Nandhi. Nandhar. Nandhan. Chidambaram Nandhanar. Nandhini. Ponniyin Selvan. Aishwarya Rai. Links.
நந்தி யார்.
நந்தர்கள் யார்.
நந்தர்கள் வம்சம் யார்.
நந்தனார் சிதம்பரம்.
நந்தினி பொன்னியின் செல்வன். ஐஸ்வர்யா ராய்.
நந்தினி பசு. தொடர்புகள்.
நந்தி எவ்வாறு சிவன் வாகனம் ஆனார்?
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி, தோழி ! வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும்பணைப் பொதியில்…………….
பொருள்: தோழி, வாழ்வாயாக! வெற்றிச் சிறப்புமிக்க கொடியினையும் காற்றைப் போன்று வேகமான அலங்கரிக்கப்பட்ட தேரினையும் உடையவர்கள் கோசர்கள். அவர்கள் பகைத்து எழுந்தனர். பழைய ஆலமரத்தின் கிளைகளுக்கு அடியில் போர் முரசங்களைக் குறுந்தடியினால் அடிக்கின்றனர். மகாபத்ம நந்தன் என்னும் பாடலிபுத்திரத்து மன்னனுடைய செல்வத்தையே அவர் பெற்றாரெனினும் அதற்கு மகிழ்ந்து அங்கேயே தங்கிவிடுபவர் அல்லர் ( என் காதலர்).
2000 ஆண்டுகளுக்கு முன்னர். கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் ஆகியோர் பற்றி நம் புலவர்கள் பாடியது மிகவும் வியப்பான விஷயம். தமிழர்கள் போரின் பொருட்டும், வணிகத்தின் பொருட்டும் கங்கை நதி, இமயம் வரை சென்றதையும் இதில் அறிகிறோம். நந்தர்களின் செல்வம் குறித்தும் அறிகிறோம். அவர்கள் புகழ் தென்னாடு வரை பரவி இருந்தது.
மாமுலனார் தரும் தகவல் இதை விட வியப்பானது.
புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலி குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி !
பொருள்:– தோழி வாழ்க! அகன்ற வானிலே உயர்ந்து எழு புகையினைப் போல் விளங்கிப் பனி தவழும் தீச்சுடரைப் போல் தோன்றும் இமய மலை போன்றதோ! அல்லது பலவகைப் பட்ட புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பவரின் சிறந்த பாடலிபுத்திரத்தில் திரண்டிருந்து பின் கங்கையின் நீர் அடியில் மறைந்து போன செல்வமோ! அவ்விரண்டும் இல்லையென்றால் நம்மைவிட்டுப் பிரிந்து போனதற்குக் காரணம் யாதோ!
தலைவி பேசுவது போல அமைந்த இந்தப் பாடலில் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பாடலிபுரத்தை ஆண்ட நந்த வம்ச அரசர் கங்கை ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து பெருஞ் செல்வத்தை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் அது காணாமற் போனதால் குழீஇக் கரந்த நிதியம்' என்று சொல்லப்பட்டது.
''நிதி'' என்ற சம்ஸ்கிருதச் சொல்— தங்கம், நவரத்னங்கள் போன்ற எல்லாச் செல்வத்தையும் குறிக்கும்.
பாடலிபுத்திரம் என்பது இப்போது பீஹார் மாநிலத் தலை நகரான பாட்னா நகரம் ஆகும்
இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் பாடுகிறார். இதற்கு உரை எழுதியவர்கள், மஹாபத்ம நந்தன் (கி,மு. 345-329) என்று மன்னர் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.
சங்கத் தமிழ் இலக்கியத்தில், தங்கத்தை எங்கே ஒளித்துவைத்து வைத்திருக்கிறார்கள் என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது.– ஒன்று பாடலிபுத்திரத்தில் கங்கைக்கு அடியில் ஒரு சுரங்கத்தில் பொக்கிஷம், புதையல் வைக்கப்பட்டு இருக்கிறது.– இரண்டு, வேளிரின் பாழியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய சுவையான செய்தி அகநானூற்றில் இருக்கிறது.
தமிழர் கண்ட தங்கப் புதையல்
சங்க காலத்தில் வாழ்ந்த பரணர் என்ற பிராமணப் புலவரும் (பீஹார்...உத்தரப்பிரதேசம்...
மத்தியப்பிரதேசம்....கங்கை சமவெளி....இமயமலை பற்றி.....)
மாமுலனார் (பீஹார்...உத்தரப்பிரதேசம்...
மத்தியப்பிரதேசம்....கங்கை சமவெளி....இமயமலை பற்றி.....) என்ற பிராமணப் புலவரும்
கபிலர் என்ற பிராமணர் புலவரும் (குஜராத் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி மட்டுமே...வேள் வேளிர் வேளாளர்.... குறிப்பாக 49 தலைமுறை ஆண்ட வேள் வேளிர் வேளாளர் மன்னர் இருங்கோவேள்....பற்றி...
பாரிவேள் பற்றி.....துவரை நாடு என்ற துவரம் பருப்பு அதிகம் விளைந்த துவாரகை பற்றி....)
ஏராளமான வரலாற்றுச் செய்திகளைப் பாடல்களிலேயே தருகின்றனர்.
மாமுலனார் வட நாட்டு விஷயங்களை அதிகம் சொல்லுவார். நந்த வம்சம் மற்றும் மௌரியர்கள் பற்றி அவர் பாடுவதைப் பார்க்கையில் அவர் மிகப் பழைய புலவர்களின் பட்டியலில் ஒருவர் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. அவரும் பரணரும் கூறும் ''தங்க'' விஷயங்களைக் காண்போம்.
தொன்முது வேளிர் பாழியில் குவித்து வைத்த தங்கம் பற்றி பரணர் ( அகநானூறு 258) பாடுகிறார்: பாழி பாழீய் பாழிய் Pali... Pali language of Budhhars. Samanars. Ancient Tamils. Pali city also found at Kashmir. Rajasthan. UP. MP. Bihar. Nepal. Karnataka. Etc... Most of the Pali named city or towns are connected with Buddhism. Jainism. Pazhi. Paazhi. Paazheey. Palli. Pallela. Pallelar. Pallavar. Dynasties. Asokan. Mahendran. Dynasties.)
நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொல்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃதுஒல்லாய் —
பொருள்:- அரிய காவலை உடையது நன்னன் உதியன் என்பவனின் பாழிச் சிலம்பு தொன்மை மிக்க வேளிர்கள் தேடி வைத்த பொன் அங்கே பாதுகாவல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதனைவிட அரியவள் தலைவி என்பதை நீ நன்றாக அறிவாய். அறிந்திருந்தும் அவளை நாம் நெருங்க மாட்டோம் என்று யான் கூறிய பின்னும் என்கூற்றிற்கு உடன்படாது போனாய்……
இதில் தெரிவது என்னவென்றால்
வேளிர்கள் நிறைய தங்கத்தைக் குவித்துவைத்தனர்.
அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதை அடைவதைவிடக் கடினம் என்னுடைய காதலி.
Comments
Post a Comment