Second Marriage IPC494 IPC495 Second Wife etc

#Bigamy - இருதார மணம் : பெண்களுக்கு சட்டம் தரும் பாதுகாப்பு!
::::::::::::::::*:::::::::::::::::*::::::::::::::::::::*::::::::::::::::::

இரண்டாவது மனைவி - சட்டம் எப்படி அணுகுகிறது?
நமது நாட்டில் ஒரு கணவன் அல்லது ஒருமனைவி உயிருடன் இருக்கும்போது, அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த திருமண பந்தத்தை சட்டப்படி முறித்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட கணவரோ அல்லது மனைவியோ  இன்னொரு திருமணம் செய்துகொள்வதை, சட்டம் குற்றச்செயலாகவே இருந்தாலும், பெரும்பாலான இடங்களில்,  அது சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமணமாகத்தான் கருதப்படுகிறது. சட்டப்படி செல்லாத திருமணம் என்றாலும்கூட,சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் நியாயத்தை நீதிமன்றத்தால் புறந்தள்ள முடிவதில்லை. அதுபோன்ற நேரங்களில், வழக்கின் தன்மைக்கேற்ப நீதிமன்றங்கள் இரண்டாவது மனைவிக்கும் கணவனின் சொத்து மற்றும் பணி ஓய்வு ஊதியப் பங்குகளில் சாதகமான தீர்ப்புகளை சில நேரங்களில்  வழங்கியுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு (#IPC) 494 மற்றும் பிரிவு 495  என்ன சொல்கிறது?

ஒரு மனைவியோ அல்லது ஒரு கணவனோ உயிருடன் இருக்கும்போதே தனது துணைக்குத் தெரியாமல், புதிதாக  மணம் முடிக்க இருப்பவரிடமும் அதைப்பற்றி சொல்லாமல் தனக்கு திருமணமானதை மறைத்து அவர்களில் யாராவது ஒருவர் இன்னொரு திருமணம் செய்துகொள்வது கிரிமினல் குற்றம் ஆகும். அதற்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494-ன் கீழ், பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்து அது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். மேலும், 495-ன் கீழ் புகார் அளித்து அது நிரூபிக்கப்பட்டால், முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்தவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.

இந்து திருமணச் சட்டம் என்ன சொல்கிறது?
(#Hindu_Marriage_Act)

இந்து மதத்தை சேர்ந்தவர்கள், முதல் திருமணம் நடைமுறையில் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்துகொண்டால், இந்து திருமணச் சட்டம் பிரிவு 17-ன்படி அது குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 மற்றும் 495ல் விளக்கப்பட்டுள்ள தண்டனை இதற்கும் பொருந்தும்.

சிறப்பு திருமணச் சட்டம் 1954 என்ன சொல்கிறது? (#Special_Marriage_Act)

எந்த மத சம்பிரதாயங்களையும் பின் பற்றாமல், சிறப்புத்திருமணச் சட்டத்தின் கீழ் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்தவர் எவரும் இரண்டாவது திருமணம் குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு சிறப்பு திருமணச் சட்டம் 1954 பிரிவு 43, 44 மற்றும்  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 ,495-ன் படி தண்டனை வழங்கப்படும்.

கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 என்ன சொல்கிறது?
(#Christian_Marriage_Act)

இரண்டாவது மணத்துக்கு எதிராக கிறிஸ்தவர் திருமண சட்டத்தில்  ஏதும் சொல்லப்படவில்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவர் தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அந்தத் தவறுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 193-ன் கீழ் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது? ( #Dissolution_of_Muslim_marriages_act)

முதல் திருமண உறவில் இருக்கும்போது, ஒருவர் மற்றொரு திருமணம் செய்து கொள்வதை இஸ்லாமியச் சட்டம் குற்றச் செயலாக கருதுவதில்லை.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு
காவல்துறைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற  ஒருஅதிகாரியின் இரண்டாவது மனைவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 'மறைந்த தன் கணவரின் ஓய்வூதியத் தொகை மற்றும் இதர பணப்பலன்களில் முதல் மனைவிக்கு இணையாகத் தனக்கும் உரிமை வழங்க வேண்டும்' என்று ரிட் வழக்கு தாக்கல் செய்தார்,  தனது கணவர், அவரது முதல் திருமணத்தையும், குழந்தைகளையும் மறைத்து, தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகவும், உண்மை தெரிந்த பின்பு சமரச மன்றத்தில் தாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தன் வழக்கில் விளக்கமும் அளித்திருந்தார்.
அரசாங்கத்தில் இருந்த ஆவணங்களில், அந்த காவல் அதிகாரியின் மனைவி என்ற இடத்தில் வழக்கு தொடர்ந்த இரண்டாவது மனைவியின் பெயர் எந்த இடத்திலும் இல்லை என்பதால், கணவரின் ஓய்வூதியப் பலனை தனக்கு அளிக்கக் கோரிய இந்த இரண்டாவது மனைவியின் வழக்கை நீதிமன்றம்  நிராகரித்தது.

தமிழ்நாடு பென்ஷன் ரூல்ஸ் 1978 என்ன சொல்கிறது? (#Tamilnadu_pension_rules)

ஒரு அரசு ஊழியரின் குடும்ப ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கு இறந்தவரின் மனைவியை மட்டுமே சேர்க்க முடியும் என்று  சொல்கிறது.
நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு!
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, அரசாங்க ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் துறை வாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பைகேமி குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் தமிழக அரசுக்கு  உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.  மேலும், அரசு ஊழியர்கள் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்கும்போது, அவர்கள் கொடுக்கும் மனைவி தொடர்பான விவரங்களை  ஏற்கனவே உள்ள அரசு ஆவணங்களின்படி சரிபார்த்துக் கொண்ட பிறகே அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இரண்டாவது திருமணம் - கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்!
மேற்கண்ட வழக்கின் தீர்ப்பில்தான், முதல் திருமணத்தை ரத்து செய்யாமல், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்வது கிரிமினல் குற்றம் என்றும், இது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இரண்டாவது திருமணம் செய்த அரசு ஊழியரின் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது.

இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றப்பட்டால்?

ஒரு பெண், தான் ஏமாற்றப்பட்டு இரண்டாவது திருமணம் செய்யப்பட்டால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று உடல் உறவுக்கு உட்படுத்தப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 493, 496, 497, 498 வரையுள்ள பிரிவுகள் மற்றும் 415 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்க வேண்டும்.

முறையற்ற இரண்டாம் திருமணமும் #காவல்துறை அதிகாரமும்:- (#police)

முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் என்ன மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பு:

கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால்., CRL. OP. NO - 15994/2010, DT - 2.1.2018, தீர்ப்பு விவரம்.

கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால் அதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 கூறுகிறது.

ஆனால் இந்த குற்றச் செயலை பொறுத்தவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முடியாது. இருதார மணம் (Bigamy) குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன் கீழ் தனிப் புகார் ஒன்றினை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமே தவிர, காவல்துறையினரிடம் புகார் அளிக்க முடியாது. 

காவல்துறையினரும் FIR பதிவு செய்ய முடியாது. 

அவ்வாறு இருதார திருமணம் தொடர்பாக காவல்துறையினர் FIR பதிவு செய்வது சட்டப்படி தவறானது ஆகும்.

அதேபோல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்துறையிடம் அளிக்கும் புகாரில் உடனடியாக ஒரு FIR-ஐ பதிவு செய்யக்கூடாது. 

அந்தப் புகாரை மாவட்ட சமூகநல அதிகாரியின் விசாரணைக்கு அனுப்பி அவரிடமிருந்து ஒரு அறிக்கையை பெற்று அதன்பிறகே காவல்துறை FIR-ஐ பதிவு செய்ய வேண்டும். இது வரதட்சனை புகார்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 15994/2010
DT - 2.1.2018, D. கெளதமன் பாபு மற்றும் பலர் Vs ஆய்வாளர், W-16 அனைத்து மகளிர் காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் நிலையம், சென்னை 2018-1-TLNJ-CRL.

சட்ட ரீதியாக/முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் -  FIR போட முடியுமா அல்லது முடியாதா? உயர்நீதிமன்ற தீர்ப்பு: (#High_Court)
-----------------------------------------------------------------------

கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை #திருமணம் (#Marriage)செய்தால்., CRL. OP. NO - 15994/2010, DT - 2.1.2018, தீர்ப்பு விவரம்.

கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால் அதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 (#IPC)  கூறுகிறது.

ஆனால் இந்த குற்றச் செயலை பொறுத்தவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முடியாது. இருதார மணம் (#Bigamy) குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன் (#CrPC) கீழ் தனிப் புகார் ஒன்றினை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமே தவிர, காவல்துறையினரிடம் #புகார் அளிக்க முடியாது.காவல்துறையினரும் #FIR பதிவு செய்ய முடியாது. அவ்வாறு இருதார திருமணம் தொடர்பாக காவல்துறையினர் FIR பதிவு செய்வது சட்டப்படி தவறானது ஆகும்.

அதேபோல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்துறையிடம் அளிக்கும் புகாரில் உடனடியாக ஒரு FIR-ஐ பதிவு செய்யக்கூடாது. 

அந்தப் புகாரை மாவட்ட சமூகநல அதிகாரியின் விசாரணைக்கு அனுப்பி அவரிடமிருந்து ஒரு அறிக்கையை பெற்று அதன்பிறகே காவல்துறை FIR-ஐ பதிவு செய்ய வேண்டும். இது #வரதட்சனை (#Dowry) புகார்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 15994/2010
DT - 2.1.2018, D. கெளதமன் பாபு மற்றும் பலர் Vs ஆய்வாளர், W-16 அனைத்து மகளிர் காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் நிலையம், சென்னை 2018-1-TLNJ-CRL.சம்மந்தபட்டவை.

 என்றென்றும் மக்கள் பணியில்....
இரா. கணேசன்
பாதிக்கப்பட்டோர் கழகம்,
அருப்புக்கோட்டை.
9443920595

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala