Bagavat Gita Aram Porul Inbam Dharmam Artham Kamam Purusham Purushartham Aswaththa Tree cutting
ஐயா உங்களைப் போல நானும் கீதை படித்து ஒன்றும் புரியவில்லை. தெளிவாக விளங்கவில்லை என்று இருந்தேன். கிட்டத்தட்ட 26 வருடங்களாக. இதையே கண்ணதாசன் தனது பாடலில் தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் (சைவ சித்தாந்தம்) அது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்று பாடினார். ஆயினும் பல்வேறு மதம் நூல்களைப் படித்து நான் குறிப்பாக திருக்குறள் ஓஷோ சைவ சித்தாந்தம் பைபிள் விவேகானந்தர் ரமணர் இளையராஜா தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் பதிகங்கள்..... இது போக பகவத் கீதை தமிழ் பொருளுரை மஹாகவி பாரதியார்.... பகவத் கீதை தமிழ் பொருளுரை கண்ணதாசன்.... பகவத் கீதை ஆங்கிலம் பொருளுரை வினோத் பவே..... அந்த நூல்களையும் படித்த பின்னர்... அவ்யக்தம். வியக்தம். அவ்யக்தம் என்ற தலைகீழாக தொங்கும் மரம். மிகப் பழமையான மரம். அதன் வேர்கள் ஆகாயத்தில் கிளைகள் பூமியில் தொங்குகின்றன. அந்த அவ்யக்தம் என்ற அஸ்வத்தம் மரத்தை ஞானம் என்ற வாளால் வெட்ட வேண்டும். அவ்வாறு வெட்டினால் நாம் பரமபதம் அடைய முடியும் என்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் தெளிவாக சாப்டர் 15 (புருஷோத்தம யோகம் )ல் விளக்கமாக சொல்லி உள்ளார். இது தான் பந்த பாசங்கள் என்ற கட்டுக்கள் தளைகள...