கி.மு. 2000 கீழடி ஆதிச்சநல்லூர் தமிழர் சுமேரியர் அசிரியர் மிசிரம் எகிப்து கலப்பு தமிழரை விட முட்டாள்களா? ஏன் நிறைய எழுதவில்லை?
பசுபதி கேள்வி=
கி.மு. 2000 கீழடி ஆதிச்சநல்லூர் தமிழர் சுமேரியர் அசிரியர் மிசிரம் எகிப்து கலப்பு தமிழரை விட முட்டாள்களா? ஏன் நிறைய எழுதவில்லை?
ஆப்கன் ஆண்ட தமிழர் கந்தஹார் கந்தன் விஹாரை தமிழ்நாட்டு தமிழரோடு கொண்ட உறவென்ன? பித்தளை கோட்டை கொண்டிருந்த இருங்கோவேளின் 49 தலைமுறை மூதாதையர் குஜராத் என்ற சிந்து சமவெளி பகுதியில் தமிழராக வாழ்ந்தனரா இல்லை வட நாட்டு ப்ராம்மணருடன் கலந்து கலப்பு ரகமாக வாழ்ந்தனரா? ஊர் ஊருக் ஏலம் ஏரிடு அக்காடு 3000 கிமு ஆணட தமிழர்க்கும் தமிழ்நாட்டுத் தமிழர்க்கும் என்ன உறவு? கி.மு. 800க்கு மேல் தமிழ்நாட்டில் வரலாறு இல்லை. கி.மு. 2000 வரை கீழடி ஆதிச்சநல்லூர் செல்கிறது. ஆனால் மௌனப் படமாக உள்ளது. ஏன் சுமேரியா போல கி.மு. 3000 கி.மு. 3500 வரை எழுத்துக்கள் முத்திரைகள் கிடைக்கவில்லை? அப்படியென்றால் கிமு 2000 வரை எடுக்கப்பட்ட கீழடியில் எதில் எழுதினார்கள் பேசினார்கள்?
கிமு 3000 கிமு 5000 வரை மிசிரம் தமிழர் எகிப்தில் பேபிரஸ் என்ற பேப்பரில் சித்திரம் எழுதினர். சுமேரியர் அசிரியர் களிமண் ஏடுகளில் ஆப்பெழுத்து எழுதினர். சிந்து சமவெளி தமிழர் முத்திரை எழுத்து. அந்த காலங்களில் தமிழர் பனை ஓலைகளில் எழுதியிருக்கலாமோ? அல்லது தமிழ் அன்றைய காலம் சிந்து வெளி முத்திரை போன்று வளர்ச்சி அடையாமல் இருந்ததா?
தமிழர்கள் கீழடி ஆதிச்சநல்லூரில் ஏன் சுமேரியர் சிரியா மிசிரம் போல எக்கசக்கமாக ஏடுகளோ முத்திரைகளோ பேபிரஸ்களோ ஏன் எழுதி வைக்கவில்லை? இதிலிருந்து நாம் தமிழர் தமிழ்நாடு என்று சொல்லும் இடம் பரப்பு சுமேரியா அசிரியா மிசிரம் போல் கணிதம் வானவியல் ஜோதிடம் எபிக் என்ற இதிகாசங்கள் எகிப்து போல மிகப் பெரிய கற்கோவில்கள் பிரமிடுகள் தமிழகத்தில் இல்லை என்பதால் தமிழர் தமிழ்நாட்டுப் பரப்பு மிசிரம் சுமேரியம் அசிரியம் சிந்துவெளி போல முன்னேற்றம் இல்லை.
எனவே அயல்நாடு சென்று ப்ராம்மணர்களுடன கலந்த தமிழர்களே பல புதிய கண்டுபிடிப்புகள் சாதனைகள் நிகழ்த்தினர் என்ற முடிவுக்கு வர இயலுமா?
கீழடியிலும் ஆதிச்ச நல்லூரிலும் எக்கசக்கமான முத்திரைகள் களிமண் ஏடுகள் பேபிரஸ் போன்ற அறிவு சார் சொத்துக்கள் தமிழர் விட்டுச் செல்லாததும், கி.மு.2000த்திலேயே தமிழர் நிலை அ ஆ இ ஈ என்ற பேசிக்கான ஆரம்ப நிலையிலேயே இருநததாலும் ஆனால் அதே காலத்தில் சுமேரியர் அசிரியர் மிசிரம் தமிழர் நிறைய அறிவுசார் சொத்துக்களை விட்டுச் சென்றதால் அவர்கள் நாகரிகம் பழந் தமிழரைவிட மேம்பட்டதே என்ற முடிவுக்கு வர இயலுகிறது.
இந்த காரணத்தால் தான் அகத்தியர் பதஞ்சலி அத்ரி வ்யாசர் போன்றவர்கள் சமஸ்கிருதத்தில் நிறையவும் தமிழில் குறையவும் எழுதி உள்ளார்கள்.
இதே காரணத்தால்தான் தமிழர் ஆகமங்கள் கூட சமஸ்கிருதத்தில் உள்ளன.
தமிழர் தமிழ் என்ற பெருமை பேசுவதைவிட வெளிநாடு சென்று பிற சாதிகள் பிற மக்களிடம் கலந்த தமிழர் செய்த சாதனைகளை நோக்கும் போது கலப்புத் தமிழர் கலப்பினமே சாதனை செய்த இனம் என்ற முடிவுக்கு வர முடியும்.
ஆகவே தமிழர்கள் தமிழ் தமிழ் என்று கூவாமல் குஜராத்தியரோடு பஞ்சாபியரோடு மற்ற பிற இந்தியரோடு சிங்களரோடு கலந்து நல்ல புதிய சாதனைகளை படைக்க வேண்டும்.
சும்மா தமிழ் தமிழன் என்று பெருமை பேசி கூவுவது ப்ராம்மணரையும் வட இந்தியர்களையும் அவமதிப்பது தமிழ் இனத்துக்கு வீழ்ச்சியே தரும்.
கட்டுரையாளர் ஆராய்ச்சி=
தொல்காப்பியமும், வடமொழியும், வட இந்திய வணிகமும்
வட இந்திய வணிகர்கள் வணிகத்துக்காகத் தமிழகத்தில் உள்ள கொடுமணல் போன்ற பகுதிகளுக்கு வந்து பல ஆண்டுகள் தங்கி வணிகம் செய்து வந்துள்ளனர். அவ்வணிகர்களின் பெயர்கள் பிராகிருதத்தில் இருந்ததால், அவர்களைக் குறிப்பிட பிராகிருதப் பெயர்ச்சொற்களை தமிழி எழுத்துக்களில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுகாலத் தமிழி எழுத்திலேயே பிராகிருதச்சொற்கள் இருப்பதால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வட வணிகர்கள் தமிழகத்தில் வந்து தங்கி வணிகம் செய்து வந்திருக்கவேண்டும். அதன் காரணமாக பிராகிருதச்சொற்களை தமிழ் மொழிக்குரிய சொல்லாக ஆக்கி அதனைத் தமிழி எழுத்தில் எழுதப்பட்டு வந்தது. அவ்வாறு பிராகிருதப் பெயர்ச் சொற்களை தமிழ் மொழிக்குரிய சொல்லாக ஆக்குவதில் உள்ள பிரச்சினைகளை ஒழுங்கு படுத்துவதற்காகவே தொல்காப்பியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே அதற்கான இலக்கணத்தை வகுத்தார்.
