நந்தி யார். நந்தர்கள் வம்சம் யார்.
நந்தி யார்.
நந்தர்கள் யார்.
நந்தர்கள் வம்சம் யார்.
நந்தி எவ்வாறு சிவன் வாகனம் ஆனார்?
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி, தோழி ! வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும்பணைப் பொதியில்…………….
பொருள்: தோழி, வாழ்வாயாக! வெற்றிச் சிறப்புமிக்க கொடியினையும் காற்றைப் போன்று வேகமான அலங்கரிக்கப்பட்ட தேரினையும் உடையவர்கள் கோசர்கள். அவர்கள் பகைத்து எழுந்தனர். பழைய ஆலமரத்தின் கிளைகளுக்கு அடியில் போர் முரசங்களைக் குறுந்தடியினால் அடிக்கின்றனர். மகாபத்ம நந்தன் என்னும் பாடலிபுத்திரத்து மன்னனுடைய செல்வத்தையே அவர் பெற்றாரெனினும் அதற்கு மகிழ்ந்து அங்கேயே தங்கிவிடுபவர் அல்லர் ( என் காதலர்).
2000 ஆண்டுகளுக்கு முன்னர். கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் ஆகியோர் பற்றி நம் புலவர்கள் பாடியது மிகவும் வியப்பான விஷயம். தமிழர்கள் போரின் பொருட்டும், வணிகத்தின் பொருட்டும் கங்கை நதி, இமயம் வரை சென்றதையும் இதில் அறிகிறோம். நந்தர்களின் செல்வம் குறித்தும் அறிகிறோம். அவர்கள் புகழ் தென்னாடு வரை பரவி இருந்தது.
மாமுலனார் தரும் தகவல் இதை விட வியப்பானது.
புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலி குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி !
பொருள்:– தோழி வாழ்க! அகன்ற வானிலே உயர்ந்து எழு புகையினைப் போல் விளங்கிப் பனி தவழும் தீச்சுடரைப் போல் தோன்றும் இமய மலை போன்றதோ! அல்லது பலவகைப் பட்ட புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பவரின் சிறந்த பாடலிபுத்திரத்தில் திரண்டிருந்து பின் கங்கையின் நீர் அடியில் மறைந்து போன செல்வமோ! அவ்விரண்டும் இல்லையென்றால் நம்மைவிட்டுப் பிரிந்து போனதற்குக் காரணம் யாதோ!
தலைவி பேசுவது போல அமைந்த இந்தப் பாடலில் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பாடலிபுரத்தை ஆண்ட நந்த வம்ச அரசர் கங்கை ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து பெருஞ் செல்வத்தை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் அது காணாமற் போனதால் குழீஇக் கரந்த நிதியம்' என்று சொல்லப்பட்டது.
''நிதி'' என்ற சம்ஸ்கிருதச் சொல்— தங்கம், நவரத்னங்கள் போன்ற எல்லாச் செல்வத்தையும் குறிக்கும்.
பாடலிபுத்திரம் என்பது இப்போது பீஹார் மாநிலத் தலை நகரான பாட்னா நகரம் ஆகும்
இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் பாடுகிறார். இதற்கு உரை எழுதியவர்கள், மஹாபத்ம நந்தன் (கி,மு. 345-329) என்று மன்னர் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்
Comments
Post a Comment