Manu Needhi Manuscript Manetho Menes Min Manithan Manethon Egyptian Tamil didn't write like this. All this changes took place later.

ஏன் பிராமணீயத்தை எதிற்கின்றோம்......👇
Athimoolam Athimanithan:

ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் ! 
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்....?

800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.

ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?

அவை என்னவென்று பார்ப்போம்...

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், 
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் 
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை
பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல், 
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை  வெளியிடப்பட்டது
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது 

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் 
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும்.  
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!!
சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். 
அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த 
இந்து சட்டத்தை 1835 ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற 
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது, 
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது, 
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,

இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை, அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

(ஆதாரம்:தினமணி 25-2-2007)

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்