முதலில் நால்வகைச் சொல்லில் வடசொல்லையும் ஒரு சொல்லாகத் தொல்காப்பியர் ஆக்கினார்(தொல்-சொல்லதிகாரம், எச்சவியல், நூற்பா எண்: 881). அதன் பின், "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீ எழுத்தோடு புணர்ந்த சொல்லா கும்மே" என்கிறார் தொல்காப்பியர். இதன்படி 'வடசொல் சொற்கள்(கிளவி) எனப்படுவது. வடசொற்களுக்குரிய சிறப்பெழுத்துக்களை நீக்கித் தமிழ் மொழிக்குரிய எழுத்தால் இயன்ற சொற்களாகும்' எனப் பொருளாகும். இங்கு வடசொல் என்பதைத் தமிழ் தவிர பிற மொழிச்சொற்கள் எனவும் கொள்ளலாம். வணிகத்தின் காரணமாக வடசொல்(பிராகிருதம்) அன்று அதிக அளவில் பயன்பாட்டில் இருந்ததால்தான் வடசொல் என்றே குறிப்பிட்டார். எழுத்து இல்லாத பழங்குடி மக்களின் சொற்களை தமிழில் எழுதுவது போன்றுதான் அன்று பிராகிருதச் சொற்கள் தமிழியில் எழுதப்பட்டன. பிராகிருத மொழிக்கு அன்று எழுத்து உருவாகவில்லை. அதனால்தான் தொல்காப்பியர் வட சொல் பற்றி மட்டுமே பேசியுள்ளார்.
சிலர் இப்பாடல் வடமொழி(பிராகிருதம்) நூலை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து எழுதுவதற்காகச் சொல்லப்பட்ட இலக்கணம் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றனர். அன்று பிராகிருதம் என்ற வட மொழிக்கு எழுத்தே இல்லை என்பதால் அதில் நூல்களும் இருக்கவில்லை. ஆனால் அன்றே தமிழில் நூல்கள் பல இருந்தன. அன்றே தமிழ் நன்கு வளர்ச்சியடைந்த மொழியாக இருந்தது. ஆனால் பிராகிருதம் ஒரு வளர்ச்சியடையாத, எழுத்து இல்லாத, நூல்கள் இல்லாத ஒரு மொழியாக இருந்தது. இவ்வாறு பிராகிருதச் சொற்கள் முதலில் தமிழில் எழுதப்படத்துவங்கி இறுதியில் பிராகிருத மொழிக்கான அசோகன் பிராமி எழுத்து தமிழியில் இருந்து உருவாகியது. கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் வடமொழி என்பது பிராகிருதம்தான் ஆகும். அன்று சமற்கிருதம் மக்கள் மொழியாகவோ, அரசு மொழியாகவோ இருக்கவில்லை. கி.பி. 2ஆம் நூற்றாண்டில்தான் சமற்கிருத மொழிக்கு அசோகன் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டது என்பதே வரலாறு.
தொல்காப்பியர் காலத்தில் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு) கிரேக்கர், எகிப்தியர், அரேபியர் போன்ற மேற்குலக வணிகர்கள் அதிக அளவில் தமிழகம் வரவில்லை. தமிழர்கள்தான் பாரசீக வளைகுடாவரை சென்று வணிகம் செய்து வந்தனர். ஆனால் தமிழகத்தில் அன்றே பிராகிருதம் மிக அதிக அளவில் புழக்கத்தில் இருந்துள்ளது என்பது அன்றே வட இந்தியாவோடு வணிகம் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதையும் வட இந்திய வணிகர்கள் அதிக அளவில் அன்றே தமிழகத்திற்கு வந்து தங்கி வணிகம் செய்தனர் என்பதையும் காட்டுகிறது. கொடுமணல் அகழாய்வு மூலம் கா. இராசன் அவர்கள் தரும் தகவல்கள் வட இந்திய வணிகர்கள் மிக அதிக அளவில் தமிழகம் வந்து தங்கியிருந்து வணிகம் செய்தனர் என்பதை மேலும் உறுதி செய்கிறது எனலாம். ஆகவே வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மிக நீண்டகாலமாக வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதையும் தமிழியிலிருந்துதான் அசோகன் பிராமி உருவாகியது என்பதையும் இச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.
பார்வை:
1.EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi, K.RAJAN, PANDYA NADU CENTRE FOR HISTORICAL RESEARCH, MADURAI-10, 2015. PAGE: 421, 422.
2.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் – 2016. பக்: 88-91, 146, 147.
Comments
Post a Comment