அம்மாவின் வாசனை. கவிதை ஆசிரியர் கனிமொழி MP. DMK. இசை = இளையராஜா. பாடியவர் = பவதாரிணி.
அம்மாவின் வாசனை.
கவிதை ஆசிரியர்
கனிமொழி MP. DMK.
இசை = இளையராஜா.
பாடியவர் = பவதாரிணி.
அம்மாவின் வாசனை...
என் அம்மாவின் வாசனை...
அது சந்தனம் இல்லை...
ஜவ்வாதோ...
இப்போது அழகான புட்டிகளில் விற்கும் வாசனை திரவியமோ...
எதைப்போலும் இல்லாத
புது மணம்.
அம்மாவின் வாசனை...
என் அம்மாவின் வாசனை...
சின்ன வயதில் அவளைக் கட்டிக் கொண்டு தூங்கிய போது....
சின்ன வயதில் அவளைக் கட்டிக் கொண்டு தூங்கிய போது....
மெல்லியதாய் வந்து மூக்கைத் தழுவும்...
அவள் அவிழ்த்துப் போட்ட சேலையைக் சுற்றிக் கொண்டு திரிந்த போது....
அவளின் வாசனையை பூசிக் கொண்டதாய் தோன்றும்....
முதல் மழையின் மண் வாடை போல் மூச்சு முட்ட நிறுத்தி வைத்துக் கொள்ளத் தூண்டும்....
அம்மாவின் வாசனை...
என் அம்மாவின் வாசனை...
எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு மருந்தாய்... மருந்தாய்....
அவள் மடியில் தலை வைத்து தூங்கிய போதெல்லாம்....
பாதுகாப்பாய்....
என்னைத் தழுவிய மணம்....
அவள் என்பதே... ஏ.... ஏ...
அவள் என்பதே... அதுவும் சேர்ந்து தான்... (திமுக தலைவர் மு கருணாநிதி???)
வளர்ந்து விட்ட மனதின் சுவர்கள்...
அவளைக் கட்டிக் கொள்ள விடாத போதும்....
ஆ ஹாஹா.....
மெத்தென்ற இதழாய் வருடிப்போகும்....
தேவைகளின் தடம் பிடித்து
தூரம் வந்து விட்ட போதும்...
எனக்கு மட்டுமே புரியும் அவளின் கருவறை மணத்தை....
அள்ளி... அள்ளி... என்...
வீடெங்கும் தெளித்து....
சுருண்டு படுத்து....
தூங்கிப் போக வேண்டும்...
அம்மாவின் வாசனை....
என் அம்மாவின் வாசனை...
26 ஜனவரி 2024...
Comments
Post a Comment