Mistake of Fact or Mistake of Law
Mistake of Fact or Law
Case in Counter :-
*பிழை வழக்கு ( MF) வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு*
பிழை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் PSO-658 to 669 காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், குற்றவியல் நீதித்துறை நடுவர் அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக கூறுகிறது.
PSO-660 (MF) பிழை வழக்கு குறித்து முறையாக புகார்தாரர்க்கு காவல்துறையினர் அறிவிப்பு கொடுக்க வேண்டும். என்பதையும், அதனை முதல் தகவல் அறிக்கையுடன் இணைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதையும் உறுதி படுத்துகிறது.
PSO-661 இறுதி அறிக்கை( RCS)களை வட்ட ஆய்வாளர் மூலமாக (I.O.) விசாரணை அதிகாரி அனுப்ப வேண்டும். என்பதையும், அதன் மீது ஆணை பிறப்பிக்கப்பட்டால் குறிப்புரை எழுதித் தாமதமின்றி குற்றவியல் நடுவர்க்கு அனுப்ப வேண்டும். என்பதையும் உறுதி செய்கிறது. பிழை வழக்கு குறித்து திருப்தி ஏற்படாத நிலையில் மேற்கொண்டு விசாரணை செய்யுமாறு காவல் ஆய்வாளர் நிலைய அலுவலர்க்கு அணையிடலாம் அல்லது தானே விசாரணை செய்யலாம்.
PSO-662 விசாரணை அலுவலர்(IO),ஒரு வழக்கை திட்டமிட்ட பொய்யென்றோ வன்மமான பொய்யென்றோ அறிக்கை செய்கையில், அவர் இறுதி அறிக்கையில் வாதிக்கு எதிராக நடவடிக்கைவெடுக்க உத்தேசிக்கிறாரா இல்லையா என்றும், அப்படி உத்தேசிக்காவிட்டால் அவ்வாறு செய்யாத்தன் காரணங்களை கூற வேண்டும். என்று உறுதி செய்கிறது!
PSO-664 இதச( IPC) 182 or 211 ஆவது பிரிவின் கீழ்க் குற்றச்சாட்டுகளை,காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் உட்கோட்ட ( DSP) அலுவலரின் உத்தரவுகளின்றித் தொடங்கலாகாது. என்று உறுதி செய்கிறது.
PSO-665 Cr.P.C.,195 குற்றச்சாட்டு:-
(1) இதச(IPC) 211 ஆவது பிரிவின் தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்திற்காக அக்குற்றம் யாதேனுமொரு நடவடிக்கையில் அல்லது அது சம்பந்தமாகச் செய்யப்பட்டிருப்பதாகச் சாற்றும்போது அந்நீதிமன்றமோ அல்லது அல்லது அது கீழ்ப்பட்டுள்ள வேறெந்த நீதிமன்றமோ எழுத்தில் கொடுத்த புகாரின் மேலன்றி மற்றப்படி,வழக்கு எதுவும் தொடரக்கூடாது.(2)ஆகவே,கீழ்க்கண்ட நேர்வுகளில் அத்தகைய நீதிமன்றத்தின் எழுத்து மூலமான குற்றச்சாட்டு ஒன்று அவசியமாகும்.
(அ) முதல் குற்றச்சாட்டு காவலருக்குக் கொடுக்கப்பட்டு, அவர்களால் அக்குற்றம் பொய்யென்று தீர்ப்பு செய்யப்பட்ட ஒரு வழக்கில், குற்றவியல் துறை நடுவர் நீதிமன்ற நடவடிக்கை ஏதேனும் எடுத்திருக்கும்போது,
(ஆ) கு.வி.மு.ச.Cr.P.C.,159 ஆவது பிரிவின் கீழ்ப் புலனாய்வின்றி ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அது நீதிமன்ற நடவடிக்கையாக அமையாது.
PSO-668 Orders of Magistrate on Final Reports- இறுதி அறிக்கைகளின் பேரில் குற்றவியல் துறை நடுவரின் ஆணைகள். குற்றவியல் வழக்கு நடைமுறை விதித்தொகுப்பு,173- ஆவது பிரிவின் கீழ் ஒரு வழக்கு பொய்யானதென்று குற்றவியல் துறை நடுவருக்குச் செய்யப்படும் இறுதி அறிக்கைமேல்,அப்பிரிவே காட்டுகின்றபடி மேற்கொண்டு காவலர் விசாரணை செய்யும்படி குற்றவியல் துறை நடுவர் உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம்.ஆனால்,அவ்வழக்கு,பொய்யானதென்று காவலரே செய்த அறிக்கைக்கு எதிராக அவ்வழக்கில் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்யும்படி காவலருக்குக் கட்டளையிட குற்றவியல் துறை நடுவருக்கு உரிமையில்லை. இவ்வழக்கு பொய்யானதென்று காவலர் செய்த அறிக்கையின் மேல் குற்றவியல் துறை நடுவர் மனநிறைவு அடையாவிட்டால், கு.வி.மு.ச.190- ஆவது பிரிவின் கீழ்,அவருக்குத் தானாகவே நடவடிக்கை எடுத்துக்கொள்ள அதிகாரம் உண்டு.
விசாரணை முடியும் முன் எப்பொழுதும் நீதிமன்றம் கு.வி.மு.ச.(Cr.P.C) பிரிவுவ216,385(2),386-ன் படி புதிய குற்றச்சாட்டை சேர்க்கவும்,மாற்றவும் முடியும் என உச்ச நீதிமன்றம் Bhimanna V/s State of Karnataka 2012(9)SCC 650; 2012 AIR SC 3026: 2012(7)SCR 909. 2012(8) Scale 457,2013AIAR( Crl.)861 வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
எதிர் வழக்கில் (Case in Counter)- ஒரு குற்ற வழக்கில் காவல்துறையினர் அறிக்கையைத் தாக்கல் செய்ததற்கு பிறகு அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்குக் ( further Investigation)காவல் துறையினருக்கு உத்தரவிடும்படி கோரி நிகழ்நிலைப்( Defecto Complaintant) ஓர்எதிர் விண்ணப்பத்தைத் Protest Petition)தாக்கல் செய்யவதற்கு நிகழ்நிலைப் புகார்தார்ருக்கு உரிமையுள்ளது என்று உச்ச நீதிமன்றம் பகத் சிங் எதிர் காவல்துறை ஆணையாளர் AIR 1985 SC 1285, 1985-2-SCC-537, 1985-1- MLJ- CRL-536 என்ற வழக்கில் ஒரு சிறப்பான உத்தரவிட்டுள்ளது.
எதிரியாக உள்ள வழக்கில் கு.வி.மு.ச.பிரிவு 315 ல் சாட்சியாக குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சி கூறலாம்.
எதிர் வழக்கில் (case in counter)ஒரே அரசு வழக்கறிஞர் APP இருவழக்கிற்கும் முன்னிலையாக முடியாது.சென்னை உயர்நீதிமன்றம் கணேசன் A-1 Vs.அரசு State Rep. என்ற வழக்கில் 28-4-2011 ல் நீதியாரசர் எஸ். நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
என்றென்றும் மக்கள் பணியில்.....
இரா. கணேசன்
அருப்புக்கோட்டை
9443920595
Comments
Post a Comment