மாந்தி என்ற குளிகன்

Agathiar Alosanai Maiyam
December 19, 2017 ·
ஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள்
ஜாதகத்தில் மாந்தி என்பது தமிழ்நாட்டில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை..ஆனால் கேரளாவில் அதை முக்கியமாக எடுத்துக்கொள்வார்கள். .சனி புத்திரன் மாந்தி. எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள். அதாவது ஜூனியர் சனிபகவான் .
ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது. அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில்
நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம்.
ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம்.
கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம்.
இன்னொரு கதையும் உண்டு, ராவணன் தன் அரசவையில், அரியணை இருக்கும் இடத்தில் ஏறுவதற்கான படிக்கட்டில் சனியையும் கல்லில் படிக்கட்டாகி, குப்புறப் போட்டு வைத்திருந்தானாம். அதுதான் முதல் படிக்கட்டாம். தினமும் அதை மிதித்துக் கொண்டு, ஏறிச் சென்றுதான் தன் அரியணையில் அமர்வானாம்.
அவனுடைய கொட்டத்தை அடக்க நினைத்த நாரதர், அவனுடைய சபைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்த போது சொன்னாராம், " ராவணா, உன்னுடைய தவவலிமை என்ன? உன்னுடைய பெருமை என்ன? நீ எதற்காக சனியை குப்புறப் போட்டு மிதித்துக் கொண்டு செல்கிறாய்? நிமிர்த்திப்போட்டு, சனியின் நெஞ்சில் அல்லவா நீ மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும்?"
நெகிழ்ந்துபோன ராவணன் உடனே அதைச் செய்தான்.
என்ன ஆயிற்று?
நிமிர்ந்து கிடந்த சனியின் மார்பில், அவன் கால்கள் படும்போதெல்லாம், சனியின் பார்வை அவன் மேல் விழ ஆரம்பித்தது.
சனியின் பார்வை படப்பட அவனுடைய வலிமை எல்லாம் நீங்கி, கெட்டவை குடிகொள்ள ஆரம்பித்தன. கடைசியில் மாற்றான் மனைவி சீதையின் மேல் கையை வைத்தான். வைத்த பிறகு நடந்ததைத்தான் அனைவரும் அறிவோமே!
கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகப் பலன்களைச் சொல்லும்போது, மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன்களைச் சொல்வார்கள். அது சரியாகவும் இருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள், மாந்தியையும் பார்ப்பதில்லை.
மாந்தி தான் இருக்குமிடம் அதற்கு நேர் ஏழாமிடம், தான் இருக்குமிடத்திற்கு முன்னே உள்ள இடத்தையும் (2ம் வீடு ), தான் இருக்குமிடத்திற்கு பின்னே உள்ள இடத்தையும் (12ம் வீடு) பார்க்கும் வலிமையை பெற்றவராகும்.
தான் இருக்குமிடம் , பார்க்கும் இடம் இவைகளுக்கு தனது நிலையைப் பொறுத்து , பாவகத்தின் தன்மையை முழுமையாக மாற்றி அமைக்கும் பலம் படைத்தவர் .
உதாரணமாக : அழகு தரும் லக்கினமாக இருந்து இவர் முழு பலத்துடன் இருந்துவிட்டால் அவலட்சணமான உருவத்தை தந்துவிடுவார்.
பன்னிரெண்டு பாவங்களில் இவர் இருந்தால் எம்மாதிரியான பலன்களைத் தருவார் என பொதுவான பலன்கள் இங்கே தரப்படுகின்றது. இது பொதுப்பலனே தவிர முழுபலன் அல்ல. காரணம் ஜாதகத்தில் உள்ளபலம்பொருந்திய சுபருடன் சேர,சுபக் கிரஹ பார்வை , மாந்தியின் தாக்கத்தினை குறைக்கலாம் .சுபர் பார்க்க நல்ல பலனும் உண்டாகும். மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல கெடுப்பர்.
லக்னத்தில் நிற்க நோய் உண்டாகும்.ஊனம் உண்டாகும்...அதிக மன சோர்வு,உடல் சோர்வு கெட்ட குணநலன்,கெட்ட நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் . ஜாதகன் பந்தா' பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள். குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
லக்னத்துக்கு 2ல் நிற்க,மோசமான பேச்சு ,வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா இருக்கும்.நஷ்டம் அதிகம் சந்திப்பார்...சிலர் மிக கருமியாகவும் இருப்பர்..குடும்ப வாழ்வில் சோதனைகள் அதிகம் உண்டாகும். ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால்,
சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு
இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள்
இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள்.
இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில்
(Dictionary)மட்டும்தான். குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
3ல் நின்றால் தனக்கு பின் பிறந்த இளைய சகோதரன் ,சகோதரிகளுடன் பகை உண்டாகும் அல்லது அவர்கள் முன்னேற இயலாமல் வாழ்க்கையில் போராடி கொண்டிருப்பர். ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக் கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது.
சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின்
தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
4ல் நின்றால் இவர் பிறந்த காலத்தில் தாயார் மிகவும் துன்பப்பட்டிருப்பார். பிற்காலத்தில்தான் அவருக்கு சுகம் உண்டு.இவருக்கு நிறைய அலைச்சல் உண்டாகும். முறையான சுகம் கிடைப்பதில் தடங்கல் ,சொத்துக்களில் சிக்கல் காணப்படும். ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor). நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்படும்.
5ல் மாந்தி புத்திர தோசம். குழந்தைகளால் கவலை,ஏமாற்றம் எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் தாமதம் உண்டாகும்.. நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி
மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.
நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன்.
அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள் தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள். மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
6ல் நிற்க ,சுற்றம் நட்பு பகையாகும் எதுக்கெடுத்தாலும் கையை ஓங்கி விடுவார் ..வம்பு,வழக்குகளை சந்திக்க நேரும். துணிச்சலானவன். தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women). நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
7ல் நிற்க,களத்திர தோசம்..கணவன் /மனைவி குணநலன் கெடுகிறது...வாக்குவாதம் அதிகரிக்கும். வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை
உடையவன். தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன்.
சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்! மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
8ல் மாந்தி அவமானம் அடிக்கடி சந்தித்தல் ,உடல் ஆரோக்கியம் கெடுதல் ,அதிர்ஷ்டமின்மை. கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது. அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
9ல் மாந்தி பூர்வீகம் கெடுகிறது. தந்தையுடன் மனக்கசப்பு...எதையும் குதர்க்கமாக பேசி தன்னை கெடுத்துக்கொள்ளுதல். தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள்
அவனை 'அம்போ' அல்லது 'சிவ சம்போ' என்று கடாசிவிட்டுப் போய்
விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும்.
(deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள்.
வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும். மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
10ல் மாந்தி தொழில் மேன்மை, பதவி, புகழ் கிடைக்கும். ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன்.
சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.
மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள். சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.
11ல் நிற்க ,எப்போதும் தன லாபம். ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது .உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும். ராஜயோகம். செல்வம், செல்வாக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
12ல் நிற்க,தூக்கமின்மை,அடிக்கடி பயணம் ,தீய கனவுகள். ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும்.
கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான
பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள்.
சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில்
இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு. வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல் கொண்டவராகவும் இருப்பர்.
ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசிநாதன் கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் அமையப் பெற்றால், ஜாதகர் பெரும் செல்வத்திற்கு அதிபதி யாகவும்; செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்பட எல்லா ஐஸ்வர்யங்களுடனும் வாழ்வார்.
லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகளினால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.
ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.
பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமாகும். தோஷம் மிகுதி.
மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவராவார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.
லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகளில் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.
லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.
லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்டமாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.
பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாளி ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசாலி
லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.
ஆண், பெண் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 5, 8, 11 போன்ற இடங்களில் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் செய்யும் கர்மப்பலனை அடுத்த பிறவியில் அனுபவிக்க நேரிடும்.
லக்னத்திற்கு 1, 4, 7, 10 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகள்- குற்றங்களைப் புரிய உள்ளார் என்பதை அறிவிப்பதாகும். அதேசமயம் ஜாதகர் செய்யக்கூடிய தவறுகள்- குற்றங்களுக்கேற்ப சரியான தண்டனைகளை உடனுக்குடன் அனுபவிக்க நேரிடும்

//

எந்த அளவு உண்மை 

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்