Documents Title Deeds Missing Copy of Document

பத்திரம் தொலைந்து விட்டதா? கட்டாயம் செய்ய வேண்டிய 19 விஷயங்கள்!

1. பத்திரம் தொலைந்ததை தெரிந்தவுடன் தீர ஆராய்ந்து எங்கெல்லாம் தொலைந்து இருக்கும் என மனதை நடுநிலையோடு உணர்ச்சி வசப்படாமல் தேடி பார்க்கவும்.

2. பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தொலைந்து விட்ட விஷயத்தை தெளிவாக எழுதி புகாராக அளியுங்கள்.

3. பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக் கொண்ட இரசீது பெற வேண்டும்.

4. பிறகு அவர்களும் இரண்டு மூன்று நாட்கள் தேடிபார்க்க சொல்வார்கள். அதன் பிறகும் கிடைக்க வில்லை என்றால் காவல் நிலையத்தில் F.I.R. பதிவு செய்வார்கள்.

5. பிறகு பிரபல பத்திரிக்கைகளில் பத்திரம் காணவில்லை என்று விளம்பரம் கொடுக்க வேண்டும்.

6.அதன் பிறகும் பத்திரம் உங்கள் கைக்கு கிடைக்கவில்லை என்றால். காவல் நிலையத்தில் பொறுப்பு காவலரை சந்தித்து சொத்து ஆவணத்தின் முக்கியத்துவத்தை சொல்லி சீக்கிரம் NOT TRACEBLE கண்டுபிடிக்கவில்லை என்று சான்று பெறுதல் வேண்டும்.

7. பிறகு நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று (AFFIDAVIT) பெறுதல் வேண்டும்.

8. பத்திர அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலை COPY OF DOCUMENT போட்டு நகலை பெறுதல் வேண்டும்.

9. இனி முதல் உங்களுடைய 1.நோட்டரி உறுதி மொழி பத்திரம் 2. பத்திரிகை விளம்பரம் நகல் 3. காவல் நிலைய புகார் மனு இரசீது 5. F.I.R. & 6.NOT TRACEBLE சான்று ஆகிய ஆறு ஆவணங்களும் இருந்தால் தான் உங்கள் "நகல் பத்திரம்" தொலைந்த ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும்.

10. மேற்படி வேலைகள் எல்லாம், செய்ய பணம், உழைப்பு, நேரம் ஆகியவற்றை செலவு செய்ய வேண்டும். வேறு வழியில்லை இவற்றை செய்வதால்தான் பத்திரம் செல்லும்.

11. பத்திரம் தொலைந்த இடத்தை வாங்குபவர் பத்திரம் தொலைந்ததை கேள்விப்பட்டால் பத்திரம் யாரிடமோ அடமானத்தில் இருக்குமோ என்ற அச்சமும் சந்தேகமும் உருவாகும்.

12. பத்திரம் தொலைந்த இடத்தை வாங்கியவர் மேற்படி, F.I.R, NOT TRACEBLE சான்று, பேப்பர் விளம்பரம், நோட்டரி அவிடவிட் போன்றவை இருந்தாலும் பத்திரம் வேறு ஏதாவது அடமானத்தில் இருக்கிறதா எனதீவிர கள விசாரணை செய்தல் வேண்டும்.

13.வாங்குபவரும், இந்த இடத்தை வாங்க போகிறேன் மேற்படி பத்திரங்கள் தொலைந்துவிட்டது. யாருக்காவது ஆட்சபனைகள் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்கவும், எதிர்காலத்தில் ஏதாவது உரிமைகோரல்கள் வந்தால் செல்லாது என வழக்கறிஞர் மூலம் விளம்பரம் கொடுத்தல் வேண்டும்.

14. நாம் வாங்கிய சொத்து பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் வைப்போம்., நெருப்பு எண்ணெய் இங்க், பெயிண்ட் போன்ற பொருட்கள் பத்திரத்தில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.

15 பத்திரம் செய்யும் போதே இரண்டாம் பிரதி ( SECOND COPY) என்று குறைவான முத்திரைத்தாளில் பத்திரத்தில் என்னவெல்லாம் எழுதியிக்கிறோமோ அதே போல் எழுதி பத்திர அலுவகத்தில் அதே எண்ணில் பதிவு செய்யலாம்.

16. மேற்படி SECOND COPY யை E.B பெயர் மாற்றத்திற்கு, பட்டா பெயர் மாற்றத்திற்கே, கட்டிட அனுமதிக்கு என தேவையான இடங்களில் ஒரிஜினலுக்கு பதில் II nd copy யை கட்டலாம். இதனால் ஒரிஜினல் வெளியில் நடமாடும் வாய்ப்பு மிக குறைவு.

17. பெரும்பாலும் ஒரிஜினல் நகல் எடுக்கும் கடைகளில், நகல் எடுக்க செல்லும் போதோ அதிகம் தொலைகிறது. பத்திரத்தை ஒரு நகல் கலர் Xerox COPY போட்டு அதனை MASTER COPY ஆக பயன்படுத்தலாம்

18. இப்பொழுது எல்லா பத்திரங்களையும் முறையாகவே SCAN செய்து உங்களில் GOOGLE DRIVE இல் SOFT COPY ஆக வைத்து கொள்வது மிகப்பயனுள்ளது தேவைப்படும் போது SOFTCOPY கள் மூலம்நகல் எடுத்து கொள்ளலாம்.

19. பத்திரங்களை பஸ்களில் பெரும்பாலும் தொலைப்பவர்கள் பத்திரத்தை நல்ல பைலில் வைத்து கைப்பைகளில் வைக்காமல், வெறும் கையில் சுருட்டி வைத்து கொண்டு செல்லும் நபர்கள் தான் தொலைக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி