பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்
50 ஆனந்த மாலை நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவினாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்ப தாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன். திருவாசகம்-ஆனந்த மாலை பண் : பாடல் எண் : 1 மின்னே ரனைய பூங்கழல்க ளடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே. பொழிப்புரை : இறைவனே! உன் திருவடியை அடைந்த அன்பர்கள் இவ்வுலக மாயையைக் கடந்தார்கள். தேவர்கள் எல்லாம் மலர்களால் அருச்சித்து வணங்கி நின்றார்கள். அப்படி இருக்கும் போது, கல்லை நிகர்த்த மனத்தை உடையவனாய்க் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை அடையும் வகையைச் சொல்...

Comments
Post a Comment