Tamil Andhanars Parppanars Odhuvaar Thambiran Desigar Pandaram Aandi Pandaram Adhi Saivars Aadheenam people Sivachariyars Gurukkal Pattaraiyya Kurukkalaiyya Gurukkal Siva Brahmanars
பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி ஏன் குடுமி வைத்தான்? ஏன் யாக சாலை வேள்வி செய்தான்? தமிழர் தான் ப்ராம்ணர்களுக்கு முன்னேயே வேள்வி செய்தனர் பூணுல் அணிந்தனர்.
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்ககாலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிஎன்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேள்விக்குடிச் செப்பேட்டில்.
"
"கொல்யானை பலஓட்டிக்
கூடாமன்னர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"
"
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார்இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
"
"பல்சாலை முதுகுடுமித்
தொல்ஆணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால்
சிறப்பின்"
"
—(759,61,62)
இவனைப் பற்றிப் புறநானூற்றில்"முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)
காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
"
"தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும! நீ நிலமிசையானே!"
"
—(புறம்-6)
நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்
"
"எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்!"
"
—(புறம்-9)
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
"
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என"
"அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
"
பாண்டியன் பல்யாகசாலை முதுமுடுமிப் பெருவழுதிதொகு
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்,
காலநிரல்தொகு
இவனது வரலாற்றைத் திரட்டிப் பார்க்கும்போது காலநிரல் ஒன்று தெளிவாகிறது.
பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி
நிலந்தரு திருவின் நெடியோன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வழுதி 5 பேர்தொகு
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.
வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
வழுதி - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.
வழுதிக்கு அறிவுரைதொகு
'தண்டா ஈகைத் தகைமாண் வழுதி' எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போற்றப்படுகிறான். இவனது வெற்றிகளைப் பாராட்டிய காரிகிழார் இவனுக்குக் கூறும் அறிவுரைகள் எண்ணத்தக்கன.
ஞமன் என்னும் யமனின் தெரிகோல் போல் ஒருதிறம் சாயாமல் நடுவுநிலைமையைக் கைக்கொள்க.
நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையுடன் நல்குக.
சிவன் திருவிழாக் காலத்தில் தெருவில் உலா வரும்போது உன் குடை பணியட்டும்.
நான்மறை முனிவர் கையேந்தும்போது நீ தலை வணங்குக.
பகைவர் நாட்டைச் சுடும் புகையில் நின் மாலை வாடுக.
மகளிர் கண்ணீர் வடிக்கும்போது உன் சினம் ஓடி மறைக [1]
போரில் அறத்தாறு கடைப்பிடித்தவன்தொகு
போரில் அறத்தாற்றைக் கடைப்பிடித்தவன் இந்தப் பாண்டியன்
போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை, ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்தல் போர்அறம்.
இப்படிப்பட்ட அறயெறியாளன் கடலில் விழாக் கொண்டாடிய நெடியோன் நாட்டில் பாயும் பஃறுளி ஆற்று மணலைக்காட்டிலும் பல்லாண்டு வாழ்க.[2]
வெற்றித்தூணும் வேள்வித்தூணும் நாட்டியவன்தொகு
நின்னோடு போரிட்டுத் தோற்றவர் பலரா? (அப்போது நீ நாட்டிய வெற்றித்தூண் பலவா?)
அல்லது நால்வேத நெறியில் நெய் ஊற்றிச் செய்த வேள்விக்காக நட்ட தூண் பலவா?
யா பல என வினவி அவனது ஆட்சியைப் படம்பிடிக்கிறார்.[3]
போர்க்களத்திலும் கொடை வழங்குபவன்தொகு
குடுமிக்கோமான் போர்களத்தில் இருக்கும்போதும் விறலியர்க்குக் கொடை வழங்கும் பண்புள்ளவன்.[4]
புலவர்களைப் புணர்கூட்டு என்னும் பெயரில் கூட்டிச் சங்கம் நிறுவியவன்.தொகு
நிலந்தரு திருவின் நெடியோன் என்னும் பாண்டியன் தொல்லாணை நல்லாசிரியர்களைக் கூட்டி புலவர்களின் புணர்கூட்டு(சங்கம்) என்னும் நல்வேள்வி செய்தான். இதில் கூட்டப்பட்ட நல்லாசிரியர்கள் பல்சாலை முதுகுடுமியால் முன்பே ஒருங்கிணையக் கூட்டப்பட்டவர்கள்.[5]
அடிக்குறிப்புதொகு
↑ காரிகிழார் – புறம் 6
↑ நெட்டிமையார் – புறம் 9
↑ நெட்டிமையார் புறம் 15
↑ நெடும்பல்லியத்தனார் – புறம் 64
↑ பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போலத் (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விளங்கினானாம். மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி 759-765
ஔவையார் குலம் தமிழ் அந்தணர் பார்ப்பனர் கணியர் கணியன் வள்ளுவர் வள்ளுவச்சி போன்ற மறையாளர் குலம். தேசிகர் பட்டரைய்யா பட்டர் பட் Bhat Kashmir Bhat Bengal Bhattacharya Bhatta Arya Bhatta குருக்களைய்யா குருக்கள் தம்பிரான் ஓதுவார் ஆச்சாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் கவிராயர் பண்டாரம் Bhandari caste of UP MP Bihar Rajasthan Panda Caste of Orissa Bengal Pandey Caste of Bihar Rajasthan ஆண்டிப் பண்டாரம் பண்டார் என்றால் அரச கருவூலம். ட்ரெஷரி.
முக்தி நிலை சொல்வது பகவத் கீதையும் விநாயகர் அகவலுமே. திருக்குறள் வீடு பேறு முக்தி பற்றி நிறைய தெளிவாக சொல்லவில்லை.
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
குருவடி வாகிக் குவலயந் தன்னில் = அவ்வையார் காலத்திலேயே தமிழர்கள் உலகம் பூமி குவலயம் போன்ற ஆரஞ்சு வடிவம் பெற்றது உருண்டை பூமி என்பதை உணர்ந்து தெளிந்து இருந்தனர்.
குவலயம் = பூமி
ஔவை தனது விநாயகர் அகவலில் சொன்னது எல்லாமே வடமொழி யோக சூத்ரங்கள். குண்டலினி அசபை மந்திரம் சக்கரம் மூலாதாரம் இடை பிங்கலை சுழுமுனை கபாலம் அமுத நிலை ....
கட்டுரையாளர் கருத்து=
பேரரசுக் கொள்கை சார்ந்த வைதீகச் சிந்தனையும் வேந்தனும்
எட்டாம் காலகட்ட பாண்டியன் இளவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனைப்பாட வந்த நக்கீரர், காளைமாடும் நீண்டசடையும் கறுத்தக்கழுத்தும் உடையவனும்(சிவன்), வெண்நிறமும் கலப்பையும் பனைக்கொடியும் உடையவனும் (பலராமன்), நீலமணி போலத்திருமேனியும் கருடக் கொடியும் உடையவனும்(திருமால்), மயிலை, கொடியாகவும் ஊர்தியாகவும் கொண்டவனும்(முருகன்) ஆகிய நால்வரையும் போன்றவன் அவன் என்கிறார்(பு-56). காவிரிப் பூம்பட்டனத்துக் காரி கண்ணனார் இவனது புகழைத் திருமால் என்கிற மாயோனுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார். வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் என்பவர் இவனுடைய செல்வத்தைத் திருமாலின் செல்வத்தோடு ஒப்பிடுகிறார். இவனைப்பாடிய மதுரை மருதன் இளநாகனார், அப்பாண்டியனை மூவேந்தர்களில் சிறந்தவன் என்று சொல்வதற்காக கறைமிடற்று அண்ணல் எனப்படுகிற சிவனின் மூன்றாவது கண்ணோடு ஒப்பிட்டுள்ளார். மருதன் இளநாகனார் புறம் 59ஆம் பாடலில் திருச்செந்தூர் முருகன் குறித்தும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பைஞ்சுனையைப் பாடிய அந்துவன் என்கிற புலவர் குறித்தும் பாடியுள்ளார்..
