ஆடித்தபசு - ஜோதிட விளக்கம்

ஆடித்தபசு - ஜோதிட விளக்கம்

சமஸ்கிருதத்தில் ஆடிமாதம் என்பதை ஆஷாட மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் இந்தியாவின் தெற்கு பகுதியான சங்கரன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழா ஆடித்தபசு ஆகும்.

சமஸ்கிருதத்தில் தபஸ் என்றால் தவம் என பொருள். ஆஷாட நட்சத்திர மண்டலத்தை நோக்கி கோமதி அம்மன் தவமிருந்த காரணத்தால் இந்த பண்டிகை பெயர் ஆடித்தபசு. 

இந்த விழா சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை போதிக்கிறது. இதை ஜோதிட ரீதியில் பார்ப்போம். முதலில் சிவனும் நாராயணனும் ஒருவரே என்று தவமிருந்த பார்வதிக்கு ஏன் கோமதி என பெயர் வந்திருக்கிறது என காணலாம். கோ என்றால் பசு, மத்யம் என்றால் நடுவில், ஆதாவது பசுகளின் மத்தியில் அமர்ந்து தவமிருந்த அம்மன் என்பதால் அவருக்கு கோமதி என பெயர். இதை ஜோதிட ரீதியாக காண, பசுவின் மடிகளை போன்ற தோற்றம் கொண்டது பூச நட்சத்திரம் ஆகும், அங்கு அமர்ந்த அம்மனுக்கு கோமதி என பெயர் வந்தது.

இந்த விழா சரியாக ஆடி சதுர்த்தியில் தொடங்கி சதுர்ததசி திதி வரை உள்ள பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆதாவது ஆடி பூரத்தில் தொடங்கி ஆடி பௌர்ணமிக்கு முதல்நாள் முடிகிறது. இந்த பத்து நாட்களும் அம்மன் சங்கர நாராயண திருவுருவம் காண தவமிருந்ததாக சொல்லப்படுகிறது. 

பூசத்தின் மத்தியில் சூரியன் அமர்ந்து, அதற்கு நேர் எதிரே இருக்கும் உத்திர ஆஷடா நட்சத்திர மண்டலத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் போது பௌர்ணமி உண்டாகும். இந்த பவுர்ணமி ஒளியில் சங்கர நாராயணராக சிவ விஷ்ணு இணைந்து காட்சி அளித்தனர். 

இந்த நேரத்தில் அபிஜித் என்ற நட்சத்திரம் பற்றி அறிய வேண்டியிருக்கிறது. அபிஜித் என்றால் தொடர் வெற்றி என பொருள். அபிஜித் என்பது ஒரு ஆண் நட்சத்திரம். இதன் ஆங்கில பெயர் வேகா (Vega) இது உத்திராடம் நான்காம் பாதமும், திருவோணம் ஒன்றாம் பாதமும் இணைந்து உருவான நட்சத்திரம் ஆகும். 

ஜோதிடத்தில் உத்திராட நட்சத்திர அதிபதி சங்கரன் ஆகும். திருவோண நட்சத்திர அதிபதி நாராயணன் ஆகும். இருவரின் ஒவ்வொரு பாதியும் இணைந்து வானில் தெரிவதே சங்கர நாராயண வடிவாகும். 

இதை கடக ராசியின் மத்தியில் பூசத்தில் அம்மன் அமர்ந்து சங்கர நாராயணை தரிசனம் செய்தார். எனவே சங்கர நாராயணன் என்பது அபிஜித் நட்சத்திர ஒரு பகுதியாகும். இதை Epsilon 1,2 stars  என்கின்றனர் வானவியலாளர்கள். இந்த நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரத்தின் மேல் முனையில் காணப்படுகிறது. இது ஒரு இரட்டை நட்சத்திர Binary star கூட்டமாகும். இவற்றை Double double என்றும் அழைக்கின்றனர். இந்த இரு நட்சத்திரமும் ஆடி பௌர்ணமி அன்று வடகிழக்கு வானில் வெறும் கண்ணில் பார்க்க இயலும். இந்த காட்சியே சங்கர நாராயண இணைவுக்காட்சியாக ஆடித்தபசு விழாவில் கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கையில் வெற்றியை தரும் அபிஜித் நட்சத்திரத்தை காணும் இந்த நிகழ்வையே முன்னோர்கள் ஆடித்தபசு என கொண்டாடி மகிழ்ந்தனர்.

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

 எங்கும்   நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . என்ன தவம் செய்தேனோ உன் ஆழ்ந்த கருணையை பெற🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்