தேவோன் கா தேவ். மஹாதேவ். சிவன். மஹாதேவன்.


மார்க்கண்டேயன் கதையில் கடமையை செய்பவர்களின் வித்யா கர்வத்தை சிவன் அடக்குகிறார். அதாவது சிவன் என்றாலே திருவிளையாடல் தான். எக்சப்ஷன். சிவன் தனது பக்தன் உயிரை காப்பது என்று முடிவு செய்து விட்டார். இதை அறிந்தும் எமன் பாசக்கயிறை வீசியது தவறு. எமன் தனது கடமை தவறக்கூடாது என்று நினைத்து ஒரு ஷணம் தன் கடமை சிவனை விட பெரிது என்று ஆணவம் கொண்டார். இந்த தவறைத் தான் நக்கீரரும் செய்தார். திருவிளையாடல் புராணம் மற்றும் படம் கதைப்படி மதுரை நக்கீரர் சிவன் எழுதிய பாடலில் குற்றம் கண்டார். வித்யா கர்வம். தொழில் ஆணவம். இதை சிவன் வெறுக்கிறார். சிவன் என்றாலே தேவோன் கா தேவ். மஹாதேவ். மஹாதேவன். உலகம். அண்ட சராசரங்கள் அனைத்தும் மாயை என்னும் போது சிவன் பல இடங்களில் பல நேரங்களில் பல கதைகளில் பல புராணங்களில் நான் சொன்னது தான் சட்டம். எனது முடிவே இறுதி. என்று எக்சப்ஷன் காட்டுகிறார். இதை உணராத யாராக இருந்தாலும் அடி உதை மிதி தான். நெற்றிக்கண் திறந்து அக்னியால் நக்கீரர் மாண்டார். பிறகு உயிர்த்து எழுந்தார். 
எமன் உதை பட்டான். 
வைகை ஆற்றில் சோம்பேறியாக தூங்கிய சிவன் முதுகில் பாண்டிய மன்னன் அடித்த அடி கருவில் உள்ள சிசுவுக்கும் விழுந்தது. ஆகவே முழு முதற் கடவுள். மஹாதேவன். என்றாலே எக்சப்ஷன் தான். அவர் சொல் தான் இறுதிச் சொல். அங்கு ஆணவம் கூடாது. எடுபடாது. அவர் தனது சுப்ரீம் பவர் காண்பிக்க செய்த லீலைகள் இவை. இதை மக்களும் தேவர்கள் என்ற எமன் நக்கீரர் பாண்டிய மன்னன் போன்றோரும் உணரவே செய்த திருவிளையாடல் அது. 

கடவுள் சொல் கேள். 
கடவுளைச் சரண் அடை. 
கடவுளை நண்பர் ஆகக் கொள். 

நீ செய்வது எல்லாம் சரி ஆகும். 

அதை விடுத்து நான். 
என் கடமை. 
என் தொழில். 
என்று அகங்காரம் ஆணவம்
கொண்டால். 

அடி. மிதி. உதை. உண்டு. 
நெற்றிக்கண் எரிப்பு உண்டு. 

இது தான் நீதி.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்