ஔவையார் தனது புறம் 367ஆம் பாடலில், செய்த நல்வினைதான் இறக்கும்போது துணைக்குவரும் எனவும், பொருள்வேண்டி நிற்கும் பார்ப்பாருக்கு நிறையப் பொருளைக் கொடுக்கும்படியும் மூவேந்தர்களிடம் கூறியிருப்பதும், வேந்தர்களின் வெண்குற்றக் குடையை பார்ப்பார்களின் முத்தீயிக்கு ஒப்பிட்டு ஔவை வேந்தர்களிடம் பேசுவதும், இறுதியாக இதுவே நான் அறிந்த வாழ்க்கையின் இலக்கணம் எனக் கூறியிருப்பதும், ஔவையாரிடத்திலும் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் நல்வினை-தீவினைச் சிந்தனையின் தாக்கம் பரவி விட்டது எனலாம். ஔவையார் தனது இறுதிப்பாடலில் கூட அழகிய இளம் மகளிர் தரும் கள்ளை உண்டு மகிழுங்கள் என வேந்தர்களிடம் வாழ்க்கையை மகிழ்வோடு அனுபவிக்கவும் கூறுகிறார். எனினும், பார்ப்பாரின் முத்தீயை உயர்வாகப் பார்ப்பதும், அவர்களுக்குப் பொருள் தரச் சொல்லுவது மான அவரிடத்தில் ஏற்பட்டிருந்த பேரரசுக்கொள்கை சார்ந்த வைதீகச்சிந்தனையின் தாக்கம், மெல்ல மெல்லத் தமிழ் சமுதாயத்தில் பரவி வந்ததை நமக்கு உணர்த்துகிறது. ஆகவே ஔவையார், நக்கீரர், மருதன் இளநாகனார், ஆகிய புகழ்பெற்ற பெரும் புலவர்கள் வைதீகச் சிந்தனையின் தாக்கம் கொண்டவர்களாக எட்டாம் காலகட்டத்தில் ஆகியிருப்பது என்பது அன்றைய சமூகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக்காட்டுகிறது.
மதுரை மருதனிள நாகனார் தனது அகம் 59ஆம் பாடலில் வடக்கே உள்ள நீர்வளம் வற்றாத யமுனை நதியில் நீராடிய ஆயர் மகளிருக்கு குருந்த மரத்தை வளைத்துத் தழையாடை உடுத்த உதவியவன் கண்ணன் என்கிறார். மேலும் அவர் மன்னர்களின் பரம்பரையை அழித்தொழித்த பரசுராமன் என்கிற மழுவான் நெடியோன் முற்காலத்தே செய்த வேள்வியினிடத்தே இருந்த வேள்வித்தூண் குறித்துப் பாடியுள்ளார்(அ-220). இப்புராணக்கதை அன்றே இருந்து வந்துள்ளது என்பதை இப்பாடல் நமக்குத் தெரிவிக்கிறது. இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. பனிமலையை வில்லாகவும், பாம்பை நாணாகவும் கொண்டு ஒப்பற்ற ஒரு அம்பின் மூலம் மூன்று மதில்களையும் அழித்துத் தேவர்களுக்கு வெற்றியைத்தந்தவர் கறைமிடற்று அண்ணல்(சிவன்) எனவும் கூறுகிறார் அவர்(பு-55). சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முருகக்கடவுள் போன்று சினமிக்கவன் என்கிறார் பாண்ட்ரங்கண்ணனார்(பு-16).
