Grok Painting Rajkumar 3 months old baby cremation scene 5.1.2000 Vickramasinghapuram Tirunelveli District 627425 Thamirabharani River Sudukadu
மில்லென்னியம் பிறந்த நாள்.
ஒய்2கே அழிந்த நாள்.
இந்திய சாப்ட்வேர் வல்லுனர்கள்.
அமெரிக்கா சென்று.
கோபோல்.போர்ட்ரன். மொழிகளில்.
ஒய்2கே பக் கொன்று.
ஏர்போர்ட்.
ரேடார்.
என்று பல கருவிகளை.
சாதனங்களை.
இரண்டு டிஜிட் ஆண்டில் இருந்து.
நான்கு டிஜிட் ஆண்டாக மாற்றி.
ரேம் மெமரி செலவு செய்து.
உலகைக் காப்பாற்றிய நாள்.
பசுபதி லீவில் ஊருக்கு செல்ல கிளம்பிய நாள்.
சண்டிகர் ஐஎஸ்டி எஸ்டிடி பிசிஓ பூத்தில்.
இடி விழுந்த செய்தி கேட்ட நாள்.
31.12.1999
இரவு.
இந்திய விமானப்படை நண்பர்.
சார்லஸ் ஆர்ம்ஸ்ட்ராங் உடன்.
சர்ச்சில் மாஸ் கொண்டாடி.
கேரோல்ஸ் பாடி.
ஜெபித்து.
கேக் வெட்டி.
சார்லஸ் ஆர்ம்ஸ்ட்ராங் பிறந்த நாளான
31. டிசம்பர். பக்கார்டி ரம் அடித்து.
புரோட்டா சிக்கன் உண்டு.
கொண்டாடி மகிழ்ந்த நாள்.
1.1.2000 அந்தக் கொண்டாட்டம்
மகிழ்ச்சி மறைந்தது.
உறைந்தது.
எமர்ஜென்சி.
அக்கா சொன்னாள்.
உன் மகனுக்கு உடல் சரியில்லை.
கை கால் அசைவில்லை.
ஜெனடிக் டிசீஸ் என்றனர்.
பல டாக்டர்கள் இடம் சென்றுள்ளனர்.
நரம்பியல் மருத்துவர்.
குழந்தை மருத்துவர்.
அனைவரும் கையை விரித்து.
கையை பிசைந்து.
ட்ராப் த பேபி என்றனர்.
1.11.1999 ராஜ்குமார் பிறந்தான்.
5.1.2000 ராஜ்குமார் மறைந்தான்.
2.1.2000 ஏற்கனவே ஊருக்குச் சென்று ராஜ்குமார் மகனைப் பார்க்க ஆண்டு விடுமுறை 30 நாட்கள் எடுத்து இருந்தேன்.
வழக்கம் போல கோயம்புத்தூர்.
பழனி. அக்கா வீடு வழியாக சென்றேன்.
அக்கா வீட்டுக்குள்ள நுழையும் முன் சொன்னாள். அப்படியே நாம் பஸ் ஏறி விக்கிரமசிங்கபுரம் அம்பாசமுத்திரம் பாபநாசம் செல்ல வேண்டும் என்றாள்.
கிளம்பினோம்.
சண்டிகர் டு கோயம்புத்தூர் வரை மலையாளம் கன்னியாஸ்திரிகள்.
கிறிஸ்துவ பாதிரியார் உடன் வந்தனர்.
தற்செயலாக.
அவர்களும் ராஜ்குமார் கதை கேட்டு ஏசு கிறிஸ்து கர்த்தர் இடம் ஜெபம் செய்தனர்.
எனக்காக முழங்கால் இட்டு ஜெபித்தனர்.
நானும் முழங்கால் இட்டு ஜெபித்தேன்.
ஜெபம் செய்து ராஜ்குமார் உயிரைக் காப்பாற்றலாம் என்று ஒரு ஆசை.
நப்பாசை.
நிராசை.
5.1.2000 காலை 10 மணிக்கு எல்லாம் முடிந்தது.
