மழவர் வன்னியரா? மழவர் மறவர் மள்ளர் மல்லன் மாமல்லன் மள்ளர் மள்ஹார் மஹார் மஹாராஷ்ட்ரா மராட்டியம். ஓரி பேகன் மான் பஞ்சாப்.

நல்ல பதிவு.
மழவர் என்பதும் மறவர் என்பதும் ஒன்றா?
மழவர் மாழ்வா மாழவம் மாள்வம் மாள்வா எக்ஸ்பிரஸ் ரயில் இவையெல்லாம் குஜராத் வரை உள்ளதே இப்பிரதேசங்களை தமிழ் மழவர் ஆண்டனரா?
மழவர் என்பதே மள்ளர் மல்லர் என்று திரிந்ததா?
மள்ளர் மள்ஹார் மஹார் என்ற தமிழர் போல் தோற்றம் அளிக்கும் சாதிகள் இன்றும் மராட்டியத்தில் உள்ளனர்.
மஹார் சாதி தமிழர் தான் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்.
இன்றைய இந்திய குடியரசுத் தலைவர் கூட தலித் தான் அவர் நம் தமிழர் இளையராஜா போன்று உள்ளார். நல்ல உயரம் தமிழர் போன்ற தோற்றம்.
வட இந்தியாவில் இன்னும் தமிழர்களின் எச்சங்கள் மீதிகள் இருக்கின்றன.
தமிழ் வான்மீகிதான் வட நாட்டில் வால்மீகி பால்மீகி என்று அழைக்கப்படுகின்றார். இந்த தமிழ் வான்மீகி சங்க கால வான்மீகிதான் ராமாயணம் வட மொழியில் எழுதி உள்ளார்.
வ்யாசரும் கருப்புத் தமிழரே. பாணிணியும் தமிழரே. உச்சயினி ஆண்ட போசளர் கால காளிதாசர் தமிழர். வட நாட்டில் செட்டில் ஆகி ப்ராம்மணப் பெண்களை மணந்து வட மொழியில் வட தமிழ் மன்னர்களுக்காக எழுதினார்கள்.

உச்சயினி மாகாளியம்மன் தமிழர் கோவிலே இன்று உச்சினி மகாளி அம்மன் கோவிலாக தமிழகம் எங்கும் ஆசாரி விஸ்வகர்மா குல கோவிலாக உள்ளது.

ஓரி வன்னியர் குலம் என்கிறார்கள். இருக்கலாம்.
ஓரி பேகன் மான் என்ற சாதி பெயர்கள் குலம் பெயர்கள் பஞ்சாபிலும் உண்டு.
பஞ்சாப் வரை ஆண்டவன் தமிழன்.

அதியமான் மலையமான் தொண்டைமான் அனுமான் அம்சுமான் நத்தமான் சுருதிமான் வலங்கைமான் இடங்கைமான் என்று ஏகப்பட்ட மான் மகன் அரச குலங்கள் தமிழகத்தில்.

இதே திருக்கோவிலூர்ல் தான் அந்தகாசுரன் அழித்த சிவன் அட்ட வீரட்டானம் அட்ட வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் தான் சுக்ராச்சாரியார் என்ற அசுரர்களின் குரு டாகினி என்ற ஆந்தையாக மாற்றி சிவன் மண்டை ஓட்டு மாலைகளுடன் அந்தகனை காலில் போட்டு மிதிக்கும் சிற்பம் உள்ளது.

அந்தகன் அங்கதன் அனுமான் அனுமன் வாலி மகாபலி மாவலி ஓணம் பண்டிகை கேரள அரசன் பாலி பாழி பாழீய் இரண்யன் இரண்யாட்சன் வித்யுன்மாலி கமலாட்சன் இவர்கள் அனைவரும் ஒரே குலம்தான். பல்வேறு யுகங்களில் பல்வேறு விதங்களில் சிவா ப்ரம்மா விஷ்ணு என்ற கூட்டு கொள்ளையர்கள் இந்த மீதி தமிழர்களை தமிழ் குலங்களை வாழ விடாமல் செய்த புராணங்கள் கோவில் வரலாறாக உள்ளது.

