கடம்பன் முருகன் தமிழன் மாரத்தி ஆண்ட கடம்ப வேள் வேளிர்.
கடம்பன்( முருகன்) வழிபட்ட சிவஸ்தலங்கள் ! கடம்ப மரத்தைத் தல விருக்ஷமாகக் கொண்ட சிவஸ்தலங்கள் பலவற்றுள் . மதுரை, திருக்கடம்பந்துறை (குளித்தலை) போன்ற தலங்களைச் சில எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமியைக் கடம்பவன நாதர் என்று அழைக்கிறோம். முருகனுக்கும் கடம்ப மலர் மீது பிரியம் அதிகம். ஆகவே கந்தவேளைக் கடம்பன் என்று நூல்கள் போற்றுகின்றன. தேவாரமும் குமரப் பெருமானை " நம் கடம்பன்" என்று குறிப்பிடுகிறது. " கந்தக் கடம்பன் " என்று கார்மயில் வாகனனை வாயாரப் பாடுவார் அருணகிரிநாதர். சூர சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக முருகப்பெருமான் சிக்கலுக்கு அருகில் உள்ள கீழ்வேளூரில்(கீவளூர்)சிவபூஜை செய்யும்போது அத்தலத்தைச் சுற்றிலும் ஐந்து (ஒன்பது என்றும் கூறுவர்) தலங்களில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. பஞ்சக் கடம்பத் தலங்கள்: ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), அகரக் கடம்பனூர் , கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர் ஆகிய தலங்களைப் பஞ்ச(ஐந்து) கடம்ப க்ஷேத்திரங்களாகக் குறிப்பிடுவர். . நவகடம்பத்தலங்கள்: ...