தமிழர் எதிர்காலம்
நல்ல எண்ணம். நல்ல பதிவு. நவம்பர் 1ஐ விட சிறந்த நாள் பாருங்கள். ஓரை பார்த்து நல்ல நேரம் பார்த்து செய்யும் ஓரையன் ஓரியன் தமிழன் சிவன் மக்கள். ஓரியனை அடையாளமாக கொண்ட இல்லுமினாட்டி மீண்டும் புராண கால தமிழன் போல உலகாள நினைக்கிறார்கள். அதனாலேயே சிவன் சின்னமான சிவன் முருகன் பிறந்த விண்மீன் குழுமங்களை பிரமிடு கட்டிய தமிழன் நினைவுக்காக ஓரையன் நட்சத்திர கூட்டத்தை பார்க்குமாறே பிரமிடுகளை மாயன் மயன் என்ற தமிழ் விஸ்வகர்மா பூணுல் போட்ட ஆச்சாரியார் சாதி ப்ராம்மணர் ஆன கடவுள் நிலை அடைந்த ப்ரம்ம நிலை பெற்ற பூசாரி ஆசாரி தமிழர்கள் போகர் போன்ற சித்தர்கள் வட தென் அமெரிக்காவிலும் தென் கிழக்கு ஆசியாவில் சுமத்ரா ஜாவா பாலி பாழி பாழீய் வாலி போன்ற நாடகளிலும் ஒரே மாதிரி பிரமிடுகள் கட்டி அவற்றை ராஜா மந்திரி அமைச்சர் போன்ற ராஜ குடும்ப கல்லறைகளாகவும் விலைமதிப்பு மிக்க பொருள் சேமிப்புக் கிடங்குகளாகவும் வைத்திருந்தனர்.
இந்த மாயன் மயன் தமிழர்களே புஷ்பக விமானம் செய்தவர்கள். இந்த விமானத்தை இம்போர்ட் இறக்குமதி செய்த தமிழன் குபேரன் புலத்தியர் தமிழ் மகரிஷியின் முதல் ப்ராம்மண மனைவியின் வெள்ளைத் தோல் மகன். ஸ்ரீலங்கா ஆண்ட திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் தலைநகராக கொண்டு அளகாபுரி ஆண்ட புலையர் மகன் குபேரன்.
இந்த புலத்தியர் புலையர் மகரிசிக்கும் அகத்தியர் மகரிசிக்கும் வந்த கொள்கைப் போரே ராமாயணம் தமிழர் வேளிர் ராமன் கதை.
அகத்தியர் இதனால்தான் ராமனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் எழுதிக் கொடுத்தார் ராவணனை அழிக்க.
இந்த புலத்தியர் புலையர் மகரிசி புலால் உண்ணலாம் மாட்டுக்கறி பன்றிக்கறி தின்னலாம் என்ற கொள்கை உடையவர். சிவ பக்தர்.
ஆனால் அகத்தியர் போகர் புலிப்பாணி பதஞ்சலி அத்ரி திருவள்ளுவர் காலத்திலேயே மாட்டுக்கறி பன்றிக்கறி தின்னக்கூடாது தின்னால் பலவித அபூர்வ நோய்கள் வரும் அதை சித்த மருத்துவத்தால் கூட குணப்படுத்த இயலாது என்று தெரிந்தே புலால் உண்ணாதே புலால் மறுத்தல் கள் உண்ணாமை என்று அறன் வலியுறுத்தினர்.
ராவணன் தமிழன் புலத்தியர் புலையர் மகரிசியின் இரண்டாம் மனைவி கைகேசி மகன் இதை எல்லாம் வேள் வேளிர் சொல் கேட்கவில்லை.