இதே திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வர் கோவில் வெளியேயும் மற்றும் ஆதி அரங்கநாதன் கோவில் மணலூர் பேட்டை கோவில் வெளியேயும் அனுமன் குல பாலி வாலி குல தெய்வம் புத்தர் சமணர் போன்ற சிலைகளை கோவில் வெளியே வைத்துள்ளனர். கூரையின்றி பரிதாபமாக புத்தர் சமணர் சிலை உள்ளது.

தமிழினம் குல சண்டைகளால் வேற்றினத்தவரை உள்ளே விட்டு தன் சொந்த ரத்தத்தை சொந்த சகோதரனை அழித்த இனம் தமிழினம்.

ஈழம் தமிழ் ஈழம் போர்கள் மிக சமீபத்தில் தமிழினம் ஒற்றுமை இல்லாத இனம் என்று காட்டியது.


கட்டுரையாளர் கருத்து=

ஐந்தாம் காலகட்டம்(கி.மு. 250-170) – 3

வல்வில் ஓரி : வல்வில் ஓரியைப் பரணர், வன்பரணர், கபிலர், கல்லாடனார், நப்பாலத்தனார், பெருஞ்சித்திரனார் ஆகியோர் பாடியுள்ளனர். நப்பாலத்தனார் ஓரியை மழவர்களின் தலைவன் என்கிறார்(நற்-52). ஓரியை கொன்று அவனது கொல்லி மலையைச் சேரர்களுக்கு காரி வழங்கியதால் வெகுண்ட அதியமான் திருக்கோவிலூர் மீது படையெடுத்துக் காரியைத் தோற்கடித்தான். வல்வில் ஓரி அம்பு எய்வதில் எவ்வளவு சிறந்தவன் என்பதற்கு உயர்வு நவிற்சி அணியாக, அவன் எய்த அம்பு யானையைக் கொன்று, புலியைக் கொன்று, புள்ளி மானைக் கொன்று, இறுதியாகக் காட்டுப் பன்றியின் மேல் குத்தி நின்றது என்கிறார் வன்பரணர்.  

ஒரு பாடலில் வன்பரணர் மனமுழா, யாழ், தூம்பு, எல்லரி, ஆகுனி, பதவை ஆகிய பல பண்டைய தமிழ் இசைக் கருவிகளைக் குறிப்பிடுகிறார். இதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகும். இதன்மூலம் அன்றைய தமிழிசையின் மேன்மையை இப்பாடல் பேசுகிறது. சிறப்பு மிக்க ஓரியை மலையமான் காரி கொன்றான் எனவும், ஓரியைக் கொன்றபின் காரி கொல்லிமலையின் ஒரு பெருந்தெருவில் நுழைந்த போது ஊர்ப்பொதுமக்கள் அவனை எதிர்த்துப் பேரிரைச்சல் எழுப்பினர் எனவும், கபிலர் பாடியுள்ளார்(நற்-320, குறுந்-100). வல்வில் ஓரி கிமு 220 வாக்கில் காரியால் கொல்லப்படுகிறான். கிமு 220 வாக்கில் இறந்த வல்வில் ஓரி 5ஆம் காலகட்டம் ஆகிறான். இவன் ஏழு வள்ளல்களில் ஒருவன் ஆவான்.

வேள்பாரி: பாரியைக் கபிலர், மிளைக்கந்தன், பெருஞ்சித்திரனார், நக்கீரர் ஆகியோர் பாடியுள்ளனர். நக்கீரர், பாரி குறித்து இறந்த காலத்தில் பாடியுள்ளார். கபிலர் பாரி குறித்து மிக அதிகப் பாடல்களைப் பாடியவர். பாரி குறித்து, புறம்: 105-120, 236;  நற்றிணை: 253; பதிற்றுப்பத்தில் 61 ஆகிய பாடல்களில் கபிலர் பாடியுள்ளார். பாரி இறந்த பின், பாரியின் மகளிர்களோடு பறம்பு மலையை வாழ்த்தி வருத்தத்தோடு வெளியேறுகிறார் கபிலர். 

பாரியின் பறம்பு மலை மூங்கில், நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, மலைத்தேன் ஆகிய நான்கு உணவுப் பொருட்களை விளைவிக்காமல் தரக்கூடியது; பாரியின் பறம்பு நாடு 300 ஊர்களைக் கொண்டது; பாரி மகளிருடைய தந்தை நாடு இன்று வளம் இழந்து அங்குள்ள குளங்கள் பாதுகாக்கப்படாமல் பாழ்படுகிறது; பாரியின் நாட்டில் வரகு, தினை, எள், அவரை முதலியன விளைந்தன; விருந்தினர்க்கு மதுவும், கடலையை நெய்யிலே பொரித்து அதனுடன் சோற்றையும் உண்ணத் தருவர் பறம்பு மக்கள்; மலை நாட்டுத் தலைவனான பாரி பெரிய வள்ளல்; பாரியும் நானும் உளமொத்த நெடுங்கால நண்பர்கள்; இவை, பாரிகுறித்தும், பாரியின் பறம்புமலை குறித்தும் கபிலர் பாடியவை. 

 கிமு 3ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பேரரசுக்கொள்கையின் காரணமாகத் திறை வாங்குவதைத் தவிர்த்து, மூவேந்தர்கள் சிறுகுறு மன்னர்களை வென்று அவர்களின் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டனர். இக்காலகட்டத்தில்தான் பாரி, ஓரி, அதியமான் போன்ற பல சிறுகுறு மன்னர்களை வென்று அவர்களின் ஆட்சிப் பரப்புக்களை மூவேந்தர்கள் எடுத்துக் கொண்டனர். பாரி ஏழு வள்ளல்களிலொருவன் என்கிறார் பெருஞ்சித்திரனார்(பு-158). எவ்வி-1 இன் வழி வந்தவன் தான் பாரி. எவ்வி-1 என்பவனைப் பரணரும் பாடியுள்ளார். பறம்புப் போரின் காலம் ஏறக்குறைய கி.மு. 215 எனலாம். பாரி ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆண்டதாகக் கொண்டால் பாரியின் காலம் கிட்டத்தட்ட கி.மு. 245-215 ஆகும். ஆதலால் பாரியும், கபிலரும், பாரி மகளிரும், பாரியைப் பாடிய மிளைக்கந்தனும் ஐந்தாம் காலகட்டம் ஆகின்றனர்.

கோப்பெரும் பேகன்: பேகனைப் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருஞ்சித்திரனார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். மயிலுக்குப் போர்வை தந்தவன் பேகன் எனவும், அவனது கொடை மறுபிறப்புக்காக அல்ல எனவும், பிறரது வறுமையைப் போக்கவே எனவும், அவன் கொடை வழங்குவதில் மடமை உடையவன் ஆயினும் போரில் தனக்குத் தகுதி இல்லாதவருடன் போரிட மாட்டான் எனவும் பெரும்புலவர் பரணர் பாடுகிறார்(பு: 141,142). போர் வன்மையும் கொடை வண்மையும் உடையவன் பேகன் என்கிறார் பெரும்புகழ் கபிலர்(பு-143).

 பேகன் தனது மனைவியான கண்ணகியின்  துயரைத் துடைக்க வேண்டும் எனப் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய நால்வரும் பேகனை வேண்டிப் பாடியுள்ளனர்(பு-144,145,146,147). பேகனைப் பாடிய பரணர் 4ஆம் காலகட்டம், கபிலர் 5ஆம் காலகட்டம், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய இருவரும் 6ஆம் காலகட்டம். ஆகவே பேகன் இடைப்பட்ட 5ஆம் காலகட்டம் ஆகிறான். ஆகவே கடையேழு வள்ளல்களில் ஐந்தாம் காலகட்டத்தில் ஐந்து வள்ளல்களும், ஆறாம் காலகட்டத்தில் காரி, எழினி ஆகிய இரு வள்ளல்களும் வாழ்ந்துள்ளனர். ஆகவே கடையேழு வள்ளல்கள் எழுவர் என்பதை சங்க இலக்கியம் உறுதி செய்கிறது.

பார்வை: 1.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சூலை-2018, பக்: 213-215.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்