ஜாதக யோகங்கள் 135
ஜாதக யோகங்கள் 135, ஒவ்வொருவரும் இந்த மண்ணில் ஜனனமாகும் போது இறைவனால் நூற்றி முப்பத்தி ஐந்து வகையான ஜாலங்கள் லோடயாகக் கொடுக்கப்படுகின்றது அவரவர் பிறப்பின் கிரக நிலைப்படி யோகங்களை அனுபவிப்பர் 1, சுனபா யோகம் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர். 2, அனபா யோகம் சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர், 3, துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர். 4, கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை...