Kind request to Aranilayathurai Amaichchar TVK Ramesh Sir

அறநிலையத்துறை அமைச்சர் தவெக ரமேஷ் ஐயா அவர்களுக்கு,

லஞ்சம், ஊழல், லாவண்யம் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டியது தான். தவறு இல்லை. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஐயர்வாளுக்கு ரூபாய் 1500 கொடுத்து சண்முகர் அருகில் பின்புறம் சென்று ரொம்ப நேரம் நின்று சிலைகள் அருகில் நின்று தரிசனம் பூஜைகள் வழிபாடு காணும் பாக்கியம் பெற்றேன். தரிசனம் முடிந்த பிறகு மஞ்சள் பையில் திருச்செந்தூர் முருகன் படம் மற்றும் விபூதி மற்றும் சந்தனம் உருண்டை மற்றும் சாமிக்கு சார்த்தப்பட்ட மாலையில் சிறு துண்டு போன்றவை இருந்தது. மணமாக இருந்தது. அவற்றை பக்தி சிரத்தையுடன் வீட்டுக்கு கொண்டு வந்து இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். பாவம். வைதீகம் ப்ராம்மணர் சிவாச்சாரியார் ஐயர் அர்ச்சகர் குடும்பங்கள் வாழ வேண்டும் அல்லவா? விலைவாசி எந்தளவுக்கு உயர்ந்துள்ளது? எத்தனை அர்ச்சகர்கள், ப்ராம்மணர்கள், அரசு வேலையில் பணி அமர்த்த முடியும்? 24 மணி நேரம் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர், ப்ராம்மணர், சிவாச்சாரியார், பூசாரி வேலை. அவர்களுக்கு உதவியாளர்கள் கண்டிப்பாக தேவை. அதிகாலை 3 மணிக்கு எழுந்து ஒவ்வொரு நாளும் மடைப்பள்ளி, கோயில் நடை திறந்து இரவு 10 மணி வரை விடாத ஆறு காலம் பூசைகள், புனஸ்காரங்கள். 14 மணி நேரத்துக்கும் அதிகமான இந்த ஐயர், சிவாச்சாரியார், அந்தணர், ப்ராம்மணர், வைதீகம் வேலைக்கு அரசாங்கம் முழுச் சம்பளம் கொடுக்கத்தான் முடியுமா? சுத்தம், பத்தம், ஆச்சாரம், அனுஷ்டானம் என்பது சாதாரண வேலை அல்ல. தவம். மாதவம். சேவை. மக்கள் சேவை. மகேசன் சேவை. தொண்டு. உயர் பணி. ஆகவே தான் வைதீகம் காரியம் செய்யும் ஐயர், ப்ராம்மணர், சிவாச்சாரியார், அர்ச்சகர், அந்தணர், ஆச்சார்யார் போன்றோர் சிவனுக்கு நிகராக, இறைவனுக்கு நிகராக போற்றப்பட்டு, வணங்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரப்பட்டுள்ளனர். ஏழை ப்ராம்மணர் என்பது சொல் வழக்கு. ஆகவே கோயில் பணிகளில் ரூபாய் 30000 வரை சண்முகர் அபிஷேகம் சண்முகார்ச்சனை என்று திருச்செந்தூர் முருகன் கோயிலிலும், பழனி முருகன் கோயிலில் வேறு சில ஸ்பெஷல் அர்ச்சனை ரூபங்களும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேறு சில ஸ்பெஷல் அர்ச்சனை ரூபங்களும் உள்ளன. இவை எல்லாம் அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா ஹாங்காங் பெய்ஜிங் ஜெர்மனி யுகே லண்டன் ஆஸ்திரேலியா ஐரோப்பா ஜப்பான் போன்ற வெளி நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள் தமிழர்கள் இந்தியர்கள் ஆண்டுக்கு 365 கோடி சம்பளம் ஒரு நாளுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் திருநெல்வேலி சுந்தர் பிச்சை கூகிள் தலைமை அதிகாரி போன்ற Super Duper Richie Rich Billionaire Trillionaire Millionaire போன்ற தமிழர்கள் இந்தியர்கள் இடமிருந்து ஏழை ப்ராம்மணர்கள் மேற்கண்ட பிரபல்யமான கோயில்களில் பாக்கெட் வெயிட் அறிந்து தோராயமாக ரூபாய் 30000 வரை பணம் கருப்பு பணமாக பெற்றுக் கொண்டு சிறப்பான வழிபாட்டு அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை அனுபவம் கொடுத்து ராயல் ட்ரீட்மெண்ட் என்று கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப நல்ல முறையில் அவர்களை கும்பம் மரியாதை செய்து இறைவனை அற்புதமாக ஆனந்தமாக தரிசனம் செய்ய வைத்து அனுப்பி வைக்கின்றனர் மேற்படி கோயில் சிவாச்சாரியார்கள். இதில் எந்த தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. வருடத்துக்கு ரூபாய் 12 லட்சம் சம்பளம் முதல் 24 லட்சம் 48 லட்சம் 78 லட்சம் சில பல கோடிகள் வருமானம் உள்ள தமிழர்கள் இந்தியர்கள் ஏன் வசதியான மரியாதை மாலை கும்பம் அழைப்பு என்று பந்தாவாக இறைவனை அற்புதமாக ஆனந்தமாக தரிசனம் செய்ய கூடாது? அதில் என்ன தவறு உள்ளது? அந்த பெருங் கோடீஸ்வரர்களையும் பில்லியனர்களையும் மில்லியனர்களையும் இறைவனுக்கு முன்பு எல்லோரும் சமம் என்று பொறுமையாக காக்க வைத்து இரும்பு கம்பி அடைப்புகளில் அடைத்து நோகடித்து நொந்து நூடுல்ஸ் ஆக்கி பரிதாபமாக தரிசனம் செய்ய வைப்பது எந்த வகையில் நியாயம்? தர்மம்? ஏரோப்ளேன் விமானத்தில் பறக்கும் போது கூட ஜன்னல் சீட்டுக்கு எக்ஸ்ட்ரா பணம் பிஸினஸ் க்ளாஸ் எக்கானமி க்ளாஸ் என்று டிக்கெட்டில் வேறுபாடு ஏற்றத்தாழ்வு உள்ளது. விமானத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பிலும் கொடுக்கும் உணவுக்கும் விஸ்கி பிராந்தி ஜின் வோட்கா ரம்முக்கும் வித்தியாசம் உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஆனால் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான் என்ற வள்ளுவர் வரிகளில் இரண்டாவது அடியையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு. இந்திய அரசு. ரூபாய் 30000 அதற்கும் மேல் உள்ள லட்சங்கள் செலவாகும் சண்முகார்ச்சனை போன்ற சிறப்பு தரிசனம் போன்ற புண்ணியச் செயல்களுக்கு ஸ்பெஷல் வரி போட்டுக் கொள்ளலாம். தவறு இல்லை. வரன்முறை செய்யலாம். தவறு இல்லை. அதாவது ரூபாய் 30000 சண்முகார்ச்சனையில் அரசுக்கு ரூபாய் 5000 அல்லது ரூபாய் 10000 வரை செலுத்துமாறு வரன்முறை படுத்தலாம். ரசீது பில் போட்டு கருப்பு பணத்தை வெள்ளை ஆக காட்டலாம். தவறு இல்லை. சிவாச்சாரியார்கள் ஏழை ப்ராம்மணர்கள் அந்தணர்கள் குடும்பம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரை எழுதி உள்ளேன். 
வாழ்க வளமுடன் 🙏 
ஓம் நமசிவாய 🙏 
ஓம் நமோ நாராயணாய 🙏

Comments

Popular posts from this blog

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்

மலையூர் மம்பட்டியான் கதை

நசி மசி