Mistake of Fact case. Arrest Police. Get Justice.

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய மேலதிகாரிகளின் அனுமதி மற்றும் அரசு அனுமதி வேண்டுவதற்கானகுற்ற விசாரணை முறை சட்டம் 1993  இன் 197 வது பிரிவுப்படி மனு மாடல்  தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 

 "ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்"

அனுப்புநர் : 
K. பூரணம், 
க/பெ.கிருஷ்ணசாமி ,
நீலாங்காளிவலசு அஞ்சல் , 
மூலனூர் வழி ,
தாராபுரம் வட்டம் ,
திருப்பூர் மாவட்டம் . செல் :  

 பெறுநர்:
திரு. சார்பு செயலர் (உள்துறை) அவர்கள்,
 தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,
 சென்னை -600009.
2) திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,
காவல்துறை இயக்குனர் அலுவலகம்,
 சென்னை.
3) திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
திருப்பூர்.

எதிர்மனுதாரர் :
1. திரு.ஜெயராமன் அவர்கள் , காவல்துணை கண்காணிப்பாளர், (முன்னாள்)தாராபுரம் , 
திருப்பூர் மாவட்டம் .
2) G. திருவனந்தம்,
 காவல் ஆய்வாளர் (முன்னாள்)
 சீர்மிகு காவல் நிலையம்,
மூலனூர்,
தாராபுரம் வட்டம்,
 திருப்பூர் மாவட்டம்.
3) திரு .N.காளிரத்தினம் அவர்கள் , 
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் , (முன்னாள்)
காவல் நிலையம் , 
மூலனூர் , 
தாராபுரம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் .
4) திரு. சாகுல் ஹமீது,
 காவல் ஆய்வாளர் ( இருப்பு )
 சீர்மிகு காவல் நிலையம்,
 மூலனூர்,
 தாராபுரம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.

 மதிப்பு மிகுந்த ஐயா / அம்மையீர்,
 பொருள்:
 குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 197 வது பிரிவுப்படி மேற்காணும் 4 எதிர் மனுதாரர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வேண்டுதல் தொடர்பாக.

1) மனுதாரர் ஆகிய நான் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர், நீலாங்காளி வலசு  கிராமம், கதவு எண்.93/94 கே கிருஷ்ணசாமி மனைவியாகிய, பூரணம் வயது.............. ஆகிய நான் அகத்தூய்மையோடும், உளப்பூர்வமாகவும், எவ்வித உள்நோக்கம் இன்றியும், நீதியின் நோக்கம் நிறைவேறுவதற்காகவும் பணிந்து வழங்கும் அபிடவிட்டு சத்தியபிரமாணம்.

2) மனுதாரர் ஆகிய நான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950இன் 5 வது பிரிவுப்படி ஒரு இந்திய பிரஜையாவேன், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 51 (அ) பிரிவு படி இந்திய திருநாட்டை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்தோடு கூட்டாகவும் தனிப்பட்ட முறையிலும் சமூக சேவையாற்றி வருகிறேன். மனுதாரர் ஆகிய எனது இந்த உன்னத நோக்கம் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தெரிய வந்ததால் கடந்த................... ஆண்டு...................... என்னை திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குமாரபாளையம் ஊராட்சியில் 8 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இப்பகுதி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டு சமூகத் தொண்டாற்றி வருகிறேன்.

3) இந்த சூழ்நிலையில் கடந்த 09.10.2020 அன்று சுமார் மதியம் 2.30 மணியளவில் எங்கள் ஊர் நீலாங்காளிவலசில் உள்ள அரசுப்பள்ளிக்கு சொந்தமான பள்ளிக்கு பின்புறமாக சிலர் தகரகொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய போவதாக தெரிவித்ததன் அடிப்படையில் நானும், எங்கள் ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்லாத்தாள் என்பவரும், பள்ளிக்கு பின்புறமாக சென்று பார்த்த போது, எங்கள் ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்துச்சாமி மற்றும் அவருடன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள அடியாட்களுடன் தகர கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அப்பொழுது நான் அவர்களை தடுக்க முயன்றபொழுது முத்துச்சாமி மற்றும் அவரது அடியாட்களால் பெண்ணகிய எனது வயிற்றில் கத்தியால் குத்தி கொடுங்காயத்துக்கு உள்ளாக்கப்பட்டும், சுமார் 13 நபர்களால் கொலை வெறி முயற்சியோடு தாக்கப்பட்டும், ஊரில் இருந்த சிலரால் இந்த கொலைகாரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைக்கப்பட்டு  தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றும், மீண்டும் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையான முத்து மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பினேன்.

