Idumban. Asuran. Hidimba Devi Temple. Kullu. Manali. Idumban Kovil. Palani. All Scheduled Tribes. Aadhi Dravidars of India. Sri Lanka. Ravanan + Idumban same blood.
திருஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறை பாடல்கள் 1469 ********************************************* 136 பதிகங்கள் ; பதிகம் எண் 17 88 கோவில் : திருஇடும்பாவனம் பாடல் எண் 177 பண் : நட்டபாடை ----------------------------------------------------------------------- மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் இனமாதவ ரிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. பொழிப்புரை : --------------------------------------- மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப்பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும். பாடல் எண் : 178 ------------------------------------------------------------------- மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி நிலையார்தரு...