இவ்விதமாக புராணக் கதைகளை பாடலில் பாடுவதும், கடவுளோடு வேந்தனை ஒப்பிடுவதும், அவனை தெய்வநிலைக்கு உயர்த்துவதும் ஆகிய பேரரசுக் கொள்கை சார்ந்த வைதீகச்சிந்தனை எட்டாம் காலகட்ட (கி.மு. 2ஆம் நூற்றாண்டு நடுவில்) வாக்கில் அதிகமாகிவிட்டது எனலாம். வேந்தனை தெய்வநிலைக்கு உயர்த்தும் இந்தச் சிந்தனை பத்தாம் காலகட்டத்தில் உச்சநிலையை அடைந்து முத்தொள்ளாயிரம் போன்ற பாடல்கள் உருவாகி வேந்தனை நகர மகளிர் அனைவரும் ஒருதலைக் காதல்கொள்வது போன்ற கைக்கிளைப் பாடல்களும் அதிகமாகின.
பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 296 -- 297.
இந்த தமிழ் பட்டர் குலமே சாதியே பெங்கால் காஷ்மீர் உத்தரபிரதேசத்தில் பட்டாச்சார்யா பட் என்று விளங்கி வருகிறது.
தமிழ் அர்ச்சகர் பண்டாரம் ஆண்டிப் பண்டாரம் சாதியே வட நாட்டில் பண்டாரி Bhandari பண்டரி பாய் என்று உள்ளது. பண்டாரம் Pandora's Box Bhandar என்றால் அரச கருவூலம் அரச ஆபரணங்கள் அறை என்று அர்த்தம்.
வேள்வி செய்த வேளிர் வேளாளர் தான் பூணுல் சாதி அமைப்பு மனு நீதி குலதெய்வம் குருகுலம் குலக்கல்வி எல்லாம் உலகிற்கு சொன்னவர்கள். நம் தமிழ் மனு நீதி மனச்சாட்சி நீதி ப்ராம்மணர் கையில் சென்று தவறாக அமுல் படுத்தப்பட்டது. பட்டரைய்யா குருக்களைய்யா சிவாச்சாரியார் ஆதி சைவர் தம்பிரான் மூர்த்தி ஓதுவார் தேசிகர் பண்டாரம் ஆண்டிப்பண்டாரம் என்று பல்வேறு அர்ச்சக சாதிகள் குலங்கள் தமிழரில் உள்ளன. இவர்கள் தமிழினத்திற்கு கேடு செய்ய மாட்டார்கள்.
மதுரைக் கோவில் நுழைவும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட சாந்து பட்டரின் குடும்பமும்
--------------------------------------------------------------------
1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை ஐந்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நாடாரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மேல் ஜாதி அதிகாரிகள் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் பிற ஊழியர்களும் அவர்களை வரவேற்று மீனாட்சி சன்னதிக்கு அழைத்துச் சென்று சாமியைக் கும்பிட வைத்தனர்.
அதற்கு அடுத்த நாள் , ஜூலை 9ஆம் தேதி முத்து சுப்பர் பட்டர் என்பவர் காலை வழிபாட்டை முடித்துவிட்டு , மாலையில் கதவுகளைத் திறக்க மறுத்தார். சுத்தீகரண சடங்குகளைச் செய்யாமல் கோவில் கதவுகளைத் திறக்க முடியாது என்று கூறினார். சாவிகளைப் பெற நிர்வாக அதிகாரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வெளியூருக்குச் சென்றிருந்த சாந்து பட்டர் என்பவர் அன்று இரவு ஊர் திரும்பினார். அடுத்த நாள் காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதற்குப் பிறகு பூஜைக்கு வராத பட்டர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட சாந்து பட்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து பட்டர்கள் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடந்தன.
1939லிருந்து 1945வரை இந்த பட்டர்கள் கோவிலிலிருந்து நீங்கியிருந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவில் சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, 'சுத்தீரகணச் சடங்கு ஏதும் செய்யப்பட மாட்டாது. நிர்வாக அதிகாரியின் உத்தரவே இறுதியானது' போன்ற நிபந்தனைகளை ஏற்று 1945ல் பட்டர்கள் திரும்பவும் கோவிலுக்குள் வந்தபோது, அவர்களுக்கு நிர்வாகத்திலும் கோவிலுக்குள் தங்கள் நிலையிலும் பழைய செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சாந்து பட்டரின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
யார் இந்த சாந்து பட்டர்?
