Fake Documents. Forgery. Fraudulent Documents. IPC Punishments

இந்திய தண்டணைச் சட்டத்தில் போலி (பொய்) ஆவணங்கள் பற்றி பிரிவு 463 முதல் பிரிவு 474 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 463 
யாருக்காவது சேதம் அல்லது கேடு விளைவிக்கின்ற அல்லது மோசடி செய்ய அல்லது மோசடி செய்யப்படலாம் என்ற எண்ணத்துடன் ஒரு பொய்யான பத்திரம் அல்லது அதன் ஒரு பகுதியை தயாரிப்பவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆவார்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 464
கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர், கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தன்னுடைய கையெழுத்தை போடாமல், தன்னுடைய பெயரை எழுதினால், அவர் பொய் ஆவணம் தயாரித்த குற்றம் செய்தவர் ஆகிறார். 

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465 
பொய்யாவணம் புனைகின்ற எவரொருவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தீர்ப்பு வழங்கப்படும். இதற்கு பிடியாணை வேண்டும். ஜாமீன் உண்டு.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 466 
ஒரு நீதிமன்றத்தில் உள்ள பதிவுக்கட்டு அல்லது பொது ஊழியரால் ஒரு துறையில் பதிவேடாக வைத்து பராமரித்து வருகின்ற பத்திரத்தை அல்லது ஆவணத்தை பொய்யாக புனைகின்ற எவரும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை வித்தித்து தண்டிக்கத் தக்கவராவார். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 467
மதிப்புமிக்க பத்திரம் அல்லது உயில் அல்லது காசோலை எதையும் பொய்யாக புனைகின்ற எவரும் ஆயுள் தண்டணை அல்லது பத்து ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 468
பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற உட்கருத்துடன் பொய் ஆவணம் புனைகின்ற எவரும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கத் தக்கவராவார். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம். இதுபோன்ற குற்றத்தைச் செய்தவரை கைது செய்ய பிடியாணை வேண்டியதில்லை. மேலும் இக்குற்றம் புரிந்தவருக்கு ஜாமீனும் கிடையாது 

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 469
யாருடைய பெயரையாவது கெடுக்க வேண்டும் என்று எண்ணி ஒரு பத்திரத்தினை பொய்யாக புனைகின்ற எவரும் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கத் தக்கவராவார். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 470
ஒரு பத்திரத்தின் அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியானது பொய்யாக புனையப்பட்டு இருந்தால், அந்தப் பத்திரம் அல்லது அந்த ஆவணம் முழுவதுமே பொய் ஆவணம் ஆகும்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 471
பொய்யாக புனையப்பட்ட ஒரு பத்திரத்தை அல்லது ஒரு ஆவணத்தை அது பொய்யானது என்று தனக்குத் தெரிந்திருந்தே பயன்படுத்துபவர் எவரையும் அந்த பத்திரத்தை அவர் புனைந்தது போன்றே தண்டிக்கப்படுதல் வேண்டும்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 472
இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 467ல் கூறப்பட்டுள்ள பொய் ஆவணம் அல்லது போலி பத்திரம் தயாரிப்பதற்கு முத்திரை அல்லது வேறு கருவி ஏதேனும் அத்தகைய எண்னத்துடன் வைத்திருப்பவர் எவர் ஒருவரும் ஆயுள் சிறை அல்லது ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 473
இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 467ல் கூறப்பட்டுள்ள பிரிவின்படி இல்லாமல் இந்த அத்தியாயத்தில் இருக்கின்ற ஏதேனும் ஒரு பிரிவின்படி பொய் ஆவணம் புனையும் பொருட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்று முத்திரை அல்லது வேறு கருவி ஏதேனும் தயாரிக்கின்ற அல்லது அது கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டது என்று தெரிந்திருந்தே வைத்திருப்பவர் எவர் ஒருவரும் ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 474
இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 466 மற்றும் பிரிவு 467களில் கூறப்பட்டுள்ள பொய் ஆவணத்தை அல்லது போலி பத்திரத்தை அது போலியானது என்று தெரிந்தே தம்வசம் வைத்துள்ள எவர் ஒருவரும் ஏழு ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala