Mistake of Fact CRPC 157(1) and Final Report
*ஒரு குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு மேல் விசாரணைக்காக அமர்வு நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டதற்கு பின்னர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை (Further Investigation) நடத்தும்படி, காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அமர்வு நீதிமன்றத்தில் புகார்தாரர் (Defacto Complainant) கோர முடியும்*
நீதிமன்றங்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், காவல்துறையினருக்கு தான் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமே தவிர, புகார்தாரர் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்வது தவறாகும். *உச்சநீதிமன்றம் "ரீட்டாநாக் Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-2010-SC-CRL-401"* என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ள சங்கதிகளை வைத்து இவ்வாறு புகார்தாரர் மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை தள்ளுபடி செய்கின்றன.
ஆனால் மேற்கண்ட "ரீட்டாநாக்" வழக்கு தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் 2013 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் *"வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)"* என்ற வழக்கில், ஒரு குற்ற வழக்கில் உண்மையை கண்டுபிடிக்க, அந்த வழக்கின் புகார்தாரர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு காவல்துறையினருக்கு ஓர் உத்தரவினை பிறப்பிக்கும்படி குற்றவியல் நடுவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கலாம் என்று கூறியுள்ளது.
ஒரு குற்ற வழக்கில் புலனாய்வு என்பது மிகவும் விரிவான ஒரு பகுதியாகும். அந்த புலனாய்வு என்பது காவல்துறையின் செயல்பாடுகளுக்குள் ஒன்றாகும். அந்த புலனாய்வு பகுதிக்கு காவல்துறையினர் தான் தலைமைப் பொறுப்பிலுள்ள நபராவார். ஆனால் அத்தகைய *அதிகாரம் கொண்ட காவல்துறையை யார் கண்காணிப்பது?* *அவர்களை சட்டத்தின் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது?* அவர்கள் வரம்பு மீறி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அவர்களை தட்டி கேட்பது யார்? அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையென்பதை அவர்களுக்கு சொல்லக்கூடியவர் யார்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் உட்பட பல சட்டங்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளில் மீது அவர்களுடைய கவனத்தை செலுத்தும் படி செய்யக்கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது? நியாயமான, ஒரு சார்பில்லாத, திறமையான புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய பொறுப்பு யாருக்கு உள்ளது? புகார்தாரரின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தக்கூடிய நபர் யார்?
காவல்துறையினருக்கு ஒரு வழக்கை பதிவு செய்யக்கூடிய அதிகாரமும், ஒருவரை கைது செய்யக்கூடிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக நாட்டில் அந்த காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற நபர் நீதிமன்றமாக தான் இருக்க முடியுமே தவிர, வேறு யாரும் இருக்க முடியாது. அந்த அதிகாரம் பெற்ற அமைப்புக்கு காவல்துறையினர் பதில் அளிக்க கடமைபட்டவராவார்கள். அந்த வகையில் காவல்துறையினரின் புலன் விசாரணை திசை மாறிப் போகின்ற நிலையில்,திறம்பட புலனாய்வு இல்லாத நிலையில், பாரபட்சமாக இருக்கக்கூடிய நிலையில், அந்த புலனாய்வில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியது அவசியமாகும்.
நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்கு உள்ளது. ஒரு குற்ற வழக்கில் உண்மை வெளியே கொண்டு வரப்பட வேண்டும். நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும். குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் "வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர்களும். நீதிபதிகளும் சட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சட்டம் என்பது உயிர் வாழ்கிற ஓர் உயிரினம் ஆகும். அந்த சட்டம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் அடிப்படை சட்ட அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
எனவே ஒரு குற்ற வழக்கினை மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோர புகார்தாரருக்கு உரிமை உள்ளது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 1779/2016, DT - 11.8.2016
V. Mohan Vs Inspector of police, East Police Station, Thanjavur
(2016-2-TNLR-265)
இதில், ஒவ்வொரு வழக்கின் குற்ற எண்ணும் (Crime Number) குறிப்பிடப்பட்டு, புலனாய்வு காலக் கிரமப்படி பதிவு செய்யப்படுகிறது.
புலனாய்வு செய்கிற காவல் அலுவலர் ஒவ்வொருவரும், புலனாய்வில் தாம் எடுக்கும் நடவடிக்கைகளை இந்த நாட்குறிப்பில் அந்தந்த நாளில், தமக்கு வந்து சேர்ந்த நேரம், புலனாய்வை தாம் ஆரம்பித்த நேரம், முடித்த நேரம், தாம் பார்வையிட்ட இடம் அல்லது இடங்கள் மற்றும் தம் புலனாய்வின் மூலம் நிச்சயிக்கப்பட்ட விவரங்களை பற்றிய குறிப்பு ஆகியவற்றை பதிவு செய்து வருதல் வேண்டும்
குற்றவியல் நீதிமன்றம் எதுவும், அந்நீதிமன்றத்தில் பரிசீலனை அல்லது விசாரணையிலுள்ள வழக்கு சம்பந்தமான காவல் நாள்குறிப்புகளை தருவிக்கலாம். மற்றும் அத்தகைய நாள்குறிப்புகளை அவ்வழக்கில் சாட்சியமாக அல்லாமல், ஆனால் அத்தகைய பரிசீலனை அல்லது விசாரணையில் அந்நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் இதை பயன்படுத்தலாம்.
எதிரிக்கோ அவரது முகவருக்கோ அத்தகைய நாள்குறிப்புகளை வரவழைக்கும் உரிமை கிடையாது. அவற்றை நீதிமன்றம் பார்வையிட்டிருக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே அவற்றை பார்ப்பதற்கும் அவருக்கோ, அவர்களுக்கோ உரிமை கிடையாது. ஆனால் அவற்றை எழுதிய காவல் அலுவலர் தான் நினைவுபடுத்தி கொள்வதற்காக நீதிமன்றத்தில் பயன்படுத்தினால், அல்லது அத்தகைய காவல் அலுவலரின் கூற்றை முரண்படுத்துமானால், இந்திய சாட்சிய சட்டம் பிரிவுகள் 145 மற்றும் 161 ன் நிலவரத்திற்கேற்ப இயங்குதல் வேண்டும்....
*பிழை வழக்கு* (*மிஸ்டேக் ஆப் பேக்ட்*)
ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR ( Community Service Register) எனப்ப்டுகின்ற "மனு ஏற்புச் சான்றிதழ்" அளிக்க வேண்டும்.
அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
புகார் அளித்த நபருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.
ஒரு வேளை கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 - (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்.
அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது உத்தரவிட முடியும். இதனையே நாம் கோர்ட் டைரக்ஷன் என்கிறோம்.
நீதிமன்ற உததரவுக்குப் பின், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157ன் கீழ் அந்த வழக்கை காவல்துறை அதிகாரி புலனாய்வு செய்து நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இது போன்ற வழக்குகளில் இர்ண்டுக்கு மேலான குற்றங்கள் செய்யப்பட்டிருந்து, அவற்றில் ஏதேனும் ஒரு குற்றம் கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கானது குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 155(4)ன் கீழ் கைது செய்யப்படக்கூடிய வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
ஒருவேளை புலனாய்வு செய்வதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று விசாரணை அதிகாரிக்கு தோன்றினால், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(1)ஆ-ன் கீழ் அந்த வழக்கை அவர் புலனாய்வு செய்யக் கூடாது. இதனையே "பிழை வழக்கு" (Mistake of Fact) என்கிறார்கள்.
அதே நேரத்தில் ஒரு வழக்கை புலனாய்வு செய்வதாக இல்லை என்பதை குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(2)ன் கீழ், புகார் அளித்தவர்க்கு விசாரணை அதிகாரி உடனடியாக அறிவிக்க வேண்டும்.
காவல் நிலை ஆணைகள்-660ன்படி "பிழை வழக்கு" (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்ட பின், விசாரணை அதிகாரியானவர், வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை புகார் அளித்தவர்க்கு (காவலர் படிவம் எண்:90ல்) செய்ய வேண்டும்.
புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், அறிக்கை அனுப்ப வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணை அதிகாரியால் பிழை வழக்கு (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,இது பற்றி ஏதேனும் கூற விரும்பினால். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் முறையிடலாம்! என்று புகார் தந்தவர்க்கு நீதிமன்ற நடுவர் சம்மன் அனுப்புவார்கள்.
Comments
Post a Comment