False case Police escape legal advice
பதிவு:🔟
பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி?
👊👊👊👊👊👊
🌹 பொதுவாகவே வழக்கில் சிக்கி கொண்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான மாற்று. நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து, புகாருக்கு புகார்தான் தீர்வு என காவல் நிலையத்தின் உதவியைத்தான் அதிக பட்சமாக நாடுவார்கள்.
🌹ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி மாதிரி,
ஒருவர் மீது ஒருவரின் புகார் வந்தால் காவலர்களுக்கு கொண்டாட்டம்தான். புகார் அளித்த இரு தரப்பினருக்குமே திண்டாட்டம்தான்.
ஏனென்றால், ஒவ்வொருவரின் புகாரை ஆதாரமாக வைத்தே மற்ற புகார்தாரரை மிரட்டி இருவரிடம் இருந்தும் ஒட்டு மொத்தமாக லட்சக் கணக்கில் கூட லஞ்சம் வாங்கி விடுவார்கள். எனவே புகாருக்கு புகார் என்பது சரியான வழி அல்ல.
🌹பொய் வழக்கில் சிக்கி கொண்டவர்கள் பெரும்பாலும், வழக்கு அல்லது குற்றச்சாற்று பொய் என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனாலும், அலைய வேண்டியிருக்கிறது என்று கூறி ஆதங்கப்படுவார்கள். ஆதங்கப்படுவதால் எந்த ஆதாயமும் இல்லை.
🌹கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பது முதுமொழி. இதேபோல் எந்த ஒரு வழக்கிலும் தீர விசாரிப்பது என்பது, குறுக்கு விசாரணைதான். எனவே, உங்களிடம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ள ஆவணம் அல்லது ஆதாரம் அல்லது சாட்சிதான் மிகச்சரியானது என்பதை இந்திய சாட்சிய சட்டம் 1872இன் உறுபு 145இன் கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் குறுக்கு விசாரணையில் சாட்சியை முரண்படுத்தி உங்கள் தரப்பு என்னவோ அதை நிலை நிறுத்த வேண்டும். இது ரொம்ப சுலபமான வேலைங்க.
🌹அப்போது மட்டும்தான் வழக்கிலிருந்து வாழ்வு கிடைக்கும். அவ்வாழ்வு மறுவாழ்வாக இருக்கும். ஒருவேளை அப்படி முரண்படுத்தவில்லை என்றால், சிறைவாழ்வு அல்லது சில்லரை வாழ்வு என்பது நிச்சயம்.
🌹 எந்த வகையான பொய் வழக்கு வருவதாக இருந்தாலும் அவ்வழக்கில் மிக, மிகத்துல்லியமான உண்மை நிலையை எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கூறி விட்டு, இதில் சொல்லி உள்ள சங்கதிகளை மெய்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் பொய்ப்பிக்க தயாராக இருந்தால் வழக்கை தொடருங்கள் என தார்மீக அனுமதி அளிக்கலாம். இந்த வகையில் எழுதப்படும் ஒரு கடிதம் எவர் ஒருவரையும் கண்டிப்பாக சிந்திக்க வைக்கும் என்பது எனது கடந்த கால அனுபவங்கள்.
🌹ஆம்! முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் செயலாளரான பி.எம். நாயர் மற்றும் ஒரு சில நீதிபதிகள் உட்பட பலருக்கும் கூட இப்படி கடிதம் எழுதி அவர்களின் மிரட்டலான மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை தவிர்த்துள்ளேன்.
🌹 உண்மை நிலையை எடுத்துக்கூறும் போது, அது மிக மிக துல்லியமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் எதிர் தரப்பினரும், உங்களின் துல்லியமான உண்மையை எடைப்போட்டு பார்த்து அதற்கு மதிப்பளித்து பொய்யான நடவடிக்கையைத் தவிர்ப்பார்கள். ஏதோ ஒரு சில பொய்தானே சொல்கிறோம் என்று எதிர்தரப்புக்கு பொய் என்று நன்றாகவே தெரிந்த ஒரு சங்கதியை சொன்னீர்கள் என்றால், பொய் சொல்பவனிடம் பொய் சொல்வதில் தப்பில்லை எனக்கருதி அதற்கு பதிலாக அவர் கூடுதலாக பொய்யைச் சொல்லுவார். இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் நீங்கள் மீண்டும் கூடுதலாக பொய் சொல்ல நேரிடும். இப்படி பொய் சொல்வதால் பிரச்சினை பெரிதாகி கொண்டு போகுமே தவிர தீர்வு எதுவும் கிடைக்காது.
🌹எல்லாம் சரிதான். நான் உண்மையே சொல்லியும் கூட பொய்யாக வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது..? வக்கீழ நம்பாம நாமலே வாதாடுறப்போ, வெட்டியா வாய்தா வாங்கி அலையவைத்தால் என்ன செய்வது என்பதுதானே உங்களின் அடுத்த கேள்வி? இதற்கான பதிலும் நமது நீதியைத்தேடி நூல்களில் இருந்தாலும் அடுத்தடுத்த பதிவுகளில் சொல்ல முயற்சிக்கிறேன்.
🌹 நீதியைத்தேடி அசல் நூல்களைப் பெற கீழ்கண்ட முகவரிக்கு கடிதம் எழுதுங்கள். நூல்கள் குறித்த அதிக தகவலுக்கு பதிவு 1 மற்றும் 2ஐ படிக்கவும்.
Care society,
53, Tank street,
Hisur- tk,
Krishnagiri- dt,
Pin- 635109.
நீ வாழ நீயே வாதாடு
வக்கீழை நம்பாதே
கீழ்க்கண்ட இணைப்பைத் தொட்டு சட்டமெனும் சாட்டை என்ற நமது சேனலில் இணைந்து இன்னும் அதிக விழிப்புணர்வு பெறுங்கள்.
💎💎💎💎💎💎
Comments
Post a Comment