பழனி வீட்டு வாசலில் தான்.
அக்கா சொன்னாள்.
உன் மகன் இறந்து விட்டான்.
ஆயில்யம் நட்சத்திரம்.
கடகம் ராசி.
பணகுடி ஆவுடை நாயகம் பிள்ளை தாத்தா போல.
ஜாதகம் போட்டு பார்த்தேன்.
பல ஓட்டைகள்.
தூத்துக்குடி எனது தாய்மாமன்
வைத்தியநாதன் என்ற பெரியார் அடியான் சொன்னது போல.
உன்னிடம் பல ஓட்டைகள் உள்ளது பசுபதி என்றார்.
என்ன ஓட்டைகள் சொல்லுங்கள் மாமா என்றேன்.
சொல்லவில்லை.
இப்படி யாருமே முகத்துக்கு நேராக பேசாமல் சொல்லாமல் முதுகுக்கு பின்னால் பழி வாங்கி வந்தனர்.
என் அக்கா மகன் என்ற ஒரே க்வாலிபிகேஷன் தான் உன்னிடம் உள்ளது என்றும் சொன்னார் தாய்மாமன்.
நோஷன் ப்ரஸ்சுக்கு தெரியும்.
அமேசான் கிண்டில் டெஸ்க்டாப் பப்ளிஷிங்க்கு தெரியும்.
எக்கானிமிக்கல் ஹோஸ்ட் டாட் காம்க்கு தெரியும்.
1999 செப்டம்பர் முதல் 2023 டிசம்பர் வரை சைவநெறி.ஆர்க் இணைய தளம்.
வெப் சைட். பயனர்களுக்கு தெரியும்.
பேபால்.காம்க்கு தெரியும்.
விங் கமாண்டர் கிருஷ்ணன்க்கு தெரியும்.
ஓட்டைகள் இருக்கலாம்.
உடைசல்கள் இருக்கலாம்.
அதையும் தாண்டி.
சரி செய்து.
வாழ்பவன் தான்.
மனிதன்.
எல்லோரும் பரிசுத்த ஆன்மாக்கள்
ஆகி விட இயலாது.
குற்றமே இல்லாத ஒருவன் இவள் மீது கல் எறியுங்கள் என்றார் ஏசு கிறிஸ்து.
ஊர் ஜனங்கள் கல்லை கீழே போட்டனர்.
ஆகவே ராஜ்குமார் இறந்த அன்று.
5.1.2000.
போட்டோ எடுத்தேன்.
ஒரே போட்டோ.
கடைசி போட்டோ.
புதைத்தல்.
எரித்தல்.
மறந்து விட்டது.
தாமிரபரணி ஆற்றின் கரை ஓரம்.
சுடுகாடு.
சென்றோம்.
வேட்டியில் சுற்றி.
3 மாதம் குழந்தை ராஜ்குமார்.
நல்ல உயரம்.
வெள்ளை ரோஸ் நிறம்.
தூக்கி சுமந்தவன்
ராமசுப்பிரமணியன் மச்சினர் மற்றும் நான்.
தாமிரபரணி ஆற்றில் கரைத்தோம்.
சாம்பல் கரையும் வரை அங்கு இருந்தோம்.
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…
ஏன் என்றால் தலைச்சன் ஆண் குழந்தை மண்டை ஓடு ந்யூரான்கள் செய்வினை பில்லி சூன்யம் செய்ய சிலர் எடுத்துச் சென்று விடுவார்களாம்.
அதை தவிர்க்க எரித்தனர்.
3 மாதம் குழந்தை.
பாவம்.
கர்மா.
அவனுடைய கர்மா.
ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்.
ஆண்டவன் அழைப்பான்.
அப்போ யார் அழுதா அவனுக்கென்ன.
அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்.
ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்.
ஆண்டவன் அழைப்பான்.
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவரே இசை அமைத்து பாடிய பாட்டு.
நிதர்சனமான உண்மை.
Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387
https://notionpress.com/author/83387
Comments
Post a Comment