 4) மனுதாராகிய நான் தனியார் மருத்துவமனையான முத்து மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சையில் இருந்தபொழுது மூலனூர் காவல் நிலைய காவலர் நேரில் வந்து எனது புகார் மனுவை பெற்றுக்கொண்டு மூலனூர் காவல் நிலையம் கு. எண். 758/2020 U/S. 147,148,294(b), 323,324,506(2),IPC, மற்றும் TN. PHW ஆக்ட் 4 இன்படியும் கடந்த 09.10.2020 ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. FIR பதிவு செய்த பின்னரும் மூலனூர் காவல் நிலையத்தினர் இந்த வழக்கின் எதிரிகளை கைது செய்யாமலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மூலனூர் காவல் நிலைய அதிகாரிகள் முத்துச்சாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்பட்டதால் மேற்படி புகார் மனு மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யகோரி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு Crl. OP. No. 3781/2021 தாக்கல் செய்து இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்கப்பெற்ற 2 மாதம் காலங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய  மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. மேற்படி உத்தரவினை காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் அவர்கள் கருத்தில் கொள்ளாமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டு எதிரிகளுக்கு ஆதாாக எனது புகாரினை MF (Mistek of Fact) பிழை வழக்கு என்று எனக்கு அதன் அறிவிப்பை பதிவஞ்சல் மூலமாக அனுப்பினார்கள். இதனை எதிர்த்து நான் தாராபுரம்,நடுவர் நீதிமன்றத்தில் Crl. MP. No. 1768/2022 வழக்கு தாக்கல் செய்து அவ்வழக்கில் நீதிபதி அவர்கள் உரிய விசாரணை செய்து மூலனூர் காவல் நிலையம் FIR No 758/2020 மீது (Further Investigation) மீண்டும் நேர்மையான மறு புலன் விசாரனைக்கு கடந்த 21.08.2022 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

5)  அன்று மூலனூர் காவல் நிலைய குந்ம எண் 758/2020 வழக்கினை போற்படி காவல் நிலைய ஆய்வாளர் மேற்கொண்டு புலன் விசாரனை மேற்கொண்டு அதன் அறிக்கையை மாண்பமை நீதித்துறை நடுவர் மன்றம், தாராபுரம் உத்தரவு கிடைத்த நாளிலிருந்து 2 மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்திரவிடப்பட்டது. ஆனால் மூலனூர் காவல் ஆய்வாளர் அவர்கள், நேர்மையான விசாரணை செய்யாமல் நீதிமன்றம் செய்திருந்த கால வரம்புக்கு முரணாக இந்த வழக்கை விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் வீணான காலந்தாழ்த்தி வந்தனர்.