கள் உண்டான் புலால் உண்டான் மாட்டுக்கறி பன்றிக்கறி தின்றான் இதனால் அகம்பாவம் ஆணவம் கொண்டு தேவ லோகத்தில் தேவேந்திர குல வேளாளர் வேளிர் லோகத்தில் கருப்பு தமிழ் இந்திரன் ஆண்ட ப்ரஹ்ம தேசமான பர்மாவில் சென்று ரம்பை ஊர்வசி போன்ற சொந்தக்கார உறவுமுறை பெண்களை காம இச்சையால் கற்பழித்தான். குபேரனிடம் இருந்து புஷ்பக விமானத்தை திருடினான் குபேரன் ஆண்ட அளகாபுரி என்ற ஸ்ரீவைகுண்டம் முதல் இலங்கை வரை நீண்ட தமிழர் நாட்டை சகோதரன் குபேரனிடமிருந்து அபகரித்தான்.
சிவனிடம் வரம் வாங்கி சிவனையே சோதனை செய்தான். இதெல்லாம் பொறுக்க முடியாமல்தான் ராவணனை கொன்று அழித்து ராவணன் ஆட்சியை அவன் தம்பி நல்லவன் விபீஷணன் இடம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ராமனுக்கு அகத்தியருக்கு.
தமிழர் வழக்கம் போல போரில் தோற்ற புலத்தியர் மகரிசி மற்றும் சம்பு மகரிசி மக்கள் புலையர் மற்றும் சாம்பவர் ஆக்கப்பட்டார்கள்.
இவர்களே முஸ்லிம் மதம் மாறி அங்கு சென்று தமிழர் புலால் ஹலால் ஆனது.
மீண்டும் அதே காலநிலைதான் இன்றைய தமிழகத்திலும்.
வட இந்திய தமிழர்கள் மிக குறிப்பாக கன்னட ஆந்திர மராட்டிய வேளிர் வேள் வேளீர் சாதிகளான யாதவர் பேலாலர் வேளாளர் பட்டிதார் பட்டேல் பாட்டில் சௌகான் என்ற மராட்டிய சோழியர் சோழர் யாதவ் கோனார் பாலர் பால் கோபாலர் என்ற உபி மபி பிஹார் வங்காளம் ஒரியா தமிழர் ஷெட்டி ஷெட்டர் சேட் சேட்டுமார் சேதி ராயர் சேட்ஜி என்ற செட்டிமார் மார்வாடிகள் தமிழகத்தை மெள்ள மெள்ள கைப்பற்றுவர்.
இது நடக்கும். தமிழர் நம் அடையாளத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். முடியும்.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கட்டுரையாளர் கணியன் பாலன் கருத்து=
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கட்டுரையாளர் கணியன் பாலன் கருத்து=
"தமிழ் நாடு அரசு" விழா (நவம்பர்-1)
3000 ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழகம், ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் விளைவாக இந்தியாவின் ஓர் அங்கமாக 1947இல் சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்துக்குப்பின் மொழிவழி மாநிலம் என்ற அடிப்படையில், தமிழ் மொழிக்கான மாநிலமாக, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் சென்னை மாநிலம் உருவானது. சென்னை மாநிலம் 1968இல் தமிழ் நாடு என்ற முறையான பெயரைப் பெற்றது. இந்திய அரசியல் சட்டப்படி, இந்தியா என்பது நடுவண் அரசு, மாநில அரசு ஆகிய இரு அரசுகளை உடைய, இரட்டை ஆட்சி முறையைக் கொண்ட ஓர் ஒன்றியமாகும். அதாவது இந்தியா என்பது தமிழ்நாடு போன்ற பல மொழிவழி நாடுகளும் பாண்டிச்சேரி போன்ற பல யூனியன் பிரதேசங்களும் இணைந்து உருவான ஓர் ஒன்றியம் ஆகும். ஆகவே தமிழக மக்கள் ஒரு தனி தேசிய இனம் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசில் இணைந்துள்ள மாநில அரசுதான் 'தமிழ்நாடு' ஆகும். தமிழ் நாடு உருவாகி(1956) 62 வருடங்கள் முடிந்து வருகிற நவம்பர் 1 அன்று 63ஆம் வருடம் தொடங்குகிறது.
வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக்கொண்ட தனி அரசையும், வரையறுக்கப்பட்ட எல்லைகளைக்கொண்ட தனி நிலப்பரப்பையும், நீண்ட நெடியப் புகழ்மிக்க வரலாற்றையும், சிறப்புமிக்கத் தனிப் பண்பாட்டையும், சீர்மிகு பழம்பெருமைமிக்க மரபையும், வளமிக்கத் தமிழ்மொழியையும் உடைய நமது தமிழ் நாடு உருவாகிய நாளான நவம்பர் 1 என்பது தமிழக மக்கள் அனைவராலும் வருடா வருடம் கொண்டாடப்பட வேண்டிய, நினைவூட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய நாளாகும். இந்திய அரசு சுதந்திரம் அடைந்த நாளும், இந்திய அரசு குடியரசு ஆன நாளும் கொண்டாடப் படுவதற்கான அதே அடிப்படையில்தான் தமிழ் நாடு அரசு உருவான நாளும் கொண்டாடப்பட வேண்டும். கர்நாடக மக்களும், அதன் அரசும் கர்நாடக அரசு உருவான நாளை விடுமுறை நாளாக ஆக்கி, அதனை மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடி அவர்களின் ஒற்றுமையை வலிமைப்படுத்தி வருகின்றனர். அவ்விழா ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது. கேரளம் போன்ற பிற மாநிலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே, இந்நாளைத் தமிழக அரசும், தமிழக மக்களும் ஒரு பெருவிழாவாகக் கொண்டாடித் தமிழக மக்களை ஒன்றிணைத்து, வலிமைப்படுத்த வேண்டும்.
காவிரிப் பிரச்சினை, கன்னட மொழிப் பாதுகாப்பு போன்ற கன்னட தேசம் சார்ந்த பிரச்சினைகளில் கன்னடர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஆனால் தமிழ் தேசம் சார்ந்த நியாயமான பிரச்சினைகளில் கூட தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற கருத்து இருக்கிறது. அது உண்மையே. ஆனால் அதற்கான அறிவியல் காரணங்களைக் கண்டுணர்ந்து அதனை நீக்குவதன் மூலமே தமிழர்களிடம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியும். கிரேக்கர்கள் கி.மு. 776 வாக்கிலேயே, தாங்கள் கிரேக்கர்கள் என அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்களுக்கிடையே ஒரு வலுவான ஒற்றுமையைக் கொண்டு வரவும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். இன்றைய ஒலிம்பிக்போட்டிகள்கூட உலக நாடுகளிடையே ஒற்றுமையைக் கொண்டுவரவே நடத்தப்படுகிறது. ஆக விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவரும். ஆனால் தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் அனைத்தும் மதம் சாதி சார்ந்த விழாக்களாக ஆக்கப்பட்டுள்ளன. அதனால் அவ்விழாக்கள் மக்களிடையே ஒற்றுமைக்குப் பதில் வேற்றுமைகளையே கொண்டுவருகின்றன.
கன்னடர்கள் கர்நாடக அரசு உருவான நாளை மிகப்பெரும்விழாவாக கடந்த 60 வருடங்களாகக் கொண்டாடி வருவதுதான் அவர்களிடையே உள்ள ஒற்றுமைக்கு மிக முக்கியக் காரணமாகும். ஆகவே தமிழக மக்கள் தமிழ் நாடு உருவான நவம்பர் 1 ஆம் நாளை மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடுவதன் மூலம் மட்டுமே தமிழக மக்களிடையே ஓர் உறுதியான ஒற்றுமையை கொண்டுவர முடியும். இந்திய சுதந்திர தினமும், குடியரசு தினமும் கொண்டாடப்படுவது என்பது இந்திய ஒற்றுமையை வளர்த்தெடுக்கிறது. அதே அடிப்படையில் தமிழ்நாடு அரசு உருவான நாளும் கொண்டாடப்படுவது தமிழர் ஒற்றுமையை வலுப்படுத்தும். தமிழ்தேச மக்கள் அனைவருக்குமான ஒரு பொதுவிழாவாக இவ்விழா கொண்டாடப்பட வேண்டும்.
தமிழ் நாட்டு மக்கள் தங்களது மொழி, வரலாறு, பண்பாடு, கலைகள், அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் முதலிய அனைத்தும் குறித்தும், தமிழகத்தின் நிறை குறைகள் குறித்தும், அதனது பலம், பலவீனம் குறித்தும், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தமிழ்தேச மக்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகள் குறித்தும் தமிழகத்தின் வளங்கள், இழப்புகள் குறித்தும், பேச வேண்டிய, நினைவு கூற வேண்டிய, முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாளாகும். நமது தமிழகத்தின் கடந்தகால வரலாற்றைப் படித்தறிந்து, நமது நிகழ்கால நடப்புகளை கூர்ந்து நோக்கி, நமது வருங்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டவேண்டிய நாள் இந்நாளாகும். தமிழகத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தமிழகம் சார்ந்த விடயங்கள் குறித்தத் தங்களது திட்டவட்டமான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய நாள் அந்நாளாகும். பொது மக்களும், அரசும், அரசு நிறுவனங்களும், பள்ளி கல்லூரிகளும், தனியார் நிறுவனங்களும் தமிழகத்தின் வளர்ச்சியில் அதன் முன்னேற்றத்தில் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்துத் திட்டமிடவேண்டிய, முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாளாகும். தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒன்று திரண்டு தங்கள் வலிமையை, பலத்தை, ஒற்றுமையை பறைசாற்ற வேண்டிய நாள் இந்நாளாகும்.
நமது பண்டைய தமிழ்நாட்டு மக்கள் பெரும் கடலோடிகளாகவும், உலகளாவிய வணிகமேலாண்மை மிக்க மக்களாகவும் இருந்துள்ளனர். மிளகு, மஞ்சள், சந்தனம், இஞ்சி, அகில், தந்தம், முத்து, மயில்தோகை போன்ற பலவிதமான இயற்கைப்பொருட்களையும், துணிகள், பலவிதமான கல்மணிகள், இரும்பு எஃகு முதல் பிற உலோகங்களால் செய்த பொருட்கள் போன்றவற்றையும் பெருமளவில் உற்பத்தி செய்து அவைகளைத் தங்கள் சொந்தக் கப்பல்களில் உலகம் முழுவதும் கொண்டு சென்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே வணிகம் செய்து வந்தனர். 1800 ஆண்டுகளுக்கு முன் ஒரு கப்பலில் ஒரு தமிழ் வணிகன் ஒருதடவை அனுப்பிய பொருட்களின் இன்றைய மதிப்பு சுமார் ரூ 100 கோடி என கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் கூறுகிறது. இவ்வணிகத்தை உறுதிப்படுத்தும் வகையில் எகிப்து, அரேபிய வளைகுடா, தாய்லாந்து ஆகிய இடங்களில் பண்டைய 'தமிழி' எழுத்துக்கள் கிடைத்துள்ளன. பெருமளவிலான பொருள் உற்பத்தியை உறுதிப்படுத்தும் வகையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற "ஆதிச்சநல்லூர்" நகரம் இன்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்பே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பதை அங்கு நடத்தப்பட்ட அகழாய்வு உறுதி செய்துள்ளது. கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு, 2200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பெரு நகரங்கள் இருந்தன என்பதை உறுதி செய்கிறது. வேளாண்மையிலும் தமிழர்கள் உயர்நிலையில் இருந்தனர். நீர்வளத்தைப் பெருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை போன்ற அணைகளும், பலவிதமான அணைக்கட்டுகளும், நூற்றுக்கணக்கான ஏரிகளும், குளம் குட்டைகளும் உருவாக்கப்பட்டன.
தங்களது உலகளாவிய வணிகத்தைப் பாதுகாக்க, தமிழரசுகள் அன்று பெரும் கடற்படைகளைக்கொண்டிருந்தன; அன்று தமிழக அரசுகளிடையே மிக நீண்ட காலமாக ஒரு ஐக்கிய கூட்டணி இருந்து வந்தது. கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டும்,, சங்கப்புலவர் மாமூலனாரின் பாடலும் இந்த ஐக்கிய கூட்டணியை உறுதி செய்கின்றன. இந்த ஐக்கிய கூட்டணியின் பெரும் கடற்படைகொண்டு தக்காண அரசுகளையும், அதன் துறைமுக நகரங்களையும், இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரை வணிகத்தையும் இந்தோனேசிய வரையான கிழக்காசியத் தீவுகள் வணிகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தமிழரசுகள் வைத்திருந்தன. மேற்கே பாரசீக வளைகுடா முதல் செங்கடல் வரையான நாடுகளோடும் கிரேக்க-உரோம நாடுகளோடும், கிழக்கே சீனா வரையிலும் தங்கள் சொந்தக் கப்பல்களில் பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் வணிகம் செய்து வந்தனர். அன்று வட இந்தியர்களிடம் கடலோடும் திறனோ, கடற்படைகளோ, கடல்வணிகமோ இருக்கவில்லை. தமிழர்களிடம் மட்டுமே அவை இருந்தன.
கடல்வணிகத்தால், பழந்தமிழகம் செல்வவளமும், பொருள் வளமும் மிக்கத், தனித்துவமான பண்பாடும் நாகரிகமும் கொண்ட நாடாக இருந்தது. அன்று சாதாரண மக்கள் முதல் உயர் வேளீர்வரை அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அறிவியல் மனப்பான்மையும், மதச் சார்பின்மையும் கொண்டவர்களாகவும், சாதிகளற்ற சமூகத்தைக் கொண்டவர்களாகவும் அறத்தோடு கூடிய இன்ப வாழ்வை வாழ்பவர் களாகவும் அவர்கள் இருந்தனர். அவர்களிடம் நவீனச் சிந்தனையின் கூறுகள் பல இருந்தன. கிரேக்க, உரோம, சீன நாகரிகங்களுக்கு இணையான பெருமைமிக்க வாழ்வை அவர்கள் வாழ்ந்தனர் என்பதோடு இவ்வுலகுக்கு உன்னதமான விழுமியங்கள் பலவற்றை அவர்கள் வழங்கினர். இவைகளை கீழடி அகழாய்வு உறுதி செய்கிறது.
ஆனால் இவ்வளவு பழஞ்சிறப்புகளை உடைய நமது மக்கள் இன்று தங்களது அடையாளங்களை இழந்து நிற்கின்றனர். அதனால் காவிரி பிரச்சினை, முல்லை-பெரியார் பிரச்சினை, பாலாற்றுப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, தமிழ்மொழி தமிழகத்தின் கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக இல்லாத பிரச்சினை, கூடங்குளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சாதி மதம் சார்ந்த பிரச்சினைகள் என அளவற்ற பிரச்சினைகளை நமது மக்கள் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவைகளை தமிழக மக்கள் எதிர்கொண்டு, தங்களது வாழ்வை வளமும் நிறைவும் கொண்டதாகவும் சமத்துவமும், சமூக நீதியும் கொண்டதாகவும் ஆக்கவேண்டும். அதற்கு தமிழக மக்கள் தங்களது அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டியதும், சாதி மத வேற்றுமைகளைக் களைந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதும் அவசியமாகும்.
புகழ்பெற்ற செவ்விலக்கியங்களை உடைய தமிழ் மொழியும், 3000 ஆண்டுகால நீண்ட நெடிய வரலாறும், தனித்துவமிக்க பண்பாடும், இசை நாட்டியம் போன்ற கலைகளும், சிறப்புமிக்க விழுமியங்களும், சீர்மிகுமரபுகளும், அறிவியல் அடிப்படை கொண்ட தொழில்நுட்பங்களும் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும், சாதிகளற்ற சமூகமும், மதச்சார்பற்ற தன்மையும்தான் நமது தமிழகத்தின் அடையாளங்களாகும். நமது இந்த அடையாளங்களை மீட்டெடுக்கவும், சாதிகளற்ற, மத ஒற்றுமைமிக்க, சமத்துவமும், சமூக நீதியும் கொண்ட அனைத்து மக்களும் அனைத்தும் பெறத்தக்க ஒரு நவீன, முன்னேறிய, உயர்வளர்ச்சி பெற்ற தமிழகத்தை உருவாக்கவும் சபதமேற்று நவம்பர் முதல் நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து அந்நாளைத் தமிழ் நாடு அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுப்போமாக!
-கணியன்பாலன். .
Comments
Post a Comment