Kasi Visvanathar Kovil

#படித்தது_பிடித்தது.
...
#நட்பின்_பதிவு
...
#தனிகுடும்பமாக_காசிசெல்பவர்களுக்கு 

சிறு தகவல்... :

காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. 

- ஒன்று எங்கே தங்குவது? 

- இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?

இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!
அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

- அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

- சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும்.  அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

- கட்டணம் உண்டா?

உண்டு! 

தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். 

உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! 

குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. 

பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. 

மூன்று விதமான அறைகள் உள்ளன. 

1. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்;

2. அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். 

3. மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. 

சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.
மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். 

மற்ற சமயங்களில் இருக்காது. 

தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். 

அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். 

உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. 

அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.
இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம். 

கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்.

டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்.

குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது. Full Gen Set வசதி உண்டு.
சரி, #உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. 

இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். 

சைவ உணவுகள் மட்டுமே. 
நம்பிச் சாப்பிடலாம். 
ருசியாக இருக்கும்.

1. காலைச் சிற்றுண்டி: 

நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே.

2. மதிய உணவு: 

நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 

90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். 

சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3.  மாலை 4 மணி டீ உண்டு.

4.  இரவு  உணவு: 

7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே.

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.

2 முறை அங்கே தங்கி இருக்கிறேன்..‌
முக்கியமாக" நாட் கோட் சத்தர் " என்றால் தான் ஆட்டோ ரிக்ஷா வாலா விற்கும் புரியும்.

விஸ்வநாதரின் காலை மற்றும் இரவு பூஜை பொருட்கள் இங்கிருந்து ஊர்வலமாக செல்லும்.
நாமும் கலந்து கொள்ளலாம்.

சத்திரம் உள்ளேயே நாகேஸ்வரர் , பஞ்ச லிங்க சிவன் கோயில் கள் உண்டு.
 
நகரத்தாரின் பல ஆண்டுகளாக இறை சேவை

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி