Petrol history
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை ஒரு நாட்டின் பொருளாதாரத்தைநிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை . ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்றபெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான்கச்சா எண்ணையை உலகில் முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைபேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள்மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன்சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப...