் பகுதியில் நன்மதிப்பு உள்ளவர்களை அழைத்து செல்லலாம்.  இதற்கு உங்களுக்கு கொஞ்சம் ஆளுமையும், எதிர்கொள்ளும் இணக்கமும், கண்ணியமாக  பேசும் கலையும் தெரிந்து இருக்க வேண்டும்.

DEMAND அடிப்படையில் ( MOTIVE இருந்தால் )  இடத்தை கொடுக்க விருப்பமிருந்தால் நல்ல விலைக்கு கொடுக்கலாம். கொடுக்க  விரும்பும் இல்லை என்றால் இந்த பேச்சுவார்த்தையில் உங்களை நாடுபவர்கள் நில  தாரகர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். அல்லது அந்த பகுதியின் அரசியல் ,  உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக இருப்பார்கள் நிச்சயம் அவர்களிடம்  பேச்சுவார்த்தையை தொடரக்கூடாது. நாசுக்காக அவர்களை முதலில் தவிர்க்க  வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பலவீனங்களை எதிர் தரப்பினருக்கு கொண்டு  சேர்க்கும் காரியத்தை செய்வர்.

இடத்தை அபகரிக்கும் நோக்கமும், நிலமாபியாகவும் அவர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் காவல்துறைக்கு விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும்.

எதிர் தரப்பினர் போலி ஆவணங்கள், பட்டாக்கள்  உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவந்தால், தகவல்பெறும் உரிமை சட்டம்  2015ன் கீழ் மனு செய்து அவர்களை அம்பலப்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும்.

நில ஆக்கிரமிப்பாளர்கள், பெரிய பிரமுகர்களாக  இருக்கும் பட்சத்தில் அவர்களை விட பெரிய அதிகாரிகளை, அமைச்சர்களை  சந்தித்து முறையிட வேண்டும். ஊடகங்களில் விஷயத்தை செய்தியாக்க வேண்டும்.

11.நில மாபியாக்களாக இருந்தால், எழுதப்படுகிற  மனுக்கள் நமக்கு புரியும் படியும், எதிர்தரப்பினர் சட்ட மீறல்களை வரிசைப்  படுத்தி நமக்கு துணையாக இருக்கும் ஆவணங்களை இணைத்து மனு தாயார் செய்ய  வேண்டும்.

மேற்படி மனு, அந்த பகுதி காவல் துறை  ஆய்வாளர் தேவைப்பட்டால் அந்த பகுதி Anti Land Grabbing Cell, மாவட்ட  கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்து ஏற்பு சீட்டு பெறுதல் வேண்டும்.

காவல் துறை எதிர் தரப்பிற்கு சாதகமாக  இருக்கும் பட்சத்தில் இதனை கிரிமினல் வழக்காக விசாரிக்க மறுத்தால், சிவில்  Dispute என்றே COMMUNITY SERVICE REGISTER " C.S.R போட்டாவது எதிர் தரப்பை  அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சொல்லலாம்.

காவல்துறை கிரிமினல் வழக்காக விசாரிக்க மனு  செய்யும் போதே இதுபோல் வழக்குகளுக்கு ஏற்கனவே இருக்கின்ற JUDGEMENT – யை  மனுவுடன் இணைத்தால் நிச்சயம் கிரிமினல் வழக்காக எடுக்க வாய்ப்பு  இருக்கிறது.

காவல் துறை கிரிமினல் வழக்காக பதிய மறுத்தால், நேரிடையாகவே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதியக்கோரி வழக்கு தொடுக்கலாம்.

மேற்சொன்ன எல்லா வழிமுறையும் செய்து நிலத்தை  மீட்க முடியவில்லை என்றால், நீதி மன்றத்தில் சிவில் வழக்கு போடலாம். அதன்  மூலம் தீர்வுகளை பெற்று கொள்ளலாம்.

⭕ *உங்கள் நிலம் எந்தெந்த காரணங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன?*

1. நிலத்தை விட்டு நீங்கள் வெகுதூரம் இருக்கும் பொழுது, அதாவது வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டில் வாசிக்கும் பொழுது.

நிலத்திற்கு தேவையான ஆவணங்களை ஒழுங்காக பாரமரிக்கமால் இருக்கும் பொழுது.

நிலங்களை அடிக்கடி பார்வையிடாமல் இருக்கும் பொழுது.

பத்திரங்களை தொலைத்தவர்களுடைய இடங்கள்.

ஒரே இடத்திற்கு டபுள் டாகுமென்ட் இருப்பவர்களுடைய இடங்கள்.

தவறான நபர்கள் இடங்களை பாரமரிக்க நியமிப்பதால்.

இடத்தில் வாடகைக்கு தரமற்றவர்களை குடிவைக்கும் பொழுது.

இடத்தின் விலை அதிகமாய் விட்ட பிறகு உங்களுடைய பத்திரத்தின் நகல்கள் ஊரெல்லாம் சுத்திவரும் போது.

எல்லைகள் சரியாக அளக்காமல் விட்ட நிலங்கள்.

கூட்டு பட்டாவில் இருக்கும் நிலங்கள், நீளம், அகலம், குறிப்பிடாமல் இருக்கும் கிரைய பத்திரங்கள் உள்ள நிலங்கள்.

காணிகல், "L" கட்,  Fencing போன்றவை செய்யப்படாமல் இருக்கும் நிலங்கள்.

Static Asset, களை Dynamic Asset ஆக மாற்றாமல் இருப்பது போன்ற காரணங்களால் உங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்