ஆடித்தபசு - ஜோதிட விளக்கம்
ஆடித்தபசு - ஜோதிட விளக்கம் சமஸ்கிருதத்தில் ஆடிமாதம் என்பதை ஆஷாட மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் இந்தியாவின் தெற்கு பகுதியான சங்கரன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழா ஆடித்தபசு ஆகும். சமஸ்கிருதத்தில் தபஸ் என்றால் தவம் என பொருள். ஆஷாட நட்சத்திர மண்டலத்தை நோக்கி கோமதி அம்மன் தவமிருந்த காரணத்தால் இந்த பண்டிகை பெயர் ஆடித்தபசு. இந்த விழா சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை போதிக்கிறது. இதை ஜோதிட ரீதியில் பார்ப்போம். முதலில் சிவனும் நாராயணனும் ஒருவரே என்று தவமிருந்த பார்வதிக்கு ஏன் கோமதி என பெயர் வந்திருக்கிறது என காணலாம். கோ என்றால் பசு, மத்யம் என்றால் நடுவில், ஆதாவது பசுகளின் மத்தியில் அமர்ந்து தவமிருந்த அம்மன் என்பதால் அவருக்கு கோமதி என பெயர். இதை ஜோதிட ரீதியாக காண, பசுவின் மடிகளை போன்ற தோற்றம் கொண்டது பூச நட்சத்திரம் ஆகும், அங்கு அமர்ந்த அம்மனுக்கு கோமதி என பெயர் வந்தது. இந்த விழா சரியாக ஆடி சதுர்த்தியில் தொடங்கி சதுர்ததசி திதி வரை உள்ள பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆதாவது ஆடி பூரத்தில் தொடங்கி ஆடி பௌர்ணமிக்கு முதல்நாள் முடிகிறது. இந்த பத்து நாட்களும் அம...