பசுபதியின் கேள்வி தமிழி ப்ராமி சிந்துவெளி குறியீடுகள் சுமேரியா மிசிரம் தமிழர் தமிழ்.

பசுபதியின் கேள்வி=
அப்படி என்றால் கிமு 3000த்தில் கிமு5000 த்தில் எகிப்து சுமேரியாவில் ஊர் ஊருக் நிப்பூர் சிப்பார் எல்கி சுல்கி தம்மூஸ் தமுழி துமுழி மார்துக் மார்து ஏலம் ஏரிடு அக்காடு போன்ற ஊர்கள் எல்லாம் தமிழில் எழுதவில்லையா பேசவில்லையா? அவர்களுடன் நாம் வியாபாரமும் செய்தோமே? நரம் சின் என்ற நரசிம்மன் தெய்வம் ராஜா சுமேரியாவில் இருந்ததே. கிமு 3000த்திலேயே அவர்கள் க்யூனிஃபார்ம் என்ற ஆப்பெழுத்துகளில் எழுதினார்களே? அதுதானே இன்றைய ஆங்கிலம் இந்தி சமத்கிருதத்தின் முன்னோடி?

தமிழின் காலம் கிமு 800 என்பது நகைப்புக்குறியது.

பண்டைய குறியீடுகள் பழந்தமிழர் எழுத்து, கோண்ட் கோண்டுவானா கோயா குய் பழங்குடியினர் எழுத்து, ஊர் ஊருக் சென்று திரும்பி வந்த தமிழர் என்ஆர்ஐ தமிழர் எழுத்து அல்ல.

என்ஆர்ஐ தமிழர் எழுத்து என்பது சமத்கிருதத்துடன் கலந்த சுமேரிய எகிப்து மிசிர எழுத்து.

எழுத்தாளர் பதில்=
பொருந்தலில் கிடைத்துள்ள இரண்டாம் நிலை தமிழி எழுத்தை அமெரிக்க ஆய்வகம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என உறுதி செய்துள்ளது. முதல் தமிழி எழுத்து 3 நூற்றாண்டு முந்தைய துறை எனக்கொண்டு தமிழியின் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என உறுதி செய்ய பட்டுள்ளது. அறிவியல் அடிப்படையில் உறுதி செய்துள்ள இதனையே பெரும்பாலான இந்திய ஆய்வாளர்கள் ஏற்றுகொள்ள வில்லை. இன்றும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு அசோகன் பிராமி தான் இந்தியா வில் தோன்றிய முதல் எழுத்து என்கின்றனர். முதலில் அதை மாற்றுங்கள். பின் இதை பேசலாம். நன்றி.

ஆராய்ச்சியாளரின் கட்டுரை=
பண்டைய குறியீடுகளும் தமிழ் எழுத்துக்களே

ஆதிச்சநல்லூர், கொற்கை, கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வு முடிவுகளின்படி 'தமிழி' எழுத்தின் காலம் கி.மு 800 ஆகும். ஆனால் இந்தத் தமிழி எழுத்துக்கு முன்னரே தமிழர்கள் குறியீடுகளை (GRAFFITI) எழுத்தாகப் பயன்படுத்தி வந்துள்ளுனர். தமிழகத்தின் பண்டைய ஓவிய வரைவுகளில், மட்பாண் டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாகத் தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட 'குறியீடுகள்' இடம்பெற்றுள்ளன. இந்தத் தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, யப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாகச் சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. இந்தப் பண்டைய நாகரிகங்கள் கி.மு.3000 முதல் கி.மு. 200 வரையான காலத்தைச் சார்ந்தவை. பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தது என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு சான்றாகிறது.

அகழாய்வுகளின் அடி ஆழத்தில் குறியீடுகளே பெருமளவு கிடைக்கிறது. அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாகவும், தமிழி எழுத்துகள் இடையே இக்குறியீடுகள் இடம்பெறும் தன்மை காரணமாகவும், தமிழி எழுத்தைப் பயன்படுத்துவதற்கு முன் தமிழர்கள் குறியீடுகளை எழுத்தாகப் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இக்குறியீடுகள் கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழி வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், தமிழி வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் கி.மு 1000 க்கு முன்பிருந்தே பழந்தமிழ் மக்களின் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் முனைவர் கா.இராசன். சான்றாக கொடுமணலில் இதுவரை கிடைத்த 500க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும், கிட்டத்தட்ட 600 குறியீடு பொறிப்புகளும் மேற்கண்ட இராசன் அவர்களின் ஆய்வு முடிவை உறுதி செய்கின்றன.

மயிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் (SEMBIAN KANDIYUR) என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடாலி ஒன்று கிடைத்துள்ளது. அதில் நான்கு குறியீடுகள் உள்ளன. அந்த நான்கு குறியீடுகளும் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒப்புமை உடையனவாக உள்ளன. தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், அக்குறியீடுகளை நன்கு ஆய்வு செய்து அதன் காலம் கி.மு.1500 முதல் கி.மு.2000 என நிர்ணயித்துள்ளார். இந்தக் கல்கோடாலி தமிழகப் பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது எனவும், அதனால் இந்தக் கல்கோடாலி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும், மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன் படுத்தியவர்களே எனவும் அவர் கூறுகிறார். 

மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில், கி.மு.1500வாக்கில், தமிழர்கள், குறியீடுகளைக் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வகை எழுத்தாகப் பயன் படுத்தத் தொடங்கினர் எனவும், சில நூற்றாண்டுகளுக்குப் பின், கி.மு.1000 வாக்கில் அக்குறியீடுகளைப் பயன்படுத்தும் நிலை, பரவலாகத் தமிழகமெங்கும் பரவியிருந்துள்ளது எனவும் முடிவு செய்யலாம். ஆகவே தமிழகத்தில் கிடைக்கும் பண்டைய குறியீடுகள் தமிழ் எழுத்துக்களே ஆகும்.

பார்வை: பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்கம்: 85-91

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்