அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்: (1) "நசி, மசி" என்றிட எமனையும் வெல்லலாம். (2) "மசி, நசி" என்றிட மன்னனும் மாண்டிடுவான். (3) "நங், நங்" என்றால் கெடுதல் நிகழாது. (4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள் ஓடும். (5) "வங், வங்" என்றால் உலகமும் வசியமாகும். (6) "வசி, வசி" என்றால் பீடைகள் விலகும். (7) "மசி, மசி" என்றால் சகல விஷங்களும் இறங்கும். (8) "அசி, அசி" என்றால் செல்வம் அமோகமாக பெருகும். (9) "உசி, உசி" என்றால் செல்வம் யாவும் ஒழிந்து போகும். (10) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய் பிசாசுகள் ஓடும். (11) "சிவ, சிவ" என்றால் தீவினைகள் அழியும். இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன. - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து சித்தர்களின் குரல் சிவ shangar
மலையூர் "மம்பட்டியான்" வாழ்ந்த வரலாறு .... சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன் மம்பட்டியான். இந்த மம்பட்டியானை கதாபாத்திரமாக வைத்து, "மலையூர் மம்பட்டியான்" என்ற பெயரில் சினிமாப்படம் வெளிவந்தது. தியாகராஜன்,சரிதா நடித்த இந்தப்படம் ஓகோ என்று ஓடி வசூலை வாரிக் குவித்தது நினைவிருக்கலாம். மம்பட்டியான் சாதாரண ஆள் அல்ல. 27 கொள்ளை, 9 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். போலீஸ் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு காடுகளில் 5 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்தவன். ஆனால் காதல் மோக உருவில் எமன் அவனுடைய உயிரை பறித்துக்கொண்டான். சுருக்கமாக சொன்னால் மம்பட்டியானின் வாழ்க்கை, மர்ம கதைகளில் வரும் சம்பவங்கள் போல இருக்கும். மம்பட்டியானின் உண்மை பெயர் அய்யாத்துரை. சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் சரகம் கொல்காரனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தை பெயர் மொட்டையன். மம்பட்டியானுக்கு 2 மனைவிகள். மூத்த மனைவியின் பெயர் சின்னப்பிள்ளை என்கிற நல்லம்மாள். இவளுக்கு நல்லப்பன் என்ற மகனும், பாப்பா என்ற மகளும்...
50 ஆனந்த மாலை நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவினாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்ப தாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன். திருவாசகம்-ஆனந்த மாலை பண் : பாடல் எண் : 1 மின்னே ரனைய பூங்கழல்க ளடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே. பொழிப்புரை : இறைவனே! உன் திருவடியை அடைந்த அன்பர்கள் இவ்வுலக மாயையைக் கடந்தார்கள். தேவர்கள் எல்லாம் மலர்களால் அருச்சித்து வணங்கி நின்றார்கள். அப்படி இருக்கும் போது, கல்லை நிகர்த்த மனத்தை உடையவனாய்க் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை அடையும் வகையைச் சொல்...
Comments
Post a Comment