Great horoscope

#மேஷலக்னம்: இந்த லக்ன காரர்களுக்கு, செவ்வாய் அதிபதியாக வருவதால் அவரின் பலம் இவரிடம் தெரியும். இவருக்கு, சுக்ரன் 2, 7-க்கு அதிபதியாக வருவதால் செல்வத்தையும், மனைவியையும் இவர் தான் தருவார். எனவே இவர் யோகாதிபதி அந்தஸ்து பெற்றுவிடுவார். இருந்தாலும், இவரே மாரகாதிபதியாக வருவதால் இவருடைய உயிரை எடுப்பவரும் இவரே. மேலும், சூரியன், குரு சந்திரன் போன்றவர்கள் முழு சுபர வருகிறார்கள். சனி இவருக்கு அதிகமான பாதகமான செயல்களை செய்வார், இருந்தாலும் உத்தியோகம் தருபவர் இவரே. புதன் இவரது எதிரியாக இருக்கிறார்.

#ரிஷபலக்னம்: சுக்ரன் அதிபதியாக வருவதால் இவரிடம் சுகர பலம் இருக்கும். இவருக்கு, 8,11-க்குரிய குரு மாபெரும் எதிரியாக வருகிறார். செவ்வாய் மனைவியை தந்தாலும், இவரின் உறக்கம் செவ்வாயின் கையில். புதன் அருமையான நண்பராக உள்ளத்தால், அதிக நன்மை செய்பவர் இவரே. சந்திரன் ஒருவிதத்தில் இவருக்கு தொந்தரவே செய்வார். சூரியன் எதிரியாக இருந்தாலும் சுகம் தருபவர். சனி நல்லவர் வரிசையில் அமருகிறார்.

#மிதுனலக்னம்: புத்திசாலி புதன் இவரது அதிபதி. சந்திரன் எதிரியாக இருந்தாலும் குடும்பத்திற்கு அங்கம் இவரே. சூரியன் இயற்கையில் நண்பர் என்பதால் அதரவு உண்டு. சுக்ரனும் முதல் தர யோகாதிபதி, இருந்தாலும் விரையாதியாக இருப்பதால் அடம்பர செலவு செய்ய வைப்பர். அதி பயங்கரமான தீயவர் வரிசையில் முதலில் நிற்ப்பவர் குரு, அவரை தொடர்ந்து செவ்வாய் வருகிறார். சனி இவருக்கு நோய்களை தந்து, காப்பாத்துபவரும் இவரே.

#கடகலக்னம்:அமைதியின் இருப்பிடம் சந்திரனே இவரின் அதிபதியாக இருந்தாலும், சில நேரங்களில் கடல் அலைகள் கொந்தளிப்பது போல் ஜாதகரை கொந்தளிக்க வைப்பவரும் இவரே. சூரியன் இவருக்கு சுள் என்ற பேச்சை தந்து குடும்பத்தை தருபவர். குருவும் செவ்வாயும் நிறைய யோகபலன்களை செய்வார்கள். புதனும், சுக்ரனும், சனியும் எதிரிகளின் வரிசையில் இடம் பிடித்து கொண்டனர். சுக்ரன் தசை சூப்பர் என்று இவருக்கு இருந்தாலும், கடைசியில் இவரை கேவலமாக்கும் அல்லது படுக்க வைத்துவிடும். 

#சிம்மலக்னம்: சிங்கத்தின் சிறப்பு இவரிடம் இருக்க இவரின் அதிபதி சூரியனே. புதன் மிக்க நல்ல பலன் தருவர். சந்திரன் சந்தோஷம் கொடுப்பார். சனி மனைவியை தந்து, படாதபாடு படுத்துவார். குரு செவ்வாய் நல்லதே செய்வார். செவ்வாய் முதல் தர யோகாதிபதி. சுக்ரன் எதிரி போர்வையில் இருந்தாலும் தொழில் சிறக்க உதவுவார். இருந்தாலும் சுக்கரனை ஒரு அடி தள்ளியே இவர் வைப்பது இவருக்கு நன்மை தரும்.

#கன்னிலக்னம்: லக்னாதிபதி புதன் தொழில் தந்து மேன்மை செய்வார், இவரை விட சுக்ரன் உண்மையில் சூப்பர் இவருக்கு மட்டுமே.சூரியன் ஓரளவு பரவாயில்லை. சந்திரன் இவரை உண்டு இல்லை என செய்வார். செவ்வாய்யோ இவரை கொல்லுவதற்கு கங்கணம் கட்டி கொள்ளுவார். குரு பாதகாதிபதியாக வருவதால் பாதகங்கள் பல செய்து மனைவியை தருவார். சனி யோகாதிபதி என்று கூறினாலும் நோய் மேல் நோய் தருபவரும் இவரே.

#துலாலக்னம்: இவர் அதிபதி சுக்ரனே ஆயுளை தருவதால் நல்லவரே. புதன் யோகாதிபதி அந்தஸ்து அடைகிறார். குரு 3.6-க்கு உள்ளதால் தொல்லை தருவதில் முதல் வரிசையில் நிற்பார். செவ்வாய் குடும்ப, மனைவி தந்தாலும், மனைவி அதிகாரம் அதிகரிக்கும். சூரியன் இரண்டாம் தர வரிசையில் தொல்லை தர காத்திருப்பார். சந்திரன் அருமையான தொழிலை தருவார். சனி யோகாதிபதி யாக வந்து நிறைய நிலபுலன்களை கொடுத்து சமுதாயத்தில் தலை நிமிர வைப்பர். சனியின் நன்மை சந்தோஷத்தை எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கும்.

#விருச்சிகலக்னம்: செவ்வாய் அதிபதி என்றாலும் 6-ம் வீட்டின் ஆதிபத்யம் உள்ளதால் வெற்றி கொடி கட்டுவார். குரு குடும்பம் & பிள்ளைகளை உயர்த்தும் யோகாதிபதி. சூரியன் ஒரு நல்ல அரசாங்க பலத்தை தருவார். சந்திரன் சராசரி சுபரகிறார். சுக்ரன் மனைவியை தந்து இன்பத்தையும் தருவார், ஆனால் மனைவி வகையில் செலவுகளை ஏற்படுத்துவார்.சனியும் சில நன்மைகளை செய்து விடுவார். ஆனால் புதன் உண்டு இல்லை என்று பாடாய் படுத்தி இவரின் கௌரவத்திற்கு அடிகடி பங்கத்தை உண்டுபண்ணுவர். 

#தனுசுலக்னம்: குரு அதிபதி மற்றும் சுகத்தை தருபவர். சனி குடும்பத்தை தந்து பணம் பற்றாக்குறைக்கும் காரணமாக விளங்குவார். செவ்வாய் 5,12-க்கு உரியவர் என்பதால் பிள்ளை பிறப்புக்கு உறுதியாகிறார். சுக்ரன் மாபெரும் விரோதியாக இருப்பார், சுகர தசை சுகம் தருவது போல் தந்து வேதனையை விளைவிப்பார். புதன் மனைவி மூலமாகவும், தொழில் இடங்களிலும் பாதகம் தருவதோடு மரியாதையை சீர்குலைக்க முற்படுவார். சந்திரன் அஷ்டமாதி என்றாலும் கவலை இல்லை. சூரியன் சமுதாயத்தில் புகழ் பெற செய்து விடுவார்.

#மகரலக்னம்: சனி அதிபதி & குடும்ப பொறுப்பில் உள்ளதால் இவர் இஷ்டம் போல் குடும்பம் அமையும். சுக்ரன் & புதன் சுப பலம் அதிகம் தந்து செல்வ செழிப்பை தந்துவிடுவார்கள்.சூரியன் தொல்லை மீது தொல்லையாக தந்து கொண்டே இருக்கும். செவ்வாய்யோ பாதகாதி. சந்திரனோ மனைவியை தந்தாலும், உயிரை வாங்க தயாராக இருப்பார்.குருவால் சில ஆத்ம சந்தோஷம் வரலாமே தவிர, மற்றபடி சுகம் இல்லை. 

#கும்பலக்னம்: சனி 1,12-க்கு உரியவர், என்பதால் செலவுகளை மனதிற்குள் கணக்கு போடுவார். குரு நல்ல குடும்பம் மற்றும் சந்தோஷம் தரும். செவ்வாய் நல்ல உத்தியோகம் தருவதோடு வெற்றிக்கு வித்திடுவார். சுக்ரன் சுபிட்சத்தை சொந்தமாக்கி தருவார். புதன் சுக்ரனுக்கு அடுத்தபடி நன்மைகளை தருவார், இருந்தாலும் சில வாதசம்பந்த பிரச்சனை கொடுக்க முயலுவார். சந்திரனும் சூரியனும் கஷ்டம் மேல் கஷ்டம் தருவார்கள், சூரியன் மனைவி அமைத்து தந்து அவளிடம் சில நேரங்களில் தோல்வியை பெறவைக்கலாம்.

#மீனலக்னம்: அதிபதி குருவே 1, 10-க்கு வந்து அமைதியான தொழில் தருவார். போதுமான பணம் மட்டும் கிடைக்கும். சுக்ரன் மாபெரும் எதிரி இவரது தசை இவரை தலை கிழாக்கும். புதன் பாதகமான காரியங்களை மட்டுமே செய்வார், இருந்தாலும் மனைவி தருவார்.செவ்வாய் அருமையான பலன் செய்வார். சூரியன் நல்லவர் இருந்தாலும், வியாதியை தராமல் விட மாட்டார். சந்திரன் நல்ல குழந்தைகளை கண்டிப்பாக தருவார். சனி சில லாபங்களை தந்து அதை விட்டிற்கு வருவதற்குள் செலவுகளையும் செய்ய வைத்து விடுவார்.

ராகு, கேது கிரகங்கள் குறிப்பாக சிம்ம மற்றும் கடக லக்ன காரர்களை பாதித்து விடும். இருந்தாலும் இவர்கள் உட்கார்ந்த இடங்களை வைத்தே ஒவ்வொரு லக்ன காரர்களுக்கும், இவர்கள் நன்மை செய்வார்களா தீமை பண்ணுவர்களா என கூற முடியும். 

மேல் சொன்ன பலன்கள் பொதுவானவை மற்றும் தனிப்பட்ட ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற ராசிகளை வைத்து பார்த்தே முடிவு பண்ணுவது சிறப்பு. மேல் குறிப்பிட்ட லக்ன காரர்களை கிரகங்கள் மேல் சொன்ன படியே நன்மை செய்யும் அல்லது தீமை செய்யும் என்றும் அறுதியிட்டு கூற முடியாது, காரணம், இவர்களுடன், சேர்ந்த, பார்த்த, இவர்கள் உட்கார்ந்த இடங்கள் மற்றும் கிரகங்களை வைத்தே முழு பலன்களை அறிய முடியும்.  #கழுவந்தோண்டிகிராமத்தான்

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்