ஆகமம் தமிழர் மதம்.

ஆகமம் சமயச் சார்புடையதுதான். குறிப்பாக பூசா விதிகள் கோவில் கட்டும் முறை என்று கோவில்களை சக்தி மையங்களாக சக்தி பீடங்களாக பணம் கொழிக்கச் செய்யும் எந்திரங்களாக மாற்றியதே பூசா விதிகளும் ஆகம விதிகளும் தான்.

இந்த ஆகமத்தை எதிர்த்த புத்தர்களும் சமணர்களும் மொத்தை பொத்தையாக அழகற்ற சமாதி பீடங்களை நிறுவி அதில் புத்தர் சமணர் அரச சமாதிகளை நிறுவி வணங்கினார்கள். கூட்டம் கூடவில்லை. சக்தி இல்லாத சத்தற்ற மண் மேடுகள் ஆயின அந்த சமாதிகள். 

தற்போதைய ஈவேரா பெரியார் மற்றும் கருணாநிதி அண்ணா எம்ஜியார் ஜெயலலிதா லெனின் காரல் மார்க்சு மும்தாஜ் பேகம் ஷாஜஹான் அக்பர் சமாதிகளும் இவ்வாறே சக்தி இழந்து ஏதோ கூட்டம் வருகிறதே தவிர கொண்டாட்டம் மகிழ்ச்சி திருவிழா இன்றி மயான அமைதியுடன் உள்ளது.

ஆகம விதிகளோ சித்தர்கள் முனிவர்கள் சமாதிகளை (பழனி போகர் திருவண்ணாமலை திருமூலர் சிதம்பரம் திருமூலர் திருப்பட்டூர் பதஞ்சலி) மிகவும் கொண்டாட்ட பூமியாக பணம் கொழிக்கும் வியாபாரத் தலங்களாக ஆன்மீக பூமியாக மாற்றி திருவிழா மையங்களாக மாற்றியது பெருமையான கலாசார முன்னேற்றம் எனலாம்.

இதனால் தெய்வமற்ற கடவுளற்ற பூசையற்ற புனஸ்காரமற்ற புத்தர் சமணர் அம்மணர் சம்மணர் மதங்களும் பத்தி ஊதுவத்தி மெழுகு மெழுகுத்திரி சூடன் பூ பழம் உப்பு காணிக்கை காசு என்று சனாதன இந்து மத தமிழர் மத ஆணி வேரான பூசை புனஸ்காரங்களுக்கு வந்து விட்டது.

இதனால் தான் நாங்கள் சொல்கிறோம் சனாதன இந்து மதம் தமிழர் மதம் அது தமிழர் தமிழ் போலவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி தானே இயங்கும் சுயம்பு மதம் இயற்கை மதம். சனாதன இந்து தமிழர் மதத்திற்கு அழிவு இல்லை என்கிறோம்.

புத்தர் சமணர் அழியக் காரணம் எலுமிச்சை பழத்தில் வேப்ப மரத்தில் அரச மரத்தில் ஆல மரத்தில் கட்டும் நூல்களில் சந்தனத்தில் குங்குமத்தில் துளசியில் விபூதியில் மாட்டு மூத்திரத்தில் பஞ்ச கவ்யமான ஆனைந்தில் தமிழர் மதம் உள்ளது. இது அழியாது.

பல நாத்திகர்கள் வருவார்கள் போவார்கள். அறிவிலிகள்.

♥♥♥♥♥♥♥

அழிந்துபோன நூல்களும் நகரங்களும் – 3.   

சைவ ஆகமங்கள் 28 எனவும், வைணவ ஆகமங்கள் 108 எனவும், சாக்த ஆகமங்கள் 64 எனவும் சொல்லப்படுகிறது. இவை போக கணக்கற்ற உப ஆகமங்கள் இருக்கின்றன. சைவ ஆகமங்களில் ஒன்றான சந்திர ஞான ஆகமம் தனது 14ஆவது இயலில் 165-&272 பாடல் அடிகளில் புவனத்துவ பாலா என்ற தலைப்பில் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகிறது. கடற்கோளால் குமரி நிலப்பரப்பில் இருந்து அழிந்து போன நகரங்கள் குறித்தும், நகர அமைப்பு குறித்தும் அவை பேசுகின்றன(1). திருமூலரின் திருமந்திரம் ஒன்பது ஆகமங்களில் உள்ள கருத்துக்களின் தொகுப்புதான் என அதன் சிறப்புப்பாயிரம் சொல்கிறது. சைவ சித்தாந்த நூல்கள் 14உம் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன எனக்கருதப்படுகிறது. மயமதம், மானசாரம் போன்ற கட்டிடக்கலை, சிற்பக்கலை நூல்கள் ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டவை. உபநிடதங்கள் பல ஆகமங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவை. ஆகவே ஆகமம் என்பது மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், பல்வேறுகலைகள் முதலியன குறித்தப் பண்டையகாலத் தமிழர்களின் மரபு வழிப்பட்ட அறிவு ஆகும். இதனை பக்திக்காலகட்டத்தில், கோயில் வழிபாட்டுக்கானதாக அன்றைய சமயங்கள் மாற்றியமைத்துக்கொண்டன. இதனைச் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமல்ல சமண, பௌத்த சமயங்களும் பயன்படுத்திக் கொண்டன. ஆகமங்களில் வைதீகமோ, வர்ணங்களோ, சாதிகளோ இல்லை(2). அதனால்தான் ஆகமங்கள் என்பன பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக்கொண்டு உருவானவை என்கிறோம்.
 
   கி.மு. 1000 அல்லது அதற்கு முன்பிருந்து தமிழகத்தில் இருந்த பலதரப்பட்ட அறிவியல் விடயங்களும் எண்ணியம் என்கிற எண்ணியத் தத்துவ மூலவர் தொல் கபிலர் காலம் முதல் சேகரிக்கப்பட்டு ஆகமங்களாகத் தொகுக்கப்பட்டு வந்தன எனக் கருதலாம். அதனால்தான் சிவவாக்கியார், பத்ரகிரியார் ஆகிய சித்தர்கள் தொல்கபிலர் சொன்ன தத்துவம்தான் ஆகமம் எனக் குறிப்பிடுகின்றனர். ஆகமங்கள் கோயில் வழிபாட்டுக்காக உருவாக்கப் படவில்லை. அவை தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியமாக (ENCYCLOPEADIA) இருந்தன. கலைக்களஞ்சியங்கள் ஒரு சில மேம்போக்கானத் தரவுகளையே கொண்டிருக்கும். ஆனால் ஆகமங்கள் ஒவ்வொன்றையும் குறித்து முழுமையாகவும் ஆழமாகவும், விரிவாகவும் பேசின.  தமிழ்க்கல்வி முறையும், தொழிற்பயிற்சி முறையும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. பழந்தமிழகத்தில் ஒவ்வொருதுறைக்கும் தனித்தனி நூல்கள் பல இருந்த போதிலும் அனைத்துத் துறைகளையும் கொண்ட தொகுப்பாக ஆகமங்கள் உருவாகின(3). 

      கப்பல் கட்டுதல் முதல் வேளாண்மை வரையும் ஆன பல்வேறு உற்பத்தி தொடர்பான அனைத்துத் தொழில்நுட்ப அறிவும் அனுபவ அறிவும் முழுமையாகவும் விரிவான அளவிலும் ஆகமங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதுபோன்றே கணிதம், வானவியல் போன்ற அறிவியல்களும் சிற்பம் ஓவியம், இசை நாட்டியம் போன்ற கலைகளும், சித்தமருத்துவம், உணவு, யோகப் பயிற்சிகள் போன்ற உடலையும் மனதையும் பாதுகாக்கும் கலைகளும், வர்மக்கலை, சிலம்பம் வாள்பயிற்சி போன்ற போர்க்கலைகளும் வரலாறு, புவியியல் போன்றவைகளும் ஆகமங்களில் சேகரிக்கப்பட்டிருந்தன. அதனால்தான் பெரும்பாலானவை அழிந்து சிதைந்து போனபின்னும்கூட குமரி நிலப்பரப்பில் கடற்கோளால் அழிந்துபோன நகரங்கள் குறித்தும் நகர அமைப்பு குறித்தும் அவை பேசுகின்றன. சங்கம்மருவிய காலம்வரை இச்சேகரிப்பு நடந்து வந்தது. சங்கம்மருவிய காலத்தின் இறுதியில் அதில் தொய்வு ஏற்பட்டிருந்தது(4). 

    சங்கம் மருவிய காலத்திற்குப்பின் நடந்த களப்பிரர் படையெடுப்பும் அதனைத் தொடர்ந்து நடந்த சமற்கிருத மயமாக்கமும் இந்த ஆகமங்களில் மாபெரும் அழிவையும் சிதைவையும் கொண்டு வந்தன. களப்பிரர் காலத்தில் ஆகமங்களைப் பாதுகாப்போரும் பராமரிப்போரும் இல்லாது போனதால் பெரும்பாலான ஆகமங்கள் அழிவுக்கும் சிதைவுக்கும் உள்ளாயின. பின்னர் மீதியுள்ளவைகள் சமயம் சார்ந்தவர்களால் சமற்கிருதமாக ஆக்கப்பட்டு பாதுகாக்கப்படலாயின. கி.பி. 3ஆம் 4ஆம் நூற்றாண்டில் தமிழில் இருந்த ஆகமம் போன்ற நூல்களை சமற்கிருதத்துக்கு மாற்றுவதற்காகவே கிரந்த எழுத்துமுறை தமிழ் எழுத்து முறையில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகமங்கள் இன்று கூட கிரந்த எழுத்தில் தான் உள்ளன. அதன்பின் மூலத் தமிழ் ஆகமங்கள் பராமரிப்போரோ, பாதுகாப்போரோ இன்றி அழிந்து போயின.

    கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பின் அனைத்தும் சமற்கிருதமயமாயின. சமற்கிருதத்தில் இருப்பதே சிறப்பு என்ற கருத்து உருவாக்கப்பட்டது. தமிழ் அறிவர்கள் அனைவரும் சமற்கிருதத்தில்தான் எழுதினர். சமற்கிருதம் மெய்யியல், அறிவியல் மொழியாக ஆனது. தமிழ் வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே இருந்தது. நாளடைவில் தமிழில் மெய்யியல், அறிவியல் விடயங்களைப்பேசுவது இழுக்கானதாக ஆகிப்போய், தமிழ் அதற்குத்தகுதி இல்லாத ஒரு மொழி எனக் கருதும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஆதலால் தமிழில் இருந்ததெல்லாம் பாதுகாப்போர் இன்றி அழிவுக்குள்ளாயின. தமிழ்ச் சமூகம் ஆகமங்கள் என்கிற தனது பண்டைய மரபு வழிப்பட்ட அறிவுச் செல்வத்தை இழந்து போனது. சமற்கிருதம் அதில் பலவற்றைக் களவாடிக் கொண்டது. அவைகளை சமயச்சார்பானதாக மாற்றியமைத்துக் கொண்டது. ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு பல அறிவியல் தொழில் நுட்ப நூல்கள் சமற்கிருதத்தில் உருவாயின. ஆகமங்களில் திரிபுகளும், இடைச்செருகல்களும் பெருமளவில் உருவாகின. புதிய புதிய சமயச் சார்பான பல விடயங்கள் தொடர்ந்து ஆகமங்களாகச் சேர்க்கப்பட்டு ஆகமம் என்பது சமயச் சார்பானதாக ஆகிப்போனது. ஆகமங்கள் அனைத்தையும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது, பண்டைய தமிழ்ச் சமூகத்தின் மெய்யியலை, அறிவியலை, தொழில்நுட்பங்களை, கலைகளை ஓரளவாவது மீட்டெடுக்க இயலும். ஆகமங்களில் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செல்வம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆகமங்களில் உள்ள சமயச்சாரத்தை, இடைச்செருகல்களை, திரிபுகளை, அப்புறப்படுத்தி பழந்தமிழர்களின் அறிவுச் செல்வத்தை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமையாகும். 

பார்வை: 
1.. தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, முனைவர் அ. இராமசாமி, NCBH, டிசம்பர்-2013, பக்: 12, 13. 
2, 3, 4.  பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் – 2016, பக்: 869 873.
சான்றாதார நூல்:  மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினிபதிப்பகம்(கைபேசி:8667255103), பக்: 214 – 217..

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்