எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டமாகிவிடும்?
எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டமாகிவிடும்? நன்கு அறிந்த நண்பர்களே, நாம் நாசமாய் போவதற்கு முதல் காரணமாக இருக்கலாம். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்.தனக்கு போகவே தானமும் ,தர்மமும் என பெரியோர்கள் கூறியுள்ளனர். கஷ்டத்தோடு கண்கலங்கி வந்து நின்று கடன் கேட்கும் பொழுது, இரக்கம் உள்ள மனிதர்கள் யாவரும் எளிதாக கடன் கொடுத்து விடுகின்றனர். கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அதே நன்றியுடன் பலர் நடந்து கொள்வதில்லை. கடன் வாங்கும்போது நாம் அவர்கள் வீட்டிற்கு நாயாய் அலைந்தோம் அல்லவா? கடனை திருப்பி வாங்க அவர்கள் நம் வீட்டிற்கு அலையட்டும் என்ற மனப்பான்மையுடன் பலர் உள்ளனர். மானம் மரியாதைக்கு பயந்து கடனை கண்ணியத்துடன் கட்டுபவர்கள் மிகக் குறைவு. கடன் கொடுத்தவருக்கே விபூதி அடிப்பவர் பலர். 1. எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் ,சனி திசை ,சனி புத்தியில் கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பது மிக அரிது. 2. ஏழரை சனியில் ,விரய சனியில் கொடுத்த பணமும் ஸ்வாகா. 3. ராகு திசையில் ராகு ,சனி புத்தியில் கொடுத்த பணமும் அம்பேல். 4. அட்டமாதிபதி திசையில், அட்டமச் சனியில் கொடுத்த காசு ...