Bagavat Gita Aram Porul Inbam Dharmam Artham Kamam Purusham Purushartham Aswaththa Tree cutting
ஐயா
உங்களைப் போல நானும் கீதை படித்து ஒன்றும் புரியவில்லை. தெளிவாக விளங்கவில்லை என்று இருந்தேன். கிட்டத்தட்ட 26 வருடங்களாக.
இதையே கண்ணதாசன் தனது பாடலில் தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் (சைவ சித்தாந்தம்) அது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்று பாடினார்.
ஆயினும் பல்வேறு மதம் நூல்களைப் படித்து நான் குறிப்பாக திருக்குறள் ஓஷோ சைவ சித்தாந்தம் பைபிள் விவேகானந்தர் ரமணர் இளையராஜா தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் பதிகங்கள்.....
இது போக பகவத் கீதை தமிழ் பொருளுரை மஹாகவி பாரதியார்....
பகவத் கீதை தமிழ் பொருளுரை கண்ணதாசன்....
பகவத் கீதை ஆங்கிலம் பொருளுரை வினோத் பவே.....
அந்த நூல்களையும் படித்த பின்னர்...
அவ்யக்தம்.
வியக்தம்.
அவ்யக்தம் என்ற தலைகீழாக தொங்கும் மரம். மிகப் பழமையான மரம். அதன் வேர்கள் ஆகாயத்தில் கிளைகள் பூமியில் தொங்குகின்றன.
அந்த அவ்யக்தம் என்ற அஸ்வத்தம் மரத்தை ஞானம் என்ற வாளால் வெட்ட வேண்டும்.
அவ்வாறு வெட்டினால் நாம் பரமபதம் அடைய முடியும் என்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் தெளிவாக சாப்டர் 15 (புருஷோத்தம யோகம் )ல் விளக்கமாக சொல்லி உள்ளார். இது தான் பந்த பாசங்கள் என்ற கட்டுக்கள் தளைகளை அகற்றுவது. வெட்டுவது.
இதைத்தான் சைவ சித்தாந்தத்தில்
பசு
பதி
பாசம்
என்றும்.
பாசம் என்ற தளையினை கட்டுக்களை அறுத்தால் வெட்டினால் பசு என்ற சோஷியல் அனிமல் தனது விலங்கு மனத்தைத் தாண்டி தேவ சம்பத்து என்ற பதி நிலையை அடையும் என்று எளிமையாக தெளிவாக விளங்கும் படி கோவிலில் பதியாக சிவ லிங்கம்.
பசுவாக நந்தி காளையும் வைத்து அடையாளம் காட்டியும் சொன்னார்கள்.
இந்த பதி தான் புருஷன் என்று பகவத் கீதையில் வருகிறது.
இந்த பசு என்ற நந்தி மாடு காளை ரிஷபம் தான் புருஷார்த்தம் என்ற செல்வம் மாடு ஆக வருகிறது.
சாப்டர் 2ல் (சாங்கிய யோகம்) பகவத் கீதையில் புருஷம் புருஷார்த்தம் பற்றிச் சொன்ன ஸ்ரீ கிருஷ்ணர் சாப்டர் 15 ல் (புருஷோத்தம யோகம்) தான் பாசம் என்ற தளைகளை வெட்டுவது பற்றி சொல்லி உள்ளார்.
இதற்கு இடையில் ஏகப்பட்ட அத்தியாயங்கள் அர்ஜீனனையும்
நம்மையும் குழப்பி உள்ளன.
இதனால் 2015 மார்ச் முதல் ஒரு டேபிள் சார்ட் போட்டு வரைந்து நான் பகவத் கீதை சாப்டர் 2க்கு பிறகு சாப்டர் 15 வர வேண்டும்.
அவ்வாறு ஆர்டர் மாற்றி அமைத்தால்
சைவ சித்தாந்தம் மற்றும் பகவத் கீதை இரண்டும் ஒன்று தான்....
பதி....புருஷன்....1 God. Kalvi. Aram.
புருஷர்களில் நான் உத்தமன்
ஆகவே என்னை புருஷோத்தமன் என்று அழைப்பார்கள் என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.
பசு.....புருஷார்த்தம். Selvam. Porul.
பாசம்....அஸ்வத்தம் என்ற தலை கீழாக தொங்கும் அரச மரம். அதை வெட்ட வேண்டும். Inbam.
Padhi...Aram...Dharmam...Purushan
Pasu..Porul..Artham..Purushartham..
Pasam..Inbam...Kaamam.. Avyaktam
என்று பூடகமாக தெளிவற்று உருவகமாக சொல்லி உள்ளார் ஸ்ரீ கிருஷ்ணர்.....
இந்த சார்ட் இங்கு படமாக இணைத்து உள்ளேன்.
Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387
https://notionpress.com/author/83387
Comments
Post a Comment