Rahu Kethu Peyarchi 2019

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
       தைரிய காரகனான செவ்வாயைஅதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகுகடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும்,கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு சுக ஸ்தானத்திலும் கேது – கர்ம ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சம பலன்களை அள்ளி வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி முதல் மிதுன இராசியான 3 ஆம் இடத்துக்கு இராகுவும், தனுசு இராசியான 9 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர்.
       இவை சாதகாமான அமைப்பு ஆகும். இதன் காரணமாக தைரிய பாவ இராகுவால் செல்வந்தர்களின் நட்பு ஏற்படும். கீர்த்தி பெருகும். புத்தி சாதுர்யமும், அறிவுத் திறனும் கூடும். அரசாங்க உத்தியோகம் ஏற்படும. சந்ததி உருவாகும். பொன்னும் பொருளும் சேரும். கௌரவமும், அந்தஸ்தும் உயரும். பேரும், புகழும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். என எல்லா வகையிலும் நல்ல பலன்களே உண்டாகும். பல முகாந்திரங்களில் தனவரவும் இலாபமும் குறைவின்றிக் கிடைக்கும். மனோதைரியம் ஓங்கும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். வேற்றுப் பெண் உறவு ஏற்படலாம். நல்ல ருசியான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். சங்கடங்கள் நேரும் காலத்தில் சகோதரர்களின் உதவிகள் தடங்கல் ஏதுமின்றி கிடைக்கும். மனைவி மக்கள் உடல் நலம்பெற்று செழித்து விளங்குவர். அரசுப் பணியாளர்களுக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருமானப் பெருக்கமும் ஏற்படும். பாகு, தேன், பாற்சோறு ஆகியவை கிட்டும். எதிரிகளின் பணமும் வந்து சேரும். கடன் தீரும். நேர்த்திக் கடன் செலுத்த புனித யாத்திரை செல்வர். வெளிவட்டாரப் பழக்கம் நன்மை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
       கேதுவின் பாக்ய பாவ அமர்வால் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது நல்லது. எல்லா வழிகளிலும் இவருக்குப் பிறரால் அவமானங்கள்  உண்டாகும். பிறர் கபட நாடகம் ஆடி இவரை ஏமாற்ற முற்படுவர். சிலர் ஊரை ஏமாற்றும் கபட சன்யாசியாக உருவெடுக்க நேரலாம். பலவகை வழக்குகள் ஏற்பட்டாலும், அவற்றிலெல்லாம் வெற்றி பெற்று விடுவர். பெற்றொரின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் ஞெலவுகள் ஏற்படும். இவரின் முன் கோபத்தால் பல காரியங்களும் கெடும். ஆயினும் ஞானத்திலும், தவத்திலும் நாட்டமும், நல்ல குரு வாழ்க்கப் பெற்று அதனால் ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும் ஏற்படும்.  சொன்ன சொல் தவறமாட்டார்கள். வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்றஅலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும்.பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் -சொத்துக்கள் சேரும்தான தர்மத்தில் ஈடுபாடுஅதிகரிக்கும்கலைத் துறையில்உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம்அமையும்.  வெற்றிகள் குவியும். உற்றார்உறவினரின் உதவிகள் கிடைக்கும்சிலர் புதுவீடுகட்டுவர்.

       தொழில் மற்றும் வியாபாரம் – பழைய தொழிலை விரிவாக்கம் செய்யத் தேவையான கடன் உதவிகள் வங்கி மூலமாகச் சுலபமாகக் கிடைக்கும். செய்தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். சிலருக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். சகோதரர்கள், கூட்டாளிகளுடன் செய்யும் தொழில்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்குக் கடன் தீரும். அதிக லாபங்களும் ஏற்படும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். நிலபுலன், வாகனம், கால்நடைகள் செழிக்கும்.

       உத்தியோகஸ்தர்களுக்கு – தாங்கள் எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வும், அதற்குரிய சம்பள உயர்வுகளும் கண்டிப்பாகக் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்வர். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மை தரும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவும் கிட்டும்.

       பெண்களுக்கு – பணிபுரியும் பெண்கள்வாகனங்களில் செல்கையில் வேகத்தைக்குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம்.சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர்அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கானபரிந்துரைகள் செய்யப்படலாம்கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உடையதாய் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு இருந்தாலும், உடன் பிறப்புக்களிடையே ஒற்றுமையின்மை தலை தூக்கும். பெண் உறவுகளின் உறவு சீரடையும். தெய்வ வழிபாடுகள், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற ஆன்மீக காரியங்கள் சிறப்புற நடக்கும்.

      அரசியல்வாதிகளுக்கு – வரவுகள் குறைந்தாலும், பேரும் புகழும் கூடும். சுய ஆதாயத்துக்காக, அனைவரிடமும் எளிமையாகப் பழகும் எண்ணம் தலைதூக்கும். அதேபோல் உங்களிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து எப்போதும் ஒரு கூட்டம் உங்களையே சுற்றிச்சுற்றி வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவர்.

       மாணவர்களுக்கு – பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்து உயர் கல்வியைத் தொடர்வர். வேலைக்கான நேர்காணலில் வெற்றி கிட்டும்.நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும்.காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள்ஏற்படலாம்.  கல்வியில் உயர்வும்,  போட்டிகளில்வெற்றிகளும் குவியும். கல்வி ஸ்தாபனத்துக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்பர்.

       கலைஞர்களுக்கு – தேடி வரும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது உங்கள் கையில்தான் உள்ளது. குடுப்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும்.

       பரிகாரங்கள் – திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசித்து ஒன்பது நபர்களுக்கு உளுந்து தானம் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி