இலுப்பை எண்ணை. முக்கூட்டு எண்ணையில் வரும்.

இலுப்பை இனமே என் இனம்:

பணத்தை மட்டுமே மையமாக கொண்ட நம் வாழ்க்கை பயணத்தில் எத்தனயோ இழந்துவிட்டோம். திரும்பி பாருங்கள் எத்தனையோ அழிந்த கதை உண்டு, அதில் என்
மனதை பாதித்த என் இனக்கதை, திராவிடம் மட்டும் போதுமா? சுற்றுச்சூழல் அதை காப்பது நம் கடமை.

கிராமத்தில் இருப்பவனுக்கு அதிகமாக தெரிந்திருக்கும் அழிந்தது எவ்வளவு என...

ஒன்றும் அறியாத குழந்தை இலுப்பை, அதை வெட்டி வீழ்த்திய பெருமை நம்மையே சேரும்.

ஒரு ஊருக்கு குறைந்தது பத்து இலுப்பை மரமாவது இருந்திருக்கும், ஆனால் இப்பொழுது இலுப்பை மரமா அப்படி என்றால் என்ன என்று
கேட்க்கும் நிலை.

ஆம் !!!  அப்படி என்னதான் இருக்கிறது இந்த இலுப்பையில் என்று கேட்கிறீர்களா????????

- ஏழைகளின் நெய் இலுப்பை, இலுப்பை எண்ணெய் இல்லாத வீடே இல்லை ஒரு காலத்தில்.

- சப்போட்டா இனத்தை சேர்ந்த இந்த இலுப்பை
   பழம் பறவைகளின் காதலி. சப்போட்டாவை ஒத்த சுவை, விதை மட்டும் பெரியது.

- ஈசனுக்கு பிடித்த எண்ணெய், கோவிலில் விளக்கு வைப்பதற்க்கு பயன்படுத்தினர்.

- விளக்கிளிருந்து பரவும் மனம் சுவாச     பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது.

- இதன் பூக்கள் சுவை நிறைந்தது, இப்பொழுது தேனுக்காக அலையும் நாம்தான். தேனீக்களின் உணவை அழித்தோம்.
இலுப்பையின் அழிவு வெளவால் இனத்தின் அழிவிற்க்கும் தேனீக்களின் அழிவிற்க்கும் முக்கிய காரணம்.

- மிக எளிதில் வளரக்கூடியது, ஆலமரம் போல ஆயிரம் பறவைகளின் சரணாலயம்.

- இலுப்பை எண்ணைதான் இப்பொழுது cosmetic என்ற பெயரில் நம் பணத்தை கரைக்கிறது.

- ஐந்து இலுப்பை கொட்டைக்கு ஒரு பைசா மிட்டாய் வாங்கிய நினைவு இன்னும் மனதில்.

- கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.இலுப்பைப்பூ நாடி நடையையும்,உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்.

- தமிழக பழங்குடி மக்களின் தாகத்தைத் தீர்த்து வந்த இலுப்பைப்பூவின் உற்பத்தி அழிவின் முகப்பில் இருக்கிறது. தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்கள் இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு வாக்கின் கணக்கின்படி 10,000 மரங்களே உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவை தாயகமாக கொண்ட இலுப்பை இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வளர்க்க தொடங்கப்பட்டுவிட்டது.

இலுப்பை அழிவிற்க்கு முக்கிய பங்கு அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு உண்டு.

குலக்கறை , கோவில்களில் அதிகம் காணப்பட்ட இலுப்பை இப்பொழுது இல்லை.

மாற்றத்திற்க்கு ஏங்கும்

- இயற்கை ஆர்வலர், தாய்மண்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்