6) இந்நிலையில் கடந்த 01.03.2022 அன்று இரவு சுமார் 07.57 மணியாவில் மூலனூரில் உள்ள எங்களின் குலதெய்வ கோயில் அருள்மிகு வஞ்சியம்மன் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள நானும் எனது கணவரும் சென்றிருந்தோம். அப்பொழுது கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் நிலைய ஆய்வாளர் திரு-சாகுல் ஹமீது அவர்கள் எங்களை பார்த்து கையசைத்து நிறுத்தினார். அப்பொழுது அவர் எங்களிடம் வந்து உங்களுடைய புகார் விசாரணை அறிக்கை பணி நிறைவடைந்துவிட்டது. நீங்கள் கையெழுத்து போட்டால் எதிரிகளை கைது செய்துவிடலாம். கையெழுத்து போடுகிறீர்களா என்று கேட்டார். அப்பொழுது நாங்கள் நாளை காலையில் எங்கள் வழக்கறிஞர் உடன் காவல் நிலையம் வந்து கையெழுத்து போடுகிறோம் என்று சொன்னோம் காவல் ஆய்வாளர் அவர்கள் இப்பொழுது உடனடியாக கையெழுத்து போட்டீர்கள் என்றால் எதிரியை உடனடியாக கைது செய்து நான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என கட்டாயப்படுத்தி கூறிவிட்டு தனது செல்போன் மூலமாக காவல் ஒருவருக்கு போன் செய்து ஒரு பேப்பரை எடுத்து வருமாறு கூறினார். சிறிது நேரத்தில் அவரும், ஒரு பேப்பரை கொண்டு வந்தார். இதில் நீங்கள் கையெழுத்து போட்டீர்கள் என்றால் எதிரிகளை நாளை கைது செய்துவிடலாம் என்று கூறினார். நானும் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது பேச்சை நம்பி காவலர்கள் கொண்டுவந்த பேப்பரில் கையெழுத்து போட்டேன். என்னிடம் கையெழுந்து பெற்ற உடனே காவல் ஆய்வாளர் கோயிலிலிருந்து வெளியே சென்று விட்டார். நான் மேற்படி பேப்பரை எனது செல்லில் படம் பிடித்து எனது வழக்கறிஞருக்கு க்கு Watsapp இல் அனுப்பிவைத்தேன். அதைப் பார்த்த எங்களது வழக்கறிஞர் என்னம்மா மீண்டும் நம்ம கேசை தள்ளுபடி பண்ணிட்டாங்க என்று சொன்னார். நான் பதறி போயி என் கணவருடன்  கடந்த 01.03.2023 ஆம் தேதி இரவு சுமார் 09.00 மணியளவில் காவல் நிலையம் சென்றேன். அங்கு இருந்த ஆய்வாளரிடம் எதிரிகளை கைது செய்வதற்குதானே கையெழுத்து கேட்டீர்கள். ஆனால் எனது வழக்கை தள்ளுபடி செய்வதற்காக பொய் சொல்லி ஏன் கையெழுத்து வாங்கினீர்கள்? என்று கேட்டேன். அப்பொழுது அவர் என்னிடம் நான் அப்படித்தான் கையெழுத்து வாங்குவேன் உன்னால் என்ன செய்ய முடியுமோ போய் செய் என்று மூலனூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது ஒருமையில் பேசினார்.

7) காவல் நிலை ஆணை எண்:658  இறுதி அறிக்கையானது படிவம் எண்:89ல் அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் அவர்களுக்கு, காவல் ஆய்வாளர் அவர்களால் அல்லது புலன் விசாரணை அதிகாரி அவர்களால் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 ன் கீழ் அனுப்பப்பட வேண்டிய அறிக்கையாகும். படிவம் எண்:89 என்பது விசாரணை செய்கின்ற வழக்குகளை பொய்வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும், துப்பறிய முடியாத வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்ற படிவம் ஆகும். காவல் நிலை ஆணை எண்:659 வது பிரிவு 
விசாரணை செய்கின்ற வழக்குகளை, அவைகள்
பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் வழக்கு என்று அறிக்கை செய்ய வேண்டும். அந்த வழக்குகளை பொய்யென்று நம்புவதற்கு தகுந்த ஆதாரங்கள் விசாரணை அதிகாரிக்கு கிடைத்தால் ஒழிய, அந்த வழக்குகளை பொய் வழக்கு என்று சொல்லக்கூடாது.
பொய்வழக்காக பெரும்பாலும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி எண்ணுவதை ஏற்க முடியாது. பொய் வழக்கு என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை அதிகாரியானவர், அந்த வழக்கை துப்பு துலக்க முடியாத வழக்கு என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும். என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் 
கி.வீரமணி VS புதுச்சேரி யூனியன் பிரதேசம்  சென்னை,உயர் நீதி மன்றம், வழக்கு எண் CRL. OPNo. 4915/2020 மற்றும் Cf. MPNo. 2810 ஆகிய வழக்குகளில் தீர்ப்பு தேதி : 28.08.2020 என்ற வழக்கின் தீர்ப்புரையில் காவல் நிலைய ஆணையின் 588-A பிரிவின்மீது கவனம் செலுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும், இதையே ஹரியானா மாநிலம் எதிர் 1992 (Sup-1)SCC 335 என்ற உச்ச நீதிமன்ற வழக்கிலும் உறுதிப்படுத்தி உள்ளது.

8) சி.பி.ஐ. எதிர் கிஷோர் சிங் 2011 (6) SCC 369: 2010 (14) SCR 95: 2010 என்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பில் ஒரு "காவல் அதிகாரி தவறு செய்தால் அவருக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஏனெனில் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே அந்த தவறை செய்வது ஏற்க முடியாது" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
மேற்படி, பாபுபாய் V. குஜராத் மாநிலம் ((2010) 12 SCC 254 என்ற வழக்கில் கிரிமினல் வழக்குகளில் நியாயமான விசாரணையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைதான் - என உச்சநீதிமன்றம், தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் எனது புகாரின் மீது மூலனூர் காவல் நிலையம், வழக்குப்பதிவு செய்து நடுநிலையான விசாரணை செய்யாதது  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது.

8) தமிழ்நாடு காவல் நிலை ஆணை எண் - 566 ல் போலீசார் செய்யும் விசாரணை நடுநிலையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பிரிவில் கூறப்பட்டுள்ளதை சுருக்கமாக கீழே குறிப்பிட்டு உள்ளேன். 
புலன் விசாரணை அதிகாரி ஒருவருக்கு சார்பாகவும், மற்றவருக்கு எதிராகவும் செயல்படக்கூடாது. உண்மையை கண்டுபிடிப்பது தான் விசாரணை அதிகாரியின் குறிக்கோளாகும். விசாரணையின் போது காவல் அதிகாரி நடுநிலையாக செயல்பட வேண்டும்.
ஒரே குற்றச் சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட இரண்டு குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்தும் போது காவல்துறை அதிகாரி கீழ்கண்ட இரண்டு நடைமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றி விசாரணை நடத்த வேண்டும். எதிரிகளில் யார் வலிய தாக்குபவர்களாக இருந்துள்ளார்களோ அவர்கள் மீது குற்றம் சாட்டுதல் அல்லது
 அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய் என்று தெரிய வந்தால் இரண்டையும் நிராகரித்தல் குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை அதிகாரி ஆய்வு செய்கையில், நீதிமன்றத்தில் எதிர் குற்றச்சாட்டை சான்றுப் பொருளாக தாக்கல் செய்து, எதிர் தரப்பில் காயம்பட்டவர்களின் உடல்நிலை சான்றுகளையும் மெய்பிப்பது அவரது கடமையாகும். நீதிமன்றத்தின் முன்பு திட்டமான வழக்கு (Desinite Case) ஒன்றை முன்வைத்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு விசாரணை அதிகாரி நீதிமன்றத்திடம் கோர வேண்டும். அத்தகைய வழக்குகளில் ஒரு புகாரை மட்டுமே ஏற்றுக் கொண்டு, அந்த புகாருக்கு ஆதரவான சாட்சிகளை மட்டும் விசாரித்து விட்டு, மறு தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு எந்த விதமான விளக்கத்தையும் அளிக்காமல் புலன் விசாரணை அதிகாரி இருக்கக்கூடாது. எதிரிடை வழக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து எதிர் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள காயங்களை நிரூபிப்பதற்காக தேவையான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் இரு தரப்பு குற்றச்சாட்டுகளும் உண்மையானதாக இருக்காது. எனவே நீதிமன்றம் உண்மையை கண்டறியும் விதமாக புலன் விசாரணை அதிகாரி இரு புகார்களையும், சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விசாரணை அதிகாரி இரண்டு புகார் சம்பந்தப்பட்ட வழக்கில் முடிவு எடுக்க திணறினால் மாவட்ட அரசு வழக்கறிஞரின் கருத்துரையை பெற்று அதன்படி நடக்க வேண்டும் வழக்கு மற்றும் எதிரிடை வழக்கு ஆகிய இரண்டையும் ஒன்றாக விசாரித்தால்தான் உண்மையில் யார் தப்பு செய்தது என கண்டுபிடிக்க முடியும். புலன் விசாரணை அதிகாரி இரண்டு வழக்குகளிலும் புலன் விசாரணையை ஒரே சமயத்தில் மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் " இராமகிருஷ்ணய்யா Vs மாநில அரசு (1954- MWN-CRL-9)" என்ற வழக்கில், வழக்கு மற்றும் எதிரிடை வழக்குகளில் காவல்துறையினர் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " பிரசாத் Vs  காவல் ஆய்வாளர், அவனியாபுரம் காவல் நிலையம் (CRL. O. P. NO - 13177/2016) என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது. எனவே ஒரு குற்றச் சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டால் தமிழ்நாடு காவல் நிலை ஆணைகளை பின்பற்றி அந்தப் புகார்களை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. OP. NO - 11649/2011 DT - 12.7.2017, Dr. M. S. கதிர்வேலு மற்றுமொருவர் Vs ஆய்வாளர், B1 வடக்கு காவல் நிலையம், சென்னை 2017-3-MLJ-CRL-762 ஆனால் மூலனூர் காவல் நிலையம் எனது வழக்கை நடுநிலையாக விசாரணை செய்யாமல் பெண் என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றவாளிகளை இதுவரையில் கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் மூலனூர் காவல் நிலையத்தினர் செயல் படுவதால் இவ்வழக்கின் எதிரிகள் இப்போது மிகவும் மிகவும் பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர். மேலும் எங்கள் உடமைக்கும், உயிருக்கும் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து இனி யாரிடத்தில் புகராளிப்பது? என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றோம். பாதுகாப்பு தர வேண்டிய காவல் துறை குற்றவாளிகளிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு எதிரிகளின் குற்றச் செயல்களுக்கு ஆதரவாக இருப்பது நமது நாட்டின் இறையாண்மையை கேலிக்கு உள்ளாக்கியுள்ளது.

9) ஆகையால் மேற்காணும் 1,2,3,4 ஆகிய எதிர்மனுதார்களான காவல் அதிகாரி மற்றும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.   எங்கள் கிராம பொது மக்கள் நிம்மதியாக ஜீவனம் செய்வதற்கு மேற்காணும் மூலனூர் காவல் நிலையம் வழக்கு எண். 758/2020 வழக்கின் எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆதலால் மேற்காணும் 1,2,3,4 ஆகிய எதிர்மனுதார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள கு. வி. மு. ச.1973 இன் 197 வது பிரிவுப்படி அனுமதி உத்தரவு வழங்கி நீதியின் நோக்கம் நிறைவேற ஆவண செய்ய வேணுமாய் மிகவும் பணிவோடு பிராத்திக்கிறேன்.
மனுதார்

தேதி:
இடம்:

இதையே பிரமாணமாக இதில்............................................ தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப் படுகிறது.

இணைப்பு ஆவணங்கள்:
1) மூலனூர் காவல் நிலையம், கு. எண்.758/2020 FIR நகல்.
2) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு நகல்.
3) தாராபுரம் குற்றவியல் நடுவர் மன்ற உத்தரவு நகல்.

நகல்கள்:
தகுந்த நீதி மற்றும் சட்ட நடவடிக்கைக்காக:
திரு. தலைமை நீதிபதி அவர்கள்,
உயர் நீதிமன்றம்,
சென்னை 600104.
2) திரு. மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள்,
மாவட்ட முதன்மை நீதிமன்றம்,
திருப்பூர்.
3) திரு. குற்றவியல் நடுவர் அவர்கள்,
குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
தாராபுரம்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்