How to see Ayodhya Ram Mandir. Rameswaram to Ayodhya Train
குறைந்த செலவில் அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள் கவனத்திற்கு. ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது . *ரயில் எண் 22613* RMM AYC சரியாக புதன் கிழமை காலை 9 மணிக்கு செல்கிறது. *அயோத்தியா தாம்* என்ற ரயில் நிலையம் இறங்கவும் அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 km மீண்டும் வர வேண்டும். அயோத்தியா தாம் இறங்கி நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்து தான் வர வேண்டும். அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், *அனுமான் காரி* என்னும் அனுமான் கோட்டை காவலாக இருக்கும் கோவிலை அடையலாம். 50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலை உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி நுழைவு வாயிலை அடையலாம். பெரிய luggage bag இருந்தால் போலீஸ் checking முன்பே வலது பாகத்தில் locker அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல் , watch தவிர) வைத்து செல்லலாம். உள்ளே சென்றவுடன் இலவச பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிற...