வன்னியர் ஆண்ட காசி வாரணாசி

வானவாசி வானமாமலை வானஆறு பாணவாசி பாணஆறு நன்னன் வன்னியர்.....இந்த தக்காண வாணவாசி நகர் பெயர் கூட வாரணாசி வாணர்ஆசி என்ற காசி ஆண்ட வன்னியர் நாட்டுப் பெயரின் தொடர்புடையது. புராண காலத்தில் வாரணாசி வாரண்அசி என்ற இரு நதிகள் இணைந்த இடத்தில் வன்னியர் குல தெய்வமான வாணர் வானரம் ஆஞ்சனேயர் என்ற தமிழச்சி அஞ்சனை மகன் ஆண்ட நாடு. இது பின்னர் பிற மேல் சாதி தமிழர்களால் ஆளப்பட்டது. பைரவர் வைரவர் வீர பத்ரர் வீர புத்ரர் மக்கள் தமிழர் வன்னியர் ஆண்ட காசியை வன்னியர்களுக்கு பிறகு ஆண்டனர் என்றால் மிகையாகாது.

எழுத்தாளர் செய்தி=
ஐந்தாம் ஆறாம் காலகட்டம் – 1

திருக்கோவிலூர் போர்(கி.மு.220): 5ஆம் காலகட்டத்தில் மூவேந்தர்கள் சிறு குறு மன்னர்களை வென்று அவர்களின் நிலப்பரப்புகளைத் தங்கள் பகுதிகளோடு இணைத்துக் கொள்ளும் வழக்கம் தொடங்கியது. மலையமான் காரி, ஓரியைத்தாக்கி வென்று ஓரியின் கொல்லிமலையைக்கைப்பற்றி பொறையர் குலச் சேர அரசர்களிடம் ஒப்படைத்தான். ஓரி, அதியமான் ஆகியோர் மழவர் தலைவர்கள் ஆவர். ஆதலால் வெகுண்ட அதியமான் தனது இனத்தலைவன் ஓரியைக்கொன்ற மலையமான் காரியின் திருக்கோவிலூர் மீது படையெடுத்துச் சென்று காரியை வென்று திருக்கோவிலூரைக் கைப்பற்றிக்கொண்டான். அப்பொழுது வெட்டப்பட்டதுதான் சம்பை கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டின் காலம் சுமார் கி.மு. 220 ஆகும். 

ஆடுகோட்பாட்டு சேரலாதனின் வடதிசை படையெடுப்பு(கி.மு.219): 5ஆம் காலகட்டத்தில் மூவேந்தர்களும் ஒற்றுமையுடன் இருந்தனர். 4ஆம் காலகட்டத்தில் சேரன் செங்குட்டுவன் கொண்டுவந்த ஒற்றுமை தொடர்ந்து நீடித்தது. சேரன் செங்குட்டுவன் தக்காணத்தில் உறுதிப்படுத்தியிருந்த தமிழக அரசுகளின் ஆட்சி அதிகாரத்தை  ஆடுகோட்பாட்டு சேரலாதனும், செல்வக் கடுங்கோ வாழியாதனும் தொடர்ந்து பாதுகாத்து வந்தனர். ஆடுகோட்பாட்டு சேரலாதன் பெரும் படையோடு வடக்கே சென்று தக்காணப்பகுதி அரசர்களோடும், நன்னனோடும் பெரும்போர் செய்து அவர்களை வென்று வானவாற்றையும் வானமாமலையையும் தன் வட எல்லையாக உறுதிப் படுத்தி, வானவாசி நாட்டைத் தன் வசப்படுத்தினான். 

செல்வக்கடுங்கோ வாழியாதனின் தமிழ்ப் படை(கி.மு.210): சாதவாகனர் அரசு, கிருட்டிணா நதியின் வடக்கில்தான் தன் எல்லைப்பகுதிகளைக் கொண்டிருந்தது. அதனால் அந்நதியின் தென்பகுதியில் இருந்த தென் மராட்டியம், கர்நாடகம் முழுவதும், ஆந்திராவின் பெரும்பகுதி முதலியன தமிழரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. தமிழரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்குள் வட அரசுகள் நுழைந்து அவைகளை ஆக்ரமிக்க முயலும்பொழுது தமிழரசுகள் ஒன்றிணைந்து பெரும்படையோடு சென்று வட அரசுகளைத் தாக்கித் தோற்கடித்து தங்களது பகுதிகளையும் வணிகப் பாதைகளையும் காவல் அரண்களையும் பாதுகாத்து வந்தன. சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனின்  தலைமையில் சென்ற தமிழ்படையும் மேலே சொல்லப்பட்டப் பணியை நிறைவேற்றவே வடதிசை பயணத்தை மேற்கொண்டது. சேர, சோழ, பாண்டிய வீரர்களைக் கொண்ட சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனின் தமிழ்ப்படை, உழிஞைப்பூ மாலையை அணிந்துகொண்டு, மலைகள் நிலை தளர முழங்கும் இடியேறுபோலச் சினந்து சென்று, ஒரு போரில் இரு பேரரசர்களை வென்று பகைவர்களிடமிருந்து நிறையப் செல்வங்களை அள்ளிவந்தது என்கிறார் கபிலர். செல்வக் கடுங்கோ வாழியாதனின் படை தமிழ்ப் படையாகவே சென்றது என்பதன் மூலம், தமிழக அரசுகளிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதைக் கபிலரும் தனது பதிற்றுப்பத்துப் பாடல் மூலம் உறுதிப்படுத்துகிறார். இப்போரின் காலம் கி.மு. 210 ஆகும்.

பறம்புப்போரும், தகடூர் போரும்:
 கிமு. 220 வாக்கில்தான் திருக்கோவிலூர் போர் நடந்தது. அதன்பின் சுமார் 5 ஆண்டுகள் கழித்து(கி.மு. 215) பறம்புப் போர் நடந்து, மூவேந்தர்களால் பாரியின் பறம்புமலை கைப்பற்றப்பட்டது. அதன்பின் தகடூர் போர் நடைபெறுகிறது. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்குப்பின் பெருஞ்சேரல் இரும்பொறை சேரவேந்தன் ஆகிறான். இந்நிலையில் கழுவுள் என்பவன் சேரர்களிடம் இருந்த கொல்லிமலையை கைப்பற்றிக்கொள்கிறான். இதனை அதியமான் ஆதரிக்கிறான். இதனால் வெகுண்ட பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிமலையைக் கைப்பற்றவும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களை அடக்கி ஒடுக்கவும் பெரும்படையோடு வந்து சேருகிறான். அவனது படையைக்கண்ட கழுவுள் சேரனிடம் சரணடைந்து விடுகிறான். சேரனும் அவனை மன்னித்து விடுகிறான். கழுவுளுக்கு ஆதரவுதந்த மற்றவர்களும் சேரனிடம் பணிந்து விடுகின்றனர். ஆனால் அதியமான் பணிந்து போகாததன்  காரணமாகவே தகடூர் போர் நடைபெறுகிறது. 

 இப்போரின் தொடக்கம் கி.மு. 203 எனலாம். சோழர்களின் உதவியை எதிர்பார்த்து முதலில் மிக நீண்டகாலம் தாக்குப்பிடித்த அதியமான் அவ்வுதவி உரிய காலத்தில் வராததால் கோட்டையைவிட்டு வெளியே வந்து போரிட்டு மடிந்து போகிறான். இது போரின் முதல் வருடத்திலேயே நடந்து முடிந்து விடுகிறது. அதன்பின் அவனது மகன் பொகுட்டெழினி என்கிற தகடூர் பொருது வீழ்ந்த எழினி போரைத் தொடர்ந்து நடத்துகிறான். அதியமான் காலத்திலேயே  சேர வேந்தனுக்கும் அதியமானுக்கும் இடையே சமாதானம் செய்ய ஔவையார், அரிசில்கிழார், பொன்முடியார் போன்ற பல சான்றோர்கள் பெருமுயற்சி எடுக்கின்றனர். ஆனால் அம்முயற்சிகள் வெற்றிபெறவில்லை. அதியமான் இறந்த பிறகு மீண்டும் சமாதான முயற்சி நடைபெறுகிறது. அதியமான் இறந்த பிறகு சேர வேந்தனும் போரைத்தவிர்க்கவே விரும்புகிறான். ஆனால் எழினியும் திரை செலுத்திப் பணிந்துபோக விரும்பவில்லை. அதனால்மீண்டும் போர் தொடங்குகிறது. அதில் வீரமரணமடைகிறான் எழினி. 

பார்வை: 1.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சூலை-2018 பக்: 226 - 229.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்