முத்து குமார ஸ்வாமியா பிள்ளை காலமாகி விட்டார். வயது 84
Wednesday, September 10, 2008
முத்து குமார ஸ்வாமியா பிள்ளை
முத்து குமார ஸ்வாமியா பிள்ளை காலமாகி விட்டார்.
வயது 84
நல்ல சாவுதான்.
வெள்ளைக் கதர் வெட்டி, வெள்ளை கதர் சட்டை.
காந்தி காங்கிரஸ் பற்றாளர்.
சுதந்திர போராட்ட வீரர்.
மங்கையர் கரசியின் மணாளன்.
மாணிக்க வாசகம் பிள்ளையின் தம்பி.
இந்திரா, சங்கர், சரவணை, உமா வின் தகப்பன்.
தூத்துக்குடி தும்புக் கிட்டங்கியில் வேலை.
திசையன் விளை பூர்விகம்.
சைக்கிளில் வேலைக்கு செல்வaar.
சங்கர் காலனியில் ஜாகை
ஒடிசல் தேகம்
ஒட்டிய கன்னம்
படிய வாரிய தலை
பண்பும் அமைதியும் கொண்ட உருவம்
அதிர்ந்து பேசி கோபப் பட்டு நான் பார்த்தது இல்லை
அன்னார் இன்று இல்லை
எனது சிறு வயது முதல் பெரும்பாலும் இவர்களுடன் கழிந்தது
து.டி சங்கர் காலனி...
பொன்னம்பலம் பிள்ளை விடு...
8ரூம்கள்
கிச்சன்
attached பாத் ரூம், Toilet
மோட்டார் பம்ப் நீர் [in year 1971]
நால் புறமும் தோட்டம்
அந்த வீட்டை அனுபவித்தது நாங்கள் தான்
வீடா அது? கோட்டை...
பொன்னம்பலம் பிள்ளைக்கு "ஆப்பு" அடித்தவர் இந்த மு.கு.சு.
சிலர் சொன்னார்கள்.. மு.கு.சு வும், மாணிக்க வாசகம் பிள்ளையும் சேர்ந்துதான் ஆப்பு வைத்தார்கள் என்று...
மு.கு.சு கடைசியில் தூ.டி. தும்புக் கிட்டங்கி ஓனருக்கும் [நாடார்] ஆப்பு வைத்தக கேள்வி...
ஒரிஜினல் வெள்ளாளன் புத்தி...
டைபாடு சில மாதம் முன்... இப்ப இறந்தது மாரடைப்பில்
போய் விட்டார் நல்ல சாவுதான்.. பிள்ளைகளை நல்ல கரை எத்திவிட்டார்
கடைசி வரை B/W TV தான் பார்த்தார்.
நிறைய ரேடியோ நியூஸ் கேப்பார்.. தினமணி படிப்பார்..
இந்திரா காந்தி இறந்த போது சாப்பிடாமல் இருந்தார். போட்டோ வைத்து அழுதார்.
முத்து குமார ஸ்வாமியா பிள்ளை காலமாகி விட்டார்.
வயது 84
நல்ல சாவுதான்.
Comments
Post a Comment