Good hospital
ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை பெரம்பலூரில்( சிறுவாச்சூர் ) உள்ளது ! அது தனலட்சுமி சீனிவாசன் Medical College மருத்துவமனை .
ஓர் உடல் பிரச்சனை காரணமாக, நண்பருடன் ஒருவர் சென்று வந்தார்! உள்ளே நுழைந்த உடனே, அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல,இருவர் staff இருக்கிறார்கள் .
ஒரு, ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் !
அவருக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..
1. டாக்டர் பீஸ் கிடையாது.
2.அட்மிஷன் பணம் கிடையாது .
3.அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.
4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 50 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.ஆஞ்சியோ கிராம் 3,500 மட்டுமே !
5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.
நமக்கான ஒரேயொரு செலவு, இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் தள்ளுபடி உண்டு !
மிகவும் சுத்தமான மருத்துவமனை. அருமையான கவனிப்பு.
என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appolloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000 மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 15000 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.
பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை -பெரம்பலூர் அருகில் (திருச்சி to சென்னை நெடுஞ்சாலை NH45 யில் உள்ளது ) -பெரம்பலூரில் இருந்து hospital செல்ல, காலை முதல் இரவு வரை, இலவச பஸ் வசதி உண்டு !அரியலூரில் இருந்து, தினமும் காலை 9 மணிக்கு பஸ் புறப்படுகிறது !( அரியலூரில் இருந்து hospital 30 km- பல்வேறு திட்டங்களின் அடிப்படையில், மக்களுக்கு, முக்கிய ஆபரேஷன்கள், முற்றிலும் இலவசமாக செய்கிறார்கள் ph: 7871807870)
Comments
Post a Comment