-----------------------------------
சாந்து பட்டர் என்பது எல்லோரும் அவரை அழைக்கும் பெயர். அவருடைய முழுமையான பெயர் சாமிநாதபட்டர். அவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. இவருடைய பிறப்பு - இறப்பு குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை. இவர்களுக்கு பிச்சை பட்டர், கல்யாணசுந்தரம், சுப்பிரமணியன், சதாசிவம் என நான்கு மகன்கள். இதில் முதல் மகன் திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கு சுவீகராம் செய்துதரப்பட்டுவிட்டார்.
மதுரைக் கோவிலில் திருமேனிகளுக்கு பூஜைசெய்யும் 40 வீட்டு பட்டமார்களில் அதிகம் படித்தவர் சாந்து பட்டரே. அந்த காலகட்டத்திலேயே பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்திருந்தார். மிக நேர்மையானவர். மனிதர்கள் அனைவரும் சமமென நினைத்தவர்.
ஆனால், கோவில் நுழைவுக்கு ஆதரவாக இருந்ததால், சக பட்டர்களால் மரணம் வரை இவர் ஒதுக்கிவைக்கப்பட்டார்.
"அவர் இந்தத் தெருவில் நடந்துவந்தால் அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றுவார்கள்" என்கிறார் அவருடைய மகன் சுப்பிரமணியன். ஒரு முறை தன் தந்தை சாந்து பட்டரிடம், இப்படி பிரச்சனை வருமெனத் தெரியுமில்லையா, எதற்காக ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் விவகாரத்தில், கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தீர்கள் என சுப்பிரமணியன் சாந்து பட்டரிடம் கேட்டார்.
"ஹரிஜனும் பக்தன்தானே. அவா உள்ள வர்றது நேக்கு தப்பா தெரியலைப்பா" என்றாராம் சாந்து பட்டர்.
இந்த விவகாரத்தில் பெரும் துணையாக நின்ற ராஜாஜி, கவர்னர் ஜெனரலாக இருந்தபோது மதுரை வந்தார். அப்போது சாந்து பட்டரை சந்திக்க விரும்பினார். கோவில் நுழைவுப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வைத்தியநாதய்யர், சாந்து பட்டரை அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் "கவர்னர் ஜெனரலைப் பார்க்கும்போது, பசங்களுக்கு ஏதேனும் வேலை கேளுப்பா" என்றார் வைத்தியநாதய்யர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் சாந்து பட்டர். "அவங்க படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சா போறும்" என்றாராம்.
கோவில் நுழைவு நியாயமெனக் கருதியதோடு, அந்த முயற்சியில் கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவுக்கும் உறுதுணையாக இருந்த சாந்து பட்டர் சாகும்வரை தன் ஜாதியினரால் புறக்கணிக்கப்பட்டிருந்தார். பட்டர்களின் வீடுகளில் நடக்கும் எந்த நல்லது கெட்டதுக்கும் அவருக்கு அழைப்பு வராது. இவர்கள் வீட்டு விசேஷத்திற்கு யாரும் வரமாட்டார்கள்.
சாகும்வரை புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தனிமரமாக இருந்து இறந்துபோனார் சாந்து பட்டர்.
சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servants of the Goddess: The Priests of a South Indian Temple புத்தகத்தில் சாந்து பட்டரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவரது புகைப்படம் இல்லை.
அவரது சந்ததிகளைத் தேடிப்பிடித்து, சாந்து பட்டர் என்ற சாமிநாதபட்டரின் புகைப்படத்தைக் கண்டெடுத்தேன். அவரது புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறையென நினைக்கிறேன்.
கோவில் நுழைவுக்கு ஆதரவாக இருந்ததால், செய்யப்பட்ட ஒதுக்கல் இப்போதும் தொடர்கிறதா? இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
--------------------------------------------------
படம் 1. சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.
படம் 2. சாந்து பட்டர் வசித்த வீட்டில் இருந்த கல்வெட்டு.
படம் 3. மதுரைக் கோவில் நுழைவின்போது எடுக்கப்பட்ட படம்.
Comments